ஆரம்பக்
காலத்தில் மனிதன் வாழ்வை மேம்படுத்த பல கருவிகளைக் கண்டுபிடித்தான். பிற்காலத்தில்
பல ஆய்வுகளை நிகழ்த்தி பலவற்றைக் கண்டுபிடித்தான். அத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு
வழங்கப்படும் உலகின் உயர்ந்த பரிசே நோபல் பரிசு.
1866-ஆம் ஆண்டு ஆல்பிரட் நோபல்
என்ற ஸ்வீடன் நாட்டு அறிஞர் ‘டைனமைட்டிக்’என்ற
வெடிமருந்தைக் கண்டுபிடித்தார். இக்கண்டு பிடிப்பு மூலம் அவர் அளவற்ற செல்வம்
சேர்த்தார். 1896-ல் அவர் இறந்த பின்னர் அவருடைய உயிலை
வாசிக்கும் போது 150 கோடிரூபாய் சொத்தை
நோபல் பரிசுக்காக எழுதி வைத்திருந்தார்.
1901-ஆம் ஆண்டு முதல் நோபல்
பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 500-க்கும்
அதிகமான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. 1968-ம் ஆண்டு
வரை இயற்பியல், வேதியியல்,மருத்துவம், இலக்கியம், சமாதானம் ஆகிய
துறைகளுக்காக வழங்கப்பட்டன. 1968-ல் ஸ்வீடன்
நாட்டு மத்திய வங்கி பொருளாதாரத்திற்கென நோபல் பரிசை வழங்குவதாக அறிவித்தது.1969-ம் ஆண்டு
முதல் பொருளாதாரத் துறைக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
நோபல்
பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்க ஆண்டு தோறும் 5 பேர் கொண்ட
பொறுப்பாளர் குழு அமைக்கப்படுகிறது. அக்குழுவின் தலைவரை ஸ்வீடன் அரசு
நியமிக்கிறது.
 |
நோபல்பரிசு மெடல் |
நோபல் பரிசு கமிட்டி
ஒவ்வொரு ஆண்டும், மருத்துவம், வேதியியல், இயற்பியல், பொருளாதாரம், இலக்கியம், உலக அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களை தேர்ந்து
எடுத்து நோபல் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த ஆண்டில் வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட
துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளன.
உலக அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர்களை தேர்வு
செய்வதற்கான சிபாரிசு பட்டியலில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், காங்கோ நாட்டைச் சேர்ந்த
குழந்தைகள் நல மருத்துவர் டெனிஸ் முக்வேஜே உள்ளிட்ட 278 பேரின் பெயர்கள்
இடம்பெற்று இருந்தன. எனினும், இந்த முழுமையான பட்டியல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு
இருந்தது.
இந்த நிலையில் 2014-ம் ஆண்டு உலக அமைதிக்கான
நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரான 60 வயது கைலாஷ்
சத்யார்த்திக்கும், 17 வயது பாகிஸ்தானிய சிறுமி மலாலாவுக்கும் கூட்டாக வழங்குவதாக
நேற்று அறிவிக்கப்பட்டது.
இது பற்றிய அறிவிப்பை நோபல் பரிசு கமிட்டியின்
தலைவர் தோர்போஜெர்ன் ஜக்லாண்ட் நார்வேயில் உள்ள ஆஸ்லோ நகரில் வெளியிட்டார்.
நோபல் பரிசு
பெற்றவர்களுக்கு வழங்கப்படும் மொத்த பரிசுத் தொகை 6 கோடி 60 லட்ச ரூபாய் (1.1 மில்லியன் அமெரிக்க
டாலர்) ஆகும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டால், இந்த பரிசுத் தொகை
பகிர்ந்து அளிக்கப்படும். எனவே அமைதிக்காக நோபல் பரிசு கைலாஷ் சத்யார்த்திக்கும், மலாலாவுக்கும் பகிர்ந்து
வழங்கப்படும்.
இந்த பரிசு வருகிற டிசம்பர் மாதம் 10-ந் தேதி ஆஸ்லோ நகரில்
நடைபெறும் விழாவில் இருவருக்கும் வழங்கப்படும்.
கைலாஷ் சத்யார்த்தி
வாழ்க்கை குறிப்பு
கைலாஷ் சத்யார்த்தி 1954–ம் ஆண்டு ஜனவரி மாதம் 11–ந் தேதி மத்திய
பிரதேச மாநிலம் விதிஷா நகரில் பிறந்தார். எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக பணியாற்றி
வந்த இவர் குழந்தைகளுக்கு சேவையாற்றுவதற்காக பதவியை துறந்தார்.
1980–ம் ஆண்டு ருக்மார்க் (தற்போது குட்வீவ்) என்னும்
அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு குழந்தை தொழிலாளர்களால் தயாரிக்கப்படும்
பொருட்களை நுகர்வோர் புறக்கணிக்க வேண்டும் என்ற பிரசாரத்தை மேற்கொண்டது. இது பற்றி
அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில்
தீவிரமாக ஈடுபடத் தொடங்கியது.
அதன் பின்னர் 1983–ம் ஆண்டு குழந்தை
பருவத்தை காக்கும் இயக்கம் (பச்பன் பச்சோ அந்தோலன்) என்னும் தன்னார்வ தொண்டு
நிறுவனத்தை கைலாஷ் சத்யார்த்தி தொடங்கினார். குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களது
பெற்றோரிடம் ஒப்படைத்தது, அவர்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத் தந்து கல்வி பயில ஏற்பாடு
செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது இந்த அமைப்பின் முக்கிய பணியாகும்.
80 ஆயிரம் குழந்தைகள் மீட்பு
இந்தியாவில் இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
குழந்தைகளை இதுபோல் மீட்டு அவர்களை கல்வி கற்க வைத்த பெருமையும் கைலாஷ்
சத்யார்த்திக்கு உண்டு. இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டு அமைப்புகளுடன்
இணைந்து உலக நாடுகளில் குழந்தை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வை தீவிரமாக நடத்தி
வருகிறார்.
சத்யார்த்தி குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக ஏராளமான
போராட்டங்களை அமைதியான முறையில் நிகழ்த்தி உள்ளார். பணத் தேவைக்காக அவர்களின்
குழந்தை பருவம், கல்வி போன்றவை சுரண்டப்படுவதை தனது போராட்டங்கள் மூலம் விழிப்புணர்வை
ஏற்படுத்தி வருகிறார்.
குழந்தைகளுக்கு கல்வி இலவசமாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், குழந்தைகள்
கடத்தப்படுவதற்கு எதிராகவும், குழந்தை பருவத்தை காக்கும் இயக்கம் தீவிரமாக போராடி வருகிறது.
சர்வதேச விருதுகள்
இவருடைய சேவைக்காக 2007–ல் இத்தாலிய பாராளுமன்ற
விருது, 2009–ல் அமெரிக்காவின், தற்காப்போருக்கான ஜனநாயக
விருது, ராபர்ட் எப்.கென்னடி சர்வதேச மனித உரிமைகள் விருது (அமெரிக்கா), பிரெட்ரிக்
எபெர்ட் சர்வதேச மனித உரிமைகள் விருது (ஜெர்மனி) உள்ளிட்ட பல்வேறு முக்கிய
விருதுகள் கிடைத்துள்ளன.
மலாலா வாழ்க்கை குறிப்பு
நோபல் பரிசை கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்து கொள்ளும்
இன்னொருவரான மலாலா பாகிஸ்தானின் சுவாத் மாவட்டத்தில் உள்ள மின்கோரா நகரில் 1997–ம் ஆண்டு ஜூலை 12–ந் தேதி பிறந்தார்.
இவருடைய தந்தை ஜியாவுதீன்– தாயார் தோர் பேகை. இவருக்கு 2 தம்பிகளும் உண்டு.
மலாலா தனது 11–வது வயது முதல் பெண் குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்து
வருபவர்.
2 ஆண்டுகளுக்கு முன்பு மின்கோரா நகரில் அவர் வசித்தபோது தலீபான்
தீவிரவாதிகள் பெண் குழந்தைகள் கல்வி பெறுவதை தடுக்கிறார்கள் என்று பி.பி.சி.
வானொலியின் உருது சேவை நிகழ்ச்சிக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு
இருந்தார். ஒரு சிறுமி தனது நாட்டின் தீவிரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தது
உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.
துப்பாக்கி சூடு
இதனால் ஆத்திரமடைந்த தலீபான் தீவிரவாதிகள் 2012–ம் ஆண்டு
அக்டோபர் 9–ந் தேதி பள்ளிக் கூடத்துக்கு மலாலா பஸ்சில் சென்றபோது அவரை
துப்பாக்கியால் சுட்டனர். தலையில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவர்
இங்கிலாந்தின் பிரிமிங்காம் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சைக்கு பின்பு உயிர் பிழைத்த மலாலா தற்போது
இங்கிலாந்தில் இருந்தவாறே மலாலா அறக்கட்டளை என்னும் ஒரு தொண்டு நிறுவனத்தை
உருவாக்கி, அதன் மூலம் பாகிஸ்தான், நைஜீரியா, ஜோர்டான், சிரியா, கென்யா நாடுகளில்
வாழும் பெண்குழந்தைகளின் கல்விக்காக சேவை செய்து வருகிறார். தற்போது இங்கிலாந்தின்
பிரிமிங்காம் நகரில் வசித்து வருகிறார்.
குறைந்த வயதில் நோபல்
பரிசு
17 வயதில் நோபல் பரிசு பெற்று இருப்பதன் மூலம், மிகக் குறைந்த
வயதில் இப்பரிசை பெற்றவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகி இருக்கிறார்.
இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறி
வசித்த விஞ்ஞானி லாரன்ஸ பிராக் தனது 25–வது வயதில்
இயற்பியலுக்கான நோபல் பரிசை 1915–ல் தனது தந்தையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
வாழ்த்து செய்தி:
வான்மீகீயூர் சங்கர்
- வான்மீகீ பிரார்த்தனை மன்றம் & எரோ சங்கர்
ப்ளாக் :
மீண்டும் ஒரு கவுரவம்
குழந்தைகள்
உரிமைக்காக குரல் கொடுத்த இந்தியர் கைலாஷ் சத்யார்த்திக்கு
2014–ம் ஆண்டிற்கான
நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு கிடைத்துள்ளது. இந்தியர்
கைலாஷ் சத்யார்த்திக்கும், பெண் கல்விக்காக ஓங்கி குரல் எழுப்பிய பாகிஸ்தானை
சேர்ந்த மலாலாவுக்கும் வான்மீகீ பிரார்த்தனை மன்றம் சார்பில் என்
நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் :-
குழந்தைகள்
உரிமைக்காக குரல் கொடுத்த இந்தியர் கைலாஷ் சத்யார்த்திக்கும், பெண்
கல்விக்காக ஓங்கி குரல் எழுப்பிய பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவுக்கும் 2014–ம் ஆண்டிற்கான
நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது, நம்மை எல்லாம் ஆனந்தக்
கடலில் ஆழ்த்தியுள்ளது.
நீண்ட
காலத்திற்குப் பிறகு, ஒரு இந்தியர் நோபல் பரிசை வென்றதை
கவுரவத்திற்குரிய விஷயமாகக் கருதி உள்ளம் பூரிப்பதுடன் பரிசை வென்ற கைலாஷ்
சத்யார்த்திக்கு தமிழக பா.ஜ.க. சார்பில் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:–
நடப்பாண்டில்
அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்காக இந்தியர் கைலாஷ் சத்யார்த்தியும், பாகிஸ்தானின்
மலாலாவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகள்
நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடிவரும் இருவருக்கும் வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறேன்.
நடப்பாண்டில்
அமைதிக்கான நோபல் பரிசு பெற இவர்கள் இருவரை தவிர சிறந்தவர்கள் வேறு எவரும் இல்லை
என்றே கருதுகிறேன். நோபல் பரிசு பெற்றுள்ள சத்யார்த்தி, மலாலா ஆகிய
இருவரும் தங்களின் துறையில் மேலும் பல சேவைகளை செய்து, உலகம் முழுவதும்
பெண் குழந்தைகள் தெய்வங்களாக போற்றப்படும் நிலையை உருவாக்க பாடுபட வேண்டும் என்று
வாழ்த்துகிறேன்.
நோபல் பரிசு பெற்றுள்ள சத்யார்த்தி
இந்த நவீன யுகத்திலும் துயரப்பட்டு வரும் லட்சக்கணக்கான
குழந்தைகளை அடையாளம் கண்டு கொண்ட நோபல் பரிசு கமிட்டிக்கு எனது மனமார்ந்த
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதை எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய
கவுரவமாக கருதுகிறேன்.
நான் மகாத்மா காந்தி இறந்ததற்கு பிறகு பிறந்தவர். இந்த பரிசு
எனக்கு முன்னதாக மகாத்மாவுக்கு கிடைத்து இருந்தால் அதை விட இன்னும் நான் பெருமை
அடைந்து இருப்பேன். இது நிஜமாகவே எனக்கு கிடைத்த கவுரவம் தான். இந்த விருதை நாட்டு
மக்கள் அனைவருக்கும் நான் அர்ப்பணிக்கிறேன்.
இது வரை நோபல்பரிசு பெற்ற இந்தியர்கள்
| | | |
1913 | இரவீந்திரநாத் தாகூர் | இலக்கியம் | இந்தியர் |
1930 | ச. வெ. இராமன் | இயற்பியல் | இந்தியர் |
1968 | ஹர் கோவிந்த் கொரானா | மருந்தியல் | இந்திய வம்சாவளியில் பிறந்த அயல்நாட்டவர் |
1979 | அன்னை தெரேசா | அமைதி | இந்தியர் |
1983 | சுப்பிரமணியன் சந்திரசேகர் | இயற்பியல் | இந்தியாலில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவர் |
1998 | அமர்த்தியா சென் | பொருளியல் | இந்தியர் |
2001 | வீ.எஸ். நய்ப்பால் | இலக்கியம் | இந்திய வம்சாவளியில் பிறந்த அயல்நாட்டவர் |
2009 | வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் | வேதியியல் | இந்தியாலில் பிறந்து அமெரிக்க மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் குடியுரிமை பெற்றவர் |
-Arrowsankar
11 கருத்துரைகள்:
அமைதிக்காக கிடைத்துள்ள மாபெரும் கவுரவம்.அதற்க்கான தகுதியான மனிதராக நம் கைலாஷ் சத்யார்த்தி- வாழ்த்துக்கள்
- நல்ல வரம் அன்பு ராஜன்
மலாலாவை தெரிந்த அளவுக்கு கைலாஷ் சத்யார்த்தி பற்றி கேள்விப் பட்டது கூட இல்லையே . தண்டாமரையின் உந்தன் இருந்தும் தண்டே நுகரா மன்டூகங்களாக இருந்திருகிறோமே!
இருவருக்கும் வாழ்த்துக்கள்
elaborate article on Nobel prize for peace
Congrats @kailash and @malala
-Anand sridharan
ஏழை, எளியவர்களுக்கான இடைவிடாமல் பாடுபட்டு வரும் இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி என்ற எளிமையான ஒரு மனிதருக்கு நோபல் பரிசு கிடைத்த கவுரவம் இந்தியநாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்த மிகப்பெரிய கவுரவம்
Very Nice article.I learnt tamil from you sankar.my best wishes to Kailash
very proud to be aIndian
மிக மகிழ்ச்சியும் ,என் வாழ்த்துகளும்
என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை இருவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Congirate to my dear Indian Kailash and Pakisthani Malaala
very proud of indian Mr.Kailash
Please write in Engish Mr.Sankar.I got very tired to read.But under stand.My best wishes to Kailash & Malalaa
Post a Comment