சில நாட்ககளுக்கு முன் எனது நண்பர் திரு.ராஜவேல்
மூலமாக ஆசாரக்கோவை எனும் புத்தகம் கிடைத்தது.
நான் அவரிடம் சின்னவயசில் பள்ளி பாடங்களில் படித்ததை இப்போ எதற்கு என்று கேட்டேன்.
நானும் படித்து விட்டேன்.என்னிடம் சும்மாவே கிடக்குது நீங்க தமிழ் புத்தகங்கள
சேத்து(சேர்த்து) வைக்கீறிங்க.அதனாலே உங்களுக்கு தேவ்ப்படுமேன்னு கொடுத்தேன்’’ என்றார். உண்மைதான் நான் என் வீட்டில் தமிழ் மற்றும்
ஆங்கில புத்தகங்களை சேர்த்து வைத்து உள்ளேன்.அதில் இந்த கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய “ஆசாரக்கோவை” புத்தகமும் இப்போது வந்து
சேர்ந்தது.
ஆசாரக்கோவை என்பதற்கு 'ஆசாரங்களினது
கோவை' என்றோ, 'ஆசாரங்களைத் தொகுத்த கோவை என்றோ
பொருள் கூறலாம். மற்றும் ஒழுக்கங்களின் வரிசை என்றும் பொருள்
கொள்ளலாம்.
ஆசாரம் என்பது ஆச்சாரம் என்றவாறே
உச்சரிக்கப் படுகிறது. தமிழில் சாரம் என்றால் ஒன்றை சார்ந்தோ அல்லது அதற்கு
தேவையான ஒன்றாகவோ கருதப்படுகிறது. உதாரணமாக கட்டிடம் கட்ட உயரமான பகுதியில் வேலை
செய்ய மரம் அல்லது இரும்பு சட்டங்களால் கட்டி அதன் மேலே நின்று வேலை செய்வர். அதேப் போல் கட்டிடத்தில் சில இடங்களில்
வளைவுகள், கண்ணாடி பதிவுகள் செய்யும் போது சாரங்களை கட்டி நிலையாகவே வைத்து
விடுவர். இது வெளிப்பகுதியில் தெரியாது ஆனால் இது இல்லாமல் வளைவுகள்,கண்ணாடி
பதிவுகள் நிற்காது. அதுப் போல் மனித வாழ்வில் இந்த சாரங்களைப் போல் பல ஒழுக்கங்கள்
தேவை. அது மறைந்து நின்றாலும் அல்லது தேவையானப் போது பயன் படுத்தினாலும் வாழ்க்கை
முறை நன்றாக இருக்கும். இந்த ஒழுக்கம் அகத்தூய்மைக்கும் புறத்தூய்மைக்கும்
தேவையானது.அதனை மிகுதியாக
ஆசிரியர் இந்த “ஆசாரக்கோவையில்” தந்துள்ளார்.
'ஆசார
வித்து' (1) என்று தொடங்கி, 'ஆசாரம் வீடு பெற்றார்' (100) என முடியும் நூறு செய்யுட்களில் இதில் எனக்கு
பிடித்த 96வது செய்யுள்
இது
எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்
நந்து எறும்பு, தூக்கணம்புள், காக்கை, என்று
இவைபோல்,
தம் கருமம் நல்ல கடைப்பிடித்து, தம் கருமம்
அப் பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப் பெற்றியானும் படும். 96
(நந்து
எறும்பு - ஆக்கமுள்ள எறும்பும்
தூக்கணம்புள் – தூக்கணாங்குருவியும்)
எறும்பு, தூக்கணாங் குருவி, காக்கை, ஆகியவற்றின் குணங்களைப் போல செய்பவர்க்கு எப்போதும் சிறப்பு உண்டாகும் என்பதை அழகாக ஆசாரக்கோவையில் ஒழுக்கநெறியை கூறியுள்ளார் இதன் ஆசிரியர்.
எறும்பு : எறும்புகளின் மிகவும் ஒழுங்காக
கட்டமைக்கப்பட்டிருக்கும் சுமுக
வாழ்வு, தமது வாழ்விடத்தை தமக்கு
ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு, தம்மைத்தாமே
பாதுகாத்துக் கொள்ளும் திறன், சுறுசுறுப்பு
மற்றும் உழைப்பு போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கான
காரணங்களாக கருதப்படுகின்றன.
காக்கை : இது
பறவைகளில் கூடுதல் அறிவுத்
திறன் பெற்றதாகக்
கருதப் படுகிறது. இது மக்கள் வாழும் இடங்களில் கூட்டமாக
இருந்து கொண்டு அவர்கள் வெளியிடும் குப்பைகளையும், மற்றைய வீண்பொருட்களையும் உண்டு
வாழ்கிறது. இதன் காரணமாக சுற்றுப்புறச் சூழல்பாதுகாப்பில் ஒரு பங்கு
வகிக்கிறது.
தூக்கணாங்குருவி : வீடுகட்ட மனிதன் சிமிண்ட் அல்லது
சுண்ணாம்பு கலவையை பயன்படுத்துவது போல், அவற்றை பசையாக்கி புல், வைக்கோல், இலைகள்
ஆகியவற்றை இணைத்து வலுவான உறுதியான கூட்டினைக் கட்டுகிறது. தமது
வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு கட்டி அதில்
வாழ்கிறது.

1 கருத்துரைகள்:
''....ஆசாரக்கோவை என்பதற்கு 'ஆசாரங்களினது கோவை' என்றோ, 'ஆசாரங்களைத் தொகுத்த கோவை என்றோ பொருள் கூறலாம். மற்றும் ஒழுக்கங்களின் வரிசை என்றும் பொருள் கொள்ளலாம் ''....
பதிவு நன்று.
நல்ல படிப்பினை...
நான் தங்களிற்குக் கருத்துகள் இட்டேன்
நீங்கள் என் பக்கம் வரவில்லையே காத்திருந்தேன்.
இது தான் நீண்ட நாட்களாக வரவில்லை.
வருங்கள் பாடப் பாட ராகம்.
Post a Comment