சிறுவயதில் திருவான்மியூரில் கலாஷேத்ராவின்
தென்னைதமரத் தோட்டம் உள்ளது. அதில் விடுமுறை நாட்களில் நான் எனது நண்பர்களுடன்
விளையாடி பொழுது கழிப்பது வழக்கம். அதேபோல் அன்றும் எனது நண்பர்களுடன் கிரிக்கெட்
விளையாடிக் கொண்டிருந்த போது பேட்டிங் செய்த பையன் பந்தை ஓங்கி விளாச பந்து
கொஞ்சம் தூரத்தில் சென்று செடிகள் நிறைந்த
அடர்ந்த பொந்தில் விழ அதை நண்பன் ராஜன் தேடப் போக சற்று நேரத்தில் அவனது அலறல்
கேட்க அனைவரும் அவனை நோக்கி சென்றோம். அவன் வலது காலை பிடித்துக் கொண்டு வலியால்
துடித்தான். அப்பொழுது தான் நாங்கள் அவனை பாம்பு கடித்து இருப்பதை உணர்ந்தோம். ஆனால்
உடனே என்ன செய்யவேண்டும் என்பதை விட பாம்பின் அதிர்ச்சியில் நாங்கள் அனைவரும்
ஸ்தம்பித்து போனோம்.
சற்று தூரத்தில் இருந்து திரு கிருஷ்ணய்யர்
எங்களை நோக்கி வந்தார். வந்தவர் பாம்பு கடித்து இருப்பதும் அதனால் ராஜன் வலியால்
துடிப்பதும் உடனே உணர்ந்தவர் எங்களிடம் ஒரு கயிறை தேடித் தர சொன்னார். ஆனால் அது
எதற்க்காக என்பது புரியவில்லை,நாங்கள் பாம்பை எண்ணி அனைவரும் கயிறை தேட நான் உள்பட
முற்படவில்லை.
அவர் அவசரம்! சீக்கிரம்! என்று
கத்திக்கொண்டே இருந்தார்.சிலர் அவர் கத்தியதால் தேடுவதுப் போல் மெல்ல தப்பிக்க
எண்ணி சம்பவ இடத்தை விட்டு நகர்ந்தனர்.
திரு கிருஷ்ணய்யர் (எப்போதும் சட்டையணியாதவர்)
அப்போது டக்கென்று தனது பூணூலை கழற்றி ராஜனது காலில்
பாம்பு கடிக்கு சற்று மேலே இறுக்கிக் கட்டி்னார். “ பயப்படாதே ஏதோ
தண்ணிப் பாம்புதான் கடிச்சி இருக்கு,வா ஆஸ்பிட்டலுக்கு போலாம்”.என்று அழைத்து
சென்றார்.
நாங்களும் (எஞ்சி இருந்தவர்கள்) கூடவே
சென்றோம்.
அது ஒரு சின்ன க்ளினிக்.நாங்கள் அவசரமாக
வருவதைக் கண்டு நோயாளிகள் விலக திரு.கிருஷ்ணய்யர் முதலில் உள்ளே நுழைய
டாக்டரும் அவசரத்தை உணர்ந்து எங்களை
எதிர்க்கொண்டார்.
டாக்டரிடம் விபரங்களை திரு.கிருஷ்ணய்யர்
தெரிவித்தார். ராஜனை சிகிச்சை படுக்கையில் படுக்க வைத்து டாக்டர் அவன் காலை
கவனித்து அவனது பாம்புக்கடிக்கு மேலே பூணூலால் கட்டியிருப்பதை பார்த்து திரும்பி திரு.கிருஷ்ணய்யரை நோக்கி “வெரிகுட் நல்ல வேலை
செஞ்சிங்கே மிஸ்டர் கிருஷ்ணய்யர். இந்த பையனோட உயிரை காப்பாத்த உங்களடோ பூணூலையே
தந்து இருக்கீங்க”என்றார். அப்போதுதான் எங்களுக்கு புரிந்தது திரு.கிருஷ்ணய்யர் கயிறுக்கு பதிலாக அவர் தனது
பூணூலை கட்டி பாம்புக் கடியின் விஷம் பரவாமல் தடுத்து இருக்கிறார்.
அதற்குள் விஷயம் ராஜனது அப்பா அம்மா மற்றும்
அக்கம் பக்கத்தினர் கேள்விப்பட்டு வந்து விட்டனர். டாக்டர் அவர்களிடம் திரு.கிருஷ்ணய்யர்
அவர்களின் சமயோசித வேலையை சொல்ல அனைவரும் பாராட்டினர். திரு.கிருஷ்ணய்யர்
பெருமிதத்துடன் வெட்கப்பட்டார்.
அய்யர் சாதியினருக்கு பூணூல் எவ்வளவு
முக்கியம், புனிதாமானது என்பதை நாம் அறிவோம்.
அன்று பேஸ்புக்,வாட்ஸ்அப், ஈமெயில்,செல்போன் எல்லாம்
இல்லை ஆனால் கேட்டவர்கள் எல்லாம்
திரு.கிருஷ்ணய்யரை பாராட்டினர். இது
நடந்தது 1978 ம் வருடம்.
மனிதாபிமானத்தின் முன் மதமும் மதச் சின்னங்களும் ஒன்றும் பெரியதல்ல என்பதை உணர்த்தியது இந்த செயல்.
அதேப் போல் இன்று,
நியூசிலாந்ததில் சாலை விபத்தில் சிக்கிய
சிறுவனை காக்க, தன் தலைப்பாகையை (டர்பன்) கழற்றி உதவிய சீக்கிய
மாணவருக்கு, பாராட்டுகள் குவிகின்றது.ஆக்லாந்தில் பிசினஸ் கோர்ஸ்
படித்து வரும் ஹர்மன் சிங், 22, தன்னுடைய வீட்டில் இருந்தார். அப்போது, சாலையில் சென்ற
ஆறு வயது சிறுவன் மீது கார் மோதியது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டதும், வெளியில் ஓடி வந்த ஹர்மன் சிங், தலையில் இருந்த டர்பனை கழற்றி, காயமடைந்த பகுதியில் கட்டி, உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த, நியூசிலாந்து நாட்டு தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்ந்த குழுவினர், ஹர்மன் சிங்கின் வீட்டுக்கு சென்று பாராட்டு தெரிவித்தனர்.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டதும், வெளியில் ஓடி வந்த ஹர்மன் சிங், தலையில் இருந்த டர்பனை கழற்றி, காயமடைந்த பகுதியில் கட்டி, உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த, நியூசிலாந்து நாட்டு தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்ந்த குழுவினர், ஹர்மன் சிங்கின் வீட்டுக்கு சென்று பாராட்டு தெரிவித்தனர்.
ஹர்மன் சிங்கின் வீட்டில், ஒரு பிளாஸ்டிக் டேபிள், இரண்டு நாற்காலிகளுடன், தரையில் விரிக்கப்பட்ட மெத்தையில் ஹர்மன் சிங் படுப்பதையும் அறிந்தனர். உடனே, வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் ஒரு கடையை தொடர்பு கொண்டு, லாரி நிறைய வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும், கொண்டு வர செய்து, தங்களுடைய அன்பளிப்பாக வழங்கினர்.சில தினங்களுக்குப் பிறகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனை காண சென்ற ஹர்மன் சிங்குக்கு, சிறுவனின் பெற்றோர் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
ஹர்மன் சிங்கின் செயல் குறித்த செய்தி பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வெளியானதும், ஆயிரக்கணக்கானோர் பாராட்டிஉள்ளனர்.
மனிதாபிமானத்தின் முன் மதம் முக்கியமில்லை நல்மனம்தான் சிறந்தது என்பதை மீண்டும் அறிவுறித்திய நிகழ்ச்சி இது.

3 கருத்துரைகள்:
கண்கலங்கி வாசித்தேன் ஐயா.
அருமையான பதிவு மிக்க நன்றி.
வாங்கோ என் வலைக்கும்
நல்வரவு.
Good message
Anand
அன்புள்ள
நானும் செய்தித்தாளில் ஹர்மன் சிங்கின் அற்புதச் செயலைப் படித்தேன். பூணூல் கழற்றி பாம்பு விடத்திலிருந்து காப்பாற்றிய செய்ல் 1978 இல் எனும்போது உண்மையில் நமது பாரததேசம் மிகுந்த பெருமைக்குரியது ஈரமானது பண்பாட்டிற்குரியது என்பதை உணர்த்துகிறது. நன்றி.
Post a Comment