
மாலை நேரத்தில் கங்கை நதியின் ஓட்டத்தை பார்த்தவாறு
படித்துறையில் தனது ஆசனத்தை விரித்து அமர்ந்தான் யோகேசன்.
தனது மேலாடையை
ஒழுங்கு படுத்தியவாறே சுற்றிலும் நோட்டம் விட்டான். கண்களுக்கு தெரிந்தவரை யாரும் இல்லை. ஒரு ஏகாந்தமான மாலை
நேரத்தை எதிர்பாராமல் கிடைத்த மகிழ்ச்சியுடன் ஜபம்
செய்ய ஆயுத்தமானான் யோகேசன்.
தனது மேல் அங்கியின்
உள்புறம் ஜப மாலையை வைத்து கண்களை மூடி ஜபம் செய்யத்துவங்கினான். கங்கையின்
ஓட்டத்தால் ஏற்பட்ட சலசலப்பை தவிர வேறு எதுவும் அவனுக்கு கேட்கவில்லை.
சில மணித்துளிகள்
கடந்தது....
“இறைவனே!, என்னை ஆளும்
ஈசனே! உன்னருள் எல்லோர்க்கும் கிடைக்கட்டும்...” என கர்ண கொடூரமான குரல்வளத்தில் ஒருவர் கத்துவதை கண்டு கண்விழித்தான் யோகேசன்.
தன்னைவிட முற்றிலும்
எதிர்தன்மையில் ஒருவர் அங்கே படியில் அமர்ந்து பெருங்குரலில் ...