வெண் பஞ்சு மேகங்கள்
யானை முதுகு மலைகள்
பரதம் ஆடும் நீர் வீழ்ச்சிகள்
கனிகள் பழுத்த மரங்கள்.
பாம்பாய் நெளியும் கொடிகள்
பகல் நிலவாய் சூரியன்
பளீர் ஒளியாய் வெளிச்சம்.
ஆஹா! ஆஹா! என்ன அற்புதம்
ஆண்டவனின் அருமை சிற்பம்
ஆருயிராய் மீண்டும் மீண்டும்
ஆயிரம் முறை பிறக்கவேண்டும்.
வானம்பாடி பறவை வாழ்த்துரையில்,
வாலிபதாமரை தடாகத்தில் தவழ்ந்தது.
வாசலில்லாத வானம் வெட்கப்பட்டது.
மயிலும் வானம்பாடியோடு கூட்டானது.
மதன மோகத்துடன் நாட்டியமாடியது.
மழை வரப்போகுதென்று மத்தளமிட்டது.
மண்ணும் புல்லும் கொஞ்சியது.
மடையர்கள் மண்டையில் களிமண்ணா?
மந்திகளாடும் கோணங்கி ஆட்டமா?
மனமென்ன புள்ளியில்லா கோலாமா?
யானை மல்லாந்தா படுக்கும்?
அருவி கீழிருந்தா மேலேறும்?
மரம் கவிழ்ந்தா கனி கொடுக்கும்?
புல்வெளியா வானில் இருக்கும்?
நீங்கள் சொல்லும் அற்புதமெல்லாம்,
தலைக் கீழாய் தொங்குகிறது!
நீங்களும் தொங்கி தவிக்கிறீர்!
அறிவீலியாய் ஆட்டம் போடுகீறிர்!
யார் இந்த அபஸ்வரம்?
அபத்த குரல் பக்கம் திரும்ப
அரசமரக்கிளையில் “வவ்வால்” தொங்கியது.

2 கருத்துரைகள்:
''..தொங்கி தவிக்கிறீர்!
அறிவீலியாய் ஆட்டம் போடுகீறிர்!..''
நல்ல உதாரணம்...அபஸ்வரம்
“வவ்வால்” தொங்கியது.
நல்ல ரசனை. அழகான கவிதை. அருமையான புகைப்படங்கள்.
Post a Comment