
அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளிக்கும்
“அன்னதாதாவாக” “அன்னப் பிரபுவாக” திகழும் சிவபெருமானை ஒருமுறை பார்வதி
தேவி பரிசோதிக்க எண்ணி ஒரு எறும்பை பிடித்து ஒரு சிறிய சிமிழில் வைத்து மூடி, சிவபெருமானிடம் சென்று “நீங்கள் அனைத்து ஜீவராசிகளுக்கும்
இன்றைய அன்னத்தை அளித்துவிட்டீர்களா?” என்று கேட்டாள். பெருமானும் “ஆமாம் அளித்துவிட்டேன்” என்று கூற “இதோ
இந்தச் சிறிய சிமிழியில் உள்ள எறும்புக்கு நீங்கள் உணவளிக்கவில்லை” என்று தேவி கூறினாள். சிவபெருமானும்
பொறுமையாக,
அதைத் திறந்து பார்க்குமாறு
கூற, தேவி திறந்து பாரத்தபோது, அந்த சிறிய எறும்பின் வாயில் ஒரு
அரிசி இருந்த்தைக் கண்டு வியப்பில் ஆழ்ந்து போனாள். மூல முழு முதற் கடவுளான
சிவபெருமான் அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்னமளித்துக் காப்பாற்றுகிறார் என்ற
கருத்தை வலியுறுத்தும் வகையில் இந்தக் கதையைப் பெரியவர்கள் கூறுவதுண்டு.
சிவபெருமான்...