Tuesday, October 27, 2015

அன்னாபிஷேகம்

அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளிக்கும் அன்னதாதாவாக” “அன்னப் பிரபுவாகதிகழும் சிவபெருமானை ஒருமுறை பார்வதி தேவி பரிசோதிக்க எண்ணி ஒரு எறும்பை பிடித்து ஒரு சிறிய சிமிழில் வைத்து மூடி, சிவபெருமானிடம் சென்று நீங்கள் அனைத்து ஜீவராசிகளுக்கும் இன்றைய அன்னத்தை அளித்துவிட்டீர்களா?” என்று கேட்டாள். பெருமானும் ஆமாம் அளித்துவிட்டேன்என்று கூற இதோ இந்தச் சிறிய சிமிழியில் உள்ள எறும்புக்கு நீங்கள் உணவளிக்கவில்லைஎன்று தேவி கூறினாள். சிவபெருமானும் பொறுமையாக, அதைத் திறந்து பார்க்குமாறு கூற, தேவி திறந்து பாரத்தபோது, அந்த சிறிய எறும்பின் வாயில் ஒரு அரிசி இருந்த்தைக் கண்டு வியப்பில் ஆழ்ந்து போனாள். மூல முழு முதற் கடவுளான சிவபெருமான் அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்னமளித்துக் காப்பாற்றுகிறார் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் இந்தக் கதையைப் பெரியவர்கள் கூறுவதுண்டு.


சிவபெருமான் அபிஷேகப் பிரியர் என்பது அனைவரும் அறிந்ததுதான். தமிழகத்திற்கு வடக்கே உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிவபெருமான் லிங்கத்திற்கு மேல தொடர்ந்து தாரையாக தண்ணீர் விழும் வகையில் தாராபாத்திரம் அமைந்திருப்பதைக் காணலாம். பதினாறு வகையான திரவியங்களைக் கொண்டு சிவபெருமானுக்கு திருமஞ்சனங்கள் செய்யப்படுகின்றன. தனது சிரசின் மீது கங்கையைத் தரித்திருக்கும் சிவபெருமான் எப்போதும் புனித கங்கை நீரின் திருமஞ்சனத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார்.
சிவபெருமானுக்கு ஆண்டிற்கு ஒரு நாள் மட்டும் சிவலிங்கத்தை மூடுகின்ற வகையில் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அன்னதாதாவாக திகழும் சிவபெருமானுக்கு அவர் மக்களுக்கு அளிக்கும் அன்னத்தையே கொண்டு திருமஞ்சனம் செய்வதுதான் இந்த அன்னாபிஷேக உற்சவத்தின் தனிச் சிறப்பாகும்.
ஐப்பசி மாதம் அமாவாசை நாள் இந்தியா முழுவதும் தீபாவளியாகக் கொண்டாடப்படுகின்றது. அதே ஐப்பசி மாதம் பௌர்ணமி திதியும் அசுவினி நட்சத்திரமும் சேரும் புனித நாளில் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஏராளமான பச்சரிசி அன்னம் வடிக்கப்பட்டு அந்த அன்னம் லிங்கத் திருமேனியை மூடுகின்ற வகையில் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரு சில ஆலயங்களில் அன்னபிஷேகத்தன்று ஆலயம் காய்கனிகளால் அலங்கரிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மற்றும் திருவானைக்காவல் ஆலயங்களில் உள்ள குபேர லிங்கங்களுக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாகச் செய்யப்படுகிறது.
கும்பகோணத்திலிருந்து சுமார் 36 கி.மீ. தொலைவில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் ஸ்ரீபிரஹதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கருவறையில் இந்தியாவிலேயே மிகப் பிரம்மாண்டமான சிவலிங்கத் திருமேனிக்கு நடைபெறும் அன்னாபிஷேகம் மிகச் சிறப்பானதாகத் திகழ்கிறது. மாமன்னன் ராஜராஜனின் புதல்வனான முதலாம் இராஜேந்திரன் 1012 முதல் 1044 வரை கங்கை கொண்ட சோழபுரத்தை தன் தலைநகராக்க் கொண்டு ஆட்சி செய்தபோது தன் தந்தை போன்றே பிரஹதீஸ்வர்ருக்கு கட்டிய இந்தப் பெரிய ஆலயத்தில் உள்ள லிங்கத்தின் உயரம் 13.5 அடி ஆபுடையாரின் சுற்றளவு 60 அடி. ஆசியாவிலேயே பிரம்மாண்டமானதாக இந்த லிங்கம் கருதப்படுகிறது.
108 மூடைகளுக்குக் குறையாத அரிசி அன்னமாகத் தயாரிக்கப்பட்டு ஸ்ரீபிருஹதீஸ்வர லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகத்திற்குப் பின்னல் லிங்கப் பகுதியைச் சுற்றிலும் உள்ள அன்னம் நீர்வாழ் ஜீவராசிகளுக்காக ஆறுகளிலும் பிற நீர் நிலைகளிலும் கரைக்கப்படுகிறது. ஆவுடையார் பகுதி அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. இந்த மஹாபிரசாரத்தை சாப்பிட்டால் குந்தைப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு மகப்பேறு அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் வாழ்க்கையில் உணவிற்குப் பஞ்சம் இருக்காது என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள செந்தலை கிராமம் ஸ்ரீ மீனாட்சியம்மை சமேத ஸ்ரீசுந்தரேசர் ஆலயத்தில் இந்த அன்னாபிஷேக ஐப்பசிபௌர்ணமி அன்று மூலவர் லிங்கம் மீது சந்திரன் உதயமாகும் போது அதன் ஒளிக்கதிர்கள் விழுவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
பல நுற்றாண்டுகளாக இருக்கும் புராணங்களில் சரியான ஆதாரங்கள் இல்லை. இந்நாளில் சிவபெருமானை தரிசிக்க அன்னத்திற்குப் பஞ்சம் ஏற்படாது. அனைத்து வளங்களும் பெருகும் என்பது நம்பிக்கை. 2 மணி நேர அன்னாபிஷேகத்திற்குப் பின்னர் அன்னம் களையப்பட்டு மஹாபிஷேகம் நடைபெறுகிறது. அன்னம் நம் வாழ்க்கையில் எவ்வளவு இன்றியமையாதது என்பதை எடுத்துக்காட்டவே இந்த அன்னாபிஷேகம்.
தேரழுந்தூர், திருவல்லிக்கேணி, திருமலை போன்ற பிரபலமான ஆலயங்களில் ஆவணி மாத்த்தில் திருப்பாவாடை உற்சவம் என்ற பெயரில் அன்னாபிஷேகம் போன்றே ஒரு உற்சவம் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் ஏராளமான புளிஹோரை அன்னம், தத்யோன்னம், இனிப்பு வகைகள் பழங்கள் போன்றவை மூலவருக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில் அம்பாரமாகப் படைக்கப்பட்டு நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

கோகுலத்தில் யாதவர்கள் இந்திரனை வழிபட்டு வந்தபோது, ஸ்ரீ கிருஷ்ணர் மக்களுக்கு இயற்கை வளங்களை அள்ளித் தரும் கோவர்த்தனகிரியை வணங்குமாறு அறிவுறுத்தி வழிபடச் செய்தார். ஸ்ரீ கிருஷ்ண பகவானின் அறிவுரைப்படி கோகுலத்துமக்கள் கோவர்த்தன மலையை வழிபட்ட நிகழ்ச்சியைக் கொண்டாடுகின்ற வகையில் தீபாவளியை அடுத்து வருகின்ற பிரதமை நாளன்று வட மாநில மக்கள், குறிப்பாக மதுராவில் உள்ள மக்கள் இந்நாளை கோவர்த்தன பூஜா என்றும் அன்னகூட் (அன்னம் படைக்கும்ஸ்ரீ விழா என்றும் கொண்டாடிவருகின்றனர். இந்நாளில் மக்கள் தங்கள் வீடுகளில் கிருஷ்ணர்சிலை அல்லது படத்தை வைத்து ஏராளமான உணவுப் பொருட்கள், இனிப்புகளை பகவான் முன் வைத்து அர்ப்பணம் செய்து வழிபடுகின்றனர். திருவாரூர் மாவட்டம், குடவாசலிலிருந்து சேங்காலிபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரிசமேத ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரர் அனைவருக்கும் அன்னம் பாலிப்பதாக ஐதிகம். மேலும் இந்த்த் தலம் மஹாபாரதத்துடன் தொடர்பு கொண்டதாக்க் கருதப்படுகிறது. அள்ள அள்ளக் குறையாத அன்னத்தை தரும் சக்திவாய்ந்த அட்சயபாத்திரத்தை பாண்டவர்களின் தேவியான திரௌபதி, பகவான் கிருஷ்ணரிடமிருந்து இத்தலத்தில்தான் பெற்றதாக தல புராணம் குறிப்பிடுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரரை மனதார வழிபட்டால் அன்னத் துவேஷம் எனப்படும் அன்னத்தின் மீதுள்ள வெறுப்பு குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது.

Print Friendly and PDFபிரிண்ட் எடுக்க

9 கருத்துரைகள்:

Dr B Jambulingam said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அன்னாபிஷேகம் கண்டேன். அருமை.

‘தளிர்’ சுரேஷ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அன்னாபிஷேகம் குறித்த சிறப்பான தகவல்கள்! அருமை! நன்றி!

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அபிசேகச் சிறப்பு அருமை..
மகிழ்ச்சி...

அன்பு ராஜன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சிவபெருமான் அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்னமளித்துக் காப்பாற்றுகிறார்.சிறப்பான தகவல்கள்.நன்றி

BHARKAVI MAMI said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அன்னாபிஷேகம் பற்றி சிறப்பான தகவல்கள்!சூப்பர்! நன்றி

Jamee lavin said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எல்லாத்துக்கும் ஒரு பூஜை .அதற்க்கு ஒரு சாமி. நல்லா இருக்குது சார். அருமையான விளக்கம்.நிறைய படிச்சி தொகுத்து எழுதி இருக்கீறீங்க அருமை.

நான் ஒன்று சொல்வேன்..... said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சேகுவேராவின் முகப்பைப்பார்த்துவிட்டு படைப்புகளைப்பார்க்கிறேன்...முரண் தோழரே...ஆனால் உங்கள் பதிவுகள் அற்புதம் ..இதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.....

Arrow Sankar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@நான் ஒன்று சொல்வேன்.....உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.சேகுவேராவின் மனதில் விளைந்த இரக்கமே புரட்சியானது .அதிகார வர்க்கத்திடம் இருந்து அடிமைத்தனத்தினை மீட்டது.இருப்பினும் புரட்சி,ஆன்மிகம்,கவிதை,கட்டுரை தொடுவதில் ஒன்றும் குறையில்லையே.

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

nice article on Anna abhishekam
--Anand

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms