
திருவான்மியூர் மருந்தீஸ்வரர்
நதிகளை
அழித்துவிட்டு, நாவறட்சியால் தவிக்கிறோம். மரங்களை அழித்துவிட்டு மழைக்கு
விண்ணப்பித்துக்கொண்டிருக்கிறோம். கடவுள் அளித்த கொடைகளை எல்லாம் தொலைத்துவிட்டு,
கடவுளிடம் இன்னமும் வேண்டிக்கொண்டிருக்கிறோம். ஆண்டவன் குடிகொண்ட
ஆலயமான இந்த உடம்பை வீணே கெடுத்துக்கொண்டு ஆரோக்கியத்தை நாடி
அலைந்துகொண்டிருக்கிறோம். கண்ணுக்கு ஒரு மருத்துவர், காதுக்கு
இன்னொரு மருத்துவர்... எனத் தேடித் தேடி அலைகிறோம். கண்ணுக்கு எதிரே, ஒரு வைத்தியரை மருந்தீஸ்வரனாக, தொண்டை
மண்டலத்து வைத்தீஸ்வரனாக இருப்பதை
அறிந்துகொள்வதே இல்லை. காலம் அறிய முடியாத காலத்திலேயே, அகத்தியருக்கு வந்த வயிற்றுவலியை நீக்க சித்த மருத்துவ முறைகளை,
சித்துக்களின் நாயகராம் சிவனாரே வந்து போதித்த இடம்தான்
திருவான்மியூர். அங்கு இருப்பவரே
மருந்தீஸ்வரர்.
...