Tuesday, March 13, 2012

குசும்பு குடுமியாண்டி-1


குசும்பு குடுமியாண்டியின்  ௧மென்ட் : 1

குசும்பு குடுமியாண்டி 
அரசியல் பார்வையாளர்

புதுடில்லி : "பார்லிமென்டில் எங்களுக்கு எதிராக எழுப்பப்படும் சவால்களை சந்திப்பதற்கு, தேவையான அளவுக்கு எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியதை ஒட்டி, பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 
அவர் கூறியதாவது:நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளை அடுத்து, லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் நடக்கவுள்ளதாகவும், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள், வேறு கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது அணி அமைக்க முயற்சித்து வருவதாகவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். எங்களை பொறுத்தவரை, பார்லிமென்டில் மத்திய அரசுக்கு எதிராக எழுப்பப்படும் சவால்களை சந்திப்பதற்கு தேவையான அளவுக்கு, எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு பார்லிமென்டில் நெருக்கடி ஏற்படுவது வழக்கமான விஷயம் தான். பார்லிமென்டில், அனைத்து பிரச்னைகளையும், விவாதிப்பதற்கும், ஆலோசிப்பதற்கும், நாங்கள் தயாராகவே உள்ளோம். தற்போதைய சூழலில், நாட்டுக்கு பல சவால்கள் உள்ளன. இந்த சவால்களை வெற்றிகரமாக முறியடிக்க, அனைத்து அரசியல் கட்சிகளும், அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.
- தினமலர் 12.03.2012

குசும்பு குடுமியாண்டியின்  ௧மென்ட் :
பல ழல்கள்,பல விதமான சர்ச்சைகள் , தோல்விகள் என இருந்தாலும் மானம் கெட்டுபோய் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வது மட்டுமே இன்றைய அரசியல் என்பது போல நமது பிரதமரின் ஒரே பேச்சாக உள்ளது இது மிகவும் விந்தையாக உள்ளது.இதைத்தான் என்  குரு சொல்லுவாரு, மானம் கெட்டவன் ஊருக்கு ராஜாவாக இருப்பான்னு. சரியாத்தான் இருக்கு.

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms