குசும்பு குடுமியாண்டியின் ௧மென்ட் : 2
குசும்பு குடுமியாண்டி
அரசியல் பார்வையாளர்
சங்கரன்கோவில்: ""சங்கரன்கோவில் வெற்றியால் தே.மு.தி.க.,வுக்கு பயன் இல்லை,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். திருவேங்கடம் பிரசாரத்தில் அவர் பேசியதாவது: என் மகாலை கட்டித்தர, சட்டசபையில் நான் கோரிக்கை வைக்கவில்லை. மக்கள் பிரச்னையை பேசினேன், அவர்களுக்குப் பிடிக்கவில்லை. சங்கரன்கோவிலில் போட்டியிட சவால் விட்டனர். எனது, 29 எம்.எல்.ஏ.,க்களையும் பதவி விலகச்செய்கிறேன். 234 தொகுதியிலும் போட்டியிடத் தயாரா? தமிழகத்தில் கொள்ளை போவது தான், அ.தி.மு.க., அரசின் கொள்கை முடிவாக உள்ளது. சங்கரன்கோவிலில் வெற்றி பெறுவதால், எங்களுக்கு எந்த பயனும் இல்லை. அ.தி.மு.க., தோற்றால், தமிழகத்தில் விலைவாசி குறையும். என்னை, திட்டுவதற்குத் தான், ஜெ., பிரசாரத்திற்கு வருகிறார். மக்களுக்கு பயன் இருக்காது. நீங்கள் எங்களைப் பேசுங்க; நாங்க உங்களைப் பேசுவோம், அது வேற விஷயம். தேவையில்லாமல், என் தொண்டர்களைச் சீண்டாதீர்கள். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
- தினமலர் 14.03.2012
குசும்பு குடுமியாண்டியின் ௧மென்ட் :
எங்களுக்கு அப்பிடியெல்லாம் ஒன்னும் பயனில்லாம இல்லை. எங்க தொகுதிக்கு ஒரு எம்.எல்.ஏ.கிடைப்பாருங்கோ.
Wednesday, March 14, 2012
Unknown





0 கருத்துரைகள்:
Post a Comment