
ஒரு வீடியோ படமா
இ-மெயிலில் அனுப்பி வை. புகைப்படங்களா? உடனே அனுப்பு இ-மெயிலில். எந்தக் கடிதங்கள்
ஆனாலும் அனுப்பிய மறு நிமிடம் உங்களுக்குக் கிடைக்க வேண்டுமா? இ-மெயிலில் அனுப்பச்
சொல்லுங்கள்.
மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படிக்
கற்பனை செய்ய முடியாதோ, அதைப் போலவே இ - மெயில் இல்லாத மனித வாழ்க்கையை இனி நினைத்துப் பார்க்கவும்
முடியாது. தனிநபர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றமாகட்டும், நிறுவனங்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றமாக
இருக்கட்டும் இப்போது இ - மெயிலே சரணம் என்ற நிலை உருவாகிவிட்டது.
இந்த இ-மெயிலைக் கண்டுபிடித்தவர் யாராவது
வெளிநாட்டுக்காரர்தான் என்று நினைத்திருப்பீர்கள். நீங்கள் நினைத்தது உண்மைதான்.
அவர் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தமிழர். அதுவும் தனது 14 வயதில்
இ - மெயிலைக்
கண்டுபிடித்துச் சாதனை செய்த...