கடைத்தெரு என்பது போய் மாளிகைக்கடைகள் (ஷாப்பிங் மால்). இப்போது
முளைத்திருக்கும் வணிக வியாபார வளர்ச்சியின் மாபெரும் தோற்றம்.தனித்தனி கடைக்கு
செல்வதிற்கு பதிலாக ஒரே கட்டிடத்தில் பல கடைகள் .வாங்குபவர்களுக்கு எளிதாக,வியாபாரம் பெருக என பல பயன்களைக் கொண்டது இந்த ஷாப்பிங் மால்கள்.
ஆடைகள்,ஆபரணங்கள்,உபகரணங்கள், கருவிகள், காலணிகள், அலங்காரப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், மின் சாதனப் பொருட்கள்,வீட்டு உபயோகப் பொருட்கள்,புத்தகங்கள்,எழுதுப்பொருட்கள் என பல பொருட்கள் மனித சமுதாயத்திற்கு தேவையான அனைத்தும் கிடைக்கும் இடமாக இருப்பவை இந்த
ஷாப்பிங் மால்கள். தீபாவளி,பொங்கல்,திருமணம் விசேஷங்கள்
என நிகழும் பண்டிகை விழாக்கால தேவைகள் போய்
தினம் தோறும் பண்டிகை விழக்காலமாய் மனிதர்கள் மாறி வருவதும் ஷாப்பிங் மால்களுக்கு
ஒரு உற்சாகமாகி பெரும் வளர்ச்சியில் வளர்ந்துக் கொண்டிருக்கின்றன. சென்னையில் அடையார்,மயிலாப்பூர், தி.நகர்,பெரம்பூர்,புரசைவாக்கம்,ஓ.எம்.ஆர் என பலப் பகுதிகளில் இன்று பல
ஷாப்பிங் மால்கள் உள்ளன .
அதுமட்டுமில்லாமல் நமது நாட்டின் பல நகரங்களில் ஷாப்பிங் மால்கள் உருவாகி வருகின்றன. இவை நாட்டின் நாகரிக மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சியினை காட்டுக்கின்றன.
ஆயினும் மக்களின்
அறிவியல் நாகரீக பொருளாதார வருமான முன்னேற்றம் என்கிற வளர்ச்சியின் தீவிரத்தினை மட்டும் மனதில் கொள்ளாமல் மக்களின்
உயிர் பாதுக்காப்பை மிக முக்கியமானதாகக்கொண்டு
அரசும் வியாபார வளாக உரிமையாளர்களும் செய்யலாற்ற வேண்டும். சென்னையில் உள்ள பல வியாபாரத்தலங்கள்,ஓட்டல்கள், மருத்துவமனைகள்,சினிமாத் தியேட்டர்கள் பாதுகாப்பு எனும் மிக முக்கியமான விஷயத்தில்
கட்டுப்பாடும் விதி முறையும் கவனிக்கபடாமேலேயே இருக்கிறது.
அசம்பாவிதம் நடந்தப்
பிறகு ஒவ்வொரு விதிகளை கட்டுப் படுத்துவதை விட மக்களின் அரிய உயிர் பாதுகாப்பிற்கு
வழி வகுத்து அரசு செயல் படுத்த வேண்டும்.
இதன் மூலம் மக்களின்
மன நிறைவும்,பாதுகாப்பும்,வியாபாரமும் பெருகும். இதுவே நம்வாழ்விற்கு மிக இன்பமானதாக இருக்கும்.

எல்லார்க்கும் எனது
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-
“Arrow “சங்கர்.
குசும்பு குடுமியாண்டி : அரசு மட்டுமில்லே சார், நம்மளும் இதற்கு
முயற்சி செய்யணும். நன்றி .எல்லார்க்கும் முன்னதாக, எனது தீப ஓளி நாள்
வாழ்த்துக்கள்.
6 கருத்துரைகள்:
வளரும் காலத்தில் மிக மிக தேவையான ஒரு விஷயமிது அருமை தலைவரே தொடரட்டும் உங்கள் பணி
வளரும் காலத்தில் மிக மிக தேவையான ஒரு விஷயமிது அருமை தலைவரே தொடரட்டும் உங்கள் பணி
வளரும் காலத்தில் மிக மிக தேவையான ஒரு விஷயமிது அருமை தலைவரே தொடரட்டும் உங்கள் பணி
வளரும் காலத்தில் மிக மிக தேவையான ஒரு விஷயமிது அருமை தலைவரே தொடரட்டும் உங்கள் பணி
உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..........
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
நன்றி மீண்டும் தீபாவளி வாழ்த்துக்கள்
Post a Comment