வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Tuesday, December 31, 2013

புது வருட வாழ்த்துக்கள்

இந்த வருடத்தில் இதுவரை அவரவர் வழியில் நடந்த நிகழ்வில் இருந்து நாம் அனுபவித்து கற்றுக் கொண்டவை அனைத்தும் இனி வரும் நாட்களுக்கு பாடமாகவும் முன்னோட்டமாகவும் இருக்கும். அதில் உற்சாகம்,சந்தோசம்,விழா,கலவரம்,சங்கடம்,சோகம் என எல்லாமே அடங்கும். இவையெல்லாம் இனி மீண்டும் வரலாம் வராமல் போகலாம். ஆனால் தடுக்க வேண்டியவைகளை தடுத்தும் உற்சாகத்தினையும் மேலும் அதிகரிக்கவும்  சந்தோசத்தினை பகிர்ந்துகொள்ளவும் இனி வரும் நாளை எதிர்க்கொள்ளும் மனோபாவத்தினை கொண்டு தயாராவோம். எந்நாளும் புத்தாண்டாய் மலரும் . அனைவருக்கும் www.arrowsankar.blogspot.in, www.arrowpost.blogspot.in, www.vanmigi.blogspot.in,  www.devotionalwindow.blogspot.in, வான்மீகீ பிரார்த்தனை மன்றம் சார்பில் எனது இனிய உள்ளங்கனிந்த  ஆங்கில புத்தாண்டு 2014 வாழ்த்துக்கள்  ...

Tuesday, December 24, 2013

வரலாறு படைத்த துப்பாக்கியின் வரலாறு

உலகம் முழுவதும் ‘ஏ.கே.–47’ துப்பாக்கி பிரபலமாக விளங்குகிறது. 10 கோடிக்கும் அதிகமானதுப்பாக்கிகள் புழக்கத்தில் இருக்கின்றன. இந்த துப்பாக்கியை ரஷியாவை சேர்ந்த நிபுணர்  கலாஷ்நிகோவ் என்பவரே  வடிவமைத்து  தயாரித்தார். அவரின் பெயரினை கொண்டே அதாவது A என்பது ஆட்டோமாட்டிக் (தானியங்கி) என்றும் K என்பது அவர் பெயரின் (கலாஷ்நிகோவ்) முதல் எழுத்தும் ஆக மற்றும் வெளியிட்ட ஆண்டு 1947 என்பதின் 47 இணைத்து  AK 47 என  அழைக்கப் பட்டது 94 வயதான அவர் தனது சொந்த ஊரான இஸ்ஹெவ்ஸ்க் நகரில் நேற்று முன் தினம்  மரணம்  அடைந்தார். உடல்நலக்குறைவு காரணமாக  அவர் மரணம்  அடைந்ததாக உட்மெர்தியா  குடியரசின்  செய்தித் தொடர்பாளர் ...

Monday, December 23, 2013

தூங்குவது எப்படி?

பல விதமான விஷயங்களை எல்லா மதங்களும் ஆராய்ந்து அதனை அம்மதத்தின் அடிப்படையில் மனித நலத்திற்கு வழங்கப்படுகிறது.அப்படி உள்ள விஷயங்களில் தூங்குவது கூட எப்படி என்று கூறப்பட்டுள்ளது. தூங்கும் முறைகள் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது. இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர். தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும்...

Thursday, December 5, 2013

நெல்சன் ரோபிசலா மண்டேலா

நெல்சன் மண்டேலா நெல்சன் மண்டேலாவின் இயற்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா என்பதாகும். 1918ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி பழங்குடி இனத் தலைவரின் மகனாக பிறந்த நெல்சன் மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக் கிடந்த தென்னாப்ரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு கொண்டு சென்ற மகத்தான தலைவர் ஆவார். குத்துச் சண்டையிலும், போர் கலையிலும் வல்லவராக திகழ்ந்த மண்டேலாவுக்கு அவரது ஆசிரியர் சூட்டியப் பெயரே நெல்சன் என்பதாகும். பழங்குடியினத்தில் பிறந்திருந்தாலும், படிப்பறிவை பெறுவதில் பெரும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன், தென்னாப்ரிக்க பல்கலைகளில் பட்டப்படிப்பை முடித்து தென்னாப்ரிக்காவில் சட்டக்கல்வியையும் பெற்றார். தென்னாப்ரிக்காவில் சிறுபான்மையினராக இருந்த வெள்ளையர்களிடமே ஆட்சி அதிகாரம் இருந்தது. அவர்களது அடக்குமுறை கருப்பின மக்கள் மீது திணிக்கப்பட்டது. இதனால்...

Wednesday, November 20, 2013

கொடிய நரகங்கள்

1 . பிறன்மனைவி,குழந்தை,பொருள் இவற்றை கொள்ளையடிப்போர்அடையுமிடம் தாமிரை நரகம்.  2 . கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில்இருள்,கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம். 3 .அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப்பொருள் பறிக்கும் சுயநலக்காரர்கள் அடையும் நரகம் ரௌரவமாகும். 4. குரு என்ற ஒருவகையான அகோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்துதுன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவமாகும். 5. தன் சுவைக்காக ஜீவன்களை வதைத்தும் சித்திரவதை செய்தும் புவியில்வாழ்ந்து மரித்தவன் அடையும் நரகம் கும்பி பாகம். 6. பெரியோரையும், பெற்றோரையும் துன்புறுத்திய வெறியர்கள் அடையும்நரகம் காலசூத்திரம். 7. தன தெய்வத்தை நிந்தித்து தனக்குரிய தர்மங்களை விடுத்தஅதர்மிகளடையும் நரகம் அசிபத்திரமாகும். 8...

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms