Tuesday, February 26, 2013

சின்னதாய் ஒரு கடிதம்

நான் பிளாக் எழுதஆரம்பித்து இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது.


நான் படித்த,கேட்ட,தெரிந்த, குறித்து கொண்ட கதைகள், நானாக எழுதிய கவிதைகள்,படித்தவைகளை தொகுத்து கட்டுரையாக மாற்றியது, ஆன்மீக கருத்துக்கள்,விஷயங்களை ஒரு டைரியில் எழுதி வைத்தேன். இதை ஒரு நாள் படித்த என் நண்பர் R.சோமசுந்தரம் உனக்கு நன்றாக எழுத வருகிறது. பத்திரிகைக்கு அனுப்பி வை என்றார்.
பத்திரிகையில் படித்ததை பத்திரிகைக்கு எப்படி அனுப்புவது.ஆனால் நான் படித்ததை மற்றவர்கள் படிக்காமல் இருக்கலாம் அவர்களுக்கு நான் குறித்து கொண்ட செய்திகளை கருத்துக்களை எப்படி பகிர்ந்து கொள்வது.?
இதற்கான விடையாக எனக்கு தெரிந்தது மின்னஞ்சல்.ஆனால் இதிலும் ஒரு பிரச்னை  இருக்கிறது. அதாவது இந்தந்த விஷயங்கள் இந்தந்த நபருக்கு பிடிக்குமா? பிடிக்காதா?  என்பதை நான் அறிய வாய்ப்பில்லை.பத்திரிகை மாதிரி அதாவது ஒரு மெனு கார்டு மாதிரி  இருக்க வேண்டும் . அப்படி இருந்தால்தான் அவரவர்களுக்கு  பிடித்ததை படித்துக்கொள்ளலாம் .அப்பொழுதுதான்என் மகன் செல்வபரத் இன்டர் நெட்டில் ப்ளாக் என்று ஓன்று இருக்கிறது அதை உருவாக்கி அதில் எழுதுங்கள் அதை உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் அவரவர்களுக்கு பிடித்ததை படித்து கொள்வார்கள் என்றான் .மேலும் இதற்காக நீங்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று இலவச பரிமாற்றதினையும் கூறினான்.

இந்த தகவல் எனக்கு உற்சாகத்தினையும் பல தகவல்களை சேகரிக்கவும் வழி வகுத்தது. ஆனால் பிளாக்கில் எழுத எனக்கு தெரியவில்லை. அதுவரை நிறைய விஷயங்களை காப்பி,கட் அண்டு பேஸ்டு (COPY,CUT & PASTE) என்கிற முறையில் எழுதினேன். 

ஆங்கிலத்தில் எழுத பான்ட்(font) இருக்கிறது ஆனால் தமிழில் எழுத எனக்கு பான்ட்(font) கிடைக்கவில்லை அதுவுமில்லாமல் எனக்கு டைப் அடிக்கவும் தெரியாது .கம்பூயுட்டர் பற்றி தெரிந்த நண்பர்களிடம் கேட்டு தெரிந்தும் என்னால் தமிழில் எழுத முடியவில்லை சில நாட்களின் தேடல் பிறகு நண்பர் திரு A .R.வெங்கட்நாராயணன் மூலமாக கூகுல் ட்ரான்சிலேட்டர்  பற்றி அறிந்துக்கொண்டேன் . அன்று முதல் எழுத ஆரம்பித்தேன்.

எச்டீஎம்எல் (HTML) பற்றி இன்டெர் நெட்டிலேயே படிக்க ஆரம்பித்தேன். பல வெப் சைட்டுகள் .பிளாக்குகள் என எனது பிளாகிற்காக படித்தேன் . புத்தனுக்கு போதி மரம் , ரத்னாகரனுக்கு (வான்மீகி முனிவர் ) ராம் என்ற ஈரெழுத்து மந்திரம், விசுவாமித்திரனுக்கு நந்தினி எனும் பசு, எனக்கு இன்டர்நெட் எனும் மாபெரும் அட்சய பாத்திரம்.

எனது போஸ்டிங்-ல்(POSTING) காப்பி அடித்த, எடுத்துக் கொண்ட, குறித்துக்கொண்ட தகவல் ஆதாராத்தினை எனது போஸ்டிங் கீழே எழுதினேன் .இதை படித்த எனது நண்பர்கள்  C.திருநாவுக்கரசு , அன்புராஜன் ஆகியோர் மூலத்தினை மறைக்காமல் அதனையும்  எழுதியதை பாராட்டினார்கள்.

மேலும் நண்பர்கள் திரு.திலீப் சந்தன்,திரு A .R. வெங்கட் நாராயணன். திரு.நசிர்கான்,திருமதி.ஜமீலா,திரு.ஜான்பிட், திரு ப்ரியா கண்ணன், திரு.வெங்கடேஸ்வரன் என்கிற ஈசா, அம்பத்தூர்.திரு.ரகுராமன்  திரு.அனந்தபத்மநாபன், திருமதி லக்ஷ்மி,திரு.சிவானந்தம், திரு.தினேஷ் ராஜ், திரு.வெங்கடராஜூலு , அண்மையில் நண்பரான  திரு.திண்டுக்கல் தனபாலன்  ஆகியோருக்கும் என்னை ஊக்குவித்த அனைத்து நண்பர்கள் மற்றும்  வழிக்காட்டிகள், எல்லோருக்கும் எனது நன்றியினையும் வணக்கத்தினையும் இந்த ஓராண்டு நிறைவுக்காக தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது தவறினை சுட்டிக்காட்டவும், விமர்ச்சிக்கவும் உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும் வரவேற்கிறேன். 

20 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஓராண்டு நிறைவு குறித்து மிக்க மகிழ்ச்சி... மென்மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்...

தங்களின் சுய சிந்தனை பகிர்வுகளும் இந்த ஆண்டில் தொடங்கட்டும் எனவும் வாழ்த்துகிறேன்...

jameela said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மேன் மேலும் அதிகமாய் எழுத வாழ்த்துக்கள்

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஓராண்டு நிறைவுக்காக வாழ்த்துக்கள்

JOHN FEET said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சின்னதாய் ஒரு கடிதம் மூலமாய் பெரியதாய் சாதித்து இருக்கீறீர்கள்

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வாழ்த்துக்கள் இன்னும் எழுதுங்கள்

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வாழ்க உங்கள் முயற்சி

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நிறைவான பணி சூப்பர் ,வாழ்த்துக்கள்

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சகோதரர் அம்பு சங்கர் அவர்களுக்கு
ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் காப்பி செய்து இருந்தாலும், கேட்டு எழுதி இருந்தாலும், உங்கள் நடையில் எழுதி இருப்பதே புதியது தான் . இன்னும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்

அன்பு ராஜன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உங்களோட எரொ சங்கர் பிளாக் (www.arrowsankar.blogspot.in) வான்மீகி பிளாக் (www.vanmigi.blogspot.in), டிவோஷனால் விண்டோ (www.devotionalwindow.blogspot.in) பிளாக், எல்லா பிளாக்கிலும் நல்ல கான்சப்ட்(concept) கொண்டவையாக இருக்கிறது. அதனால் இன்னும் நீங்க அதிகமா எழுதி உங்களோட பணி தொடர மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

bushrocket said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வாழ்க மேலும் வளர்க

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மீண்டும் எனது நன்றியினையும்,வணக்கத்தினையும், வாழ்த்திய, வாழ்த்தபோகும் அனைத்துவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.

உங்கள் வாழ்த்துகள் ஆசீர்வாதமாய் மாறி இன்னும் பல ஆண்டுகள் என்னை எழுத வைக்கும்.நன்றி...நன்றி...நன்றி...

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

super,best wishes

yogamaye said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

you have written more, write write write best wishes for one year completion

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அம்மாடி இந்த பிளாக்கு பின்னாடி இவ்வளவு மேட்டர் இருக்கா ? நீங்க எழுதன சின்னதாய் ஒரு கடிதம் கூட உங்க சுய சிந்தனையில எழுதனுத்தானே. அதுவே ஒரு பதிவு மாதிரி இருக்கு.

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

இந்த பிளாக்குல(www.arrowsankar.blogspot.in) மட்டும் ஓராண்டு நிறைவில் நீங்க 60 பதிவுகள் எழுதி இருக்கீறிங்கோ .சுயமா எழுதன கவிதை, கட்டுரை, மருத்தவக்கான குறிப்புகள், ஆன்மீக குறிப்புகள் மற்றும் நீங்க ரசித்த கேட்ட படித்த விஷயங்கள் எல்லாமே ரொம்ப நல்லாயிருந்தது

அதுவுமில்லாம இதுப்போலே பிளாக்கை எல்லாம் நம்மாளுங்கோ தப்பான விஷயத்துக்குத்தான் யூஸ் பண்ணிக்குவாங்கோ ஆனா நீங்க ஒரு நல்ல விஷயத்துக்கு யூஸ் பண்ணியிருக்கீங்களே அதுக்காகவது முதல்ல வாழ்த்தணும்.

இன்னொரு விஷயம் உங்களோட வான்மீகி பிரார்த்தனை மன்றம் (www.vanmigi.blogspot.in) அதுல வர பிரார்த்தனை ரிக்கொஸ்ட். அதுக்காக நீங்க செய்ற பிரார்த்தனை. வெரி கிரேட் ஜாப் .இது மாதிரி செய்யற சிலர் அவங்களோடே விளம்பரத்துக்காக செய்வாங்க ஆனா நீங்க எந்த விளம்பரமும் இல்லாம ரொம்ப சிம்புளா செய்றதும் அந்த பிரார்த்தனையிலே சுகமானவங்க உங்கள வாழ்த்தும் போதும்,அம்மாடி, இது ஒரு சைலன்ட்டான சாதனை மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

இதுவரையிலும் நான் எந்த feed back ம் எழுதனெதெ இல்லை .ஆனா இந்த ஓராண்டு நிறைவுலேக் கூட எழுதலேன்ன தெரிஞ்சே செய்ற மகா தப்பாகும்.

Venkat Narayanan AR said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

My Hearty Congratulations! I Wish this blog grows huge year after year after year.....This blog contains many subjects and each topic posted is very informative.

The seed planted by you (Arrow Sankar BLOG) has grown to a tree. This will definitely stand for years to come and provide enlightenment(GNANA) to all those who seek refuge under it.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Dear Mr.ARV

Very Very Thanks for your Greetings. I will operate my blog as much as more informative in future also

Once again I thank all of my blog readers.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

My best wishes for the maiden year. keep going and also now the blog looks pleasant with the white bg.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

THANKS Mr.SASIKUMAR

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உங்கள் பனி மேலும் மேலும் உயர ஆண்டவனை பிராத்திகிறோம்.
இது ஆரம்பம் தான், உங்கள் சேவை சிகரத்தை எட்டும்

"ஆரம்பமே சும்மா அதிர்துல"

Avargal Unmaigal said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates


உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms