
Friday, February 22, 2013

Unknown
 
பஞ்சாங்கமில்லாமல்  லக்னம் கண்டுபிடிப்பது எப்படி?
 
   | 
லக்ன  எண்கள்  | 
 | 
மாத  எண்கள்  | 
   | 
மேஷம் | 
77-181 | 
 | 
ஜனவரி | 
726 | 
   | 
ரிஷபம் | 
182-302 | 
 | 
பிப்ரவரி | 
850 | 
   | 
மிதுனம் | 
303-436 | 
 | 
மார்ச் | 
996 | 
   | 
கடகம் | 
437-566 | 
 | 
ஏப்ரல் | 
1086 | 
   | 
சிம்மம் | 
567-691 | 
 | 
மே | 
1208 | 
   | 
கன்னி | 
692-818 | 
 | 
ஜூன் | 
1327 | 
   | 
துலாம் | 
819-949 | 
 | 
ஜூலை  | 
6 | 
   | 
விருச்சிகம் | 
950-1083 | 
 | 
ஆகஸ்ட்  | 
126 | 
   | 
தனுசு  | 
1084-1208 | 
 | 
செப்டம்பர்  | 
250 | 
   | 
மகரம் | 
1209-1319 | 
 | 
அக்டோபர்  | 
366 | 
   | 
கும்பம் | 
1320-1419 | 
 | 
நவம்பர்  | 
491 | 
   | 
மீனம்  | 
1420-1440(1-76) | 
 | 
டிசம்பர்  | 
604 | 
 மேலே காட்டப்பட்டுள்ள அட்டவணைக் கொண்டு எளிதாக லக்னத்தினை கண்டுப்பிடிக்கலாம் 
 
  
எப்படி என்பதினை இப்பொழுது காணலாம்.
ஒருவரது பிறந்த தேதியினை யும் ,பிறந்த நேரத்தினையும்  கொண்டு  கண்டுப்பிடிக்கலாம்  எவ்வாறு ?
உதாரணம் - 1
உதாரண பிறந்த தேதியும் நேரமும் 
1-7-1980  நேரம் காலை  5 – 15 A.M ( அதாவது காலை 5 மணி 15 நிமிடம்)
பிறந்த தேதி 1 - தை  4 ஆல்  பெருக்கி கொள்ளவும் . வருவது 4 ஆகும் .(1 x4 = 4)
பிறந்த நேரம்  5-தை  60 ஆல்  பெருக்கி கொள்ளவும் (காலை எனில் அப்படியே 60 ஆல்  பெருக்கி கொள்ளவும் , மாலை எனில் நேரத்தின் மணியினை மட்டும் ரயில்வே டைமாக மாற்றி , அதாவது 12 உடன் கூட்டி வந்த தொகையினை  60 ஆல்  பெருக்கி கொள்ளவும் )
பிறந்த தேதி 1 x 4 = 4
பிறந்த நேரம்  5 x 60 =300
பிறந்த மாதம் ( 7- அதாவது ஜூலை) 
அதன் மாத  எண்  = 6
பிறந்த நேரத்தின் நிமிடம் = 15 
அதாவது ,
4 (1x4) + 300(5x60) + 6(மாத  எண்) + 15(பிறந்த நேரத்தின் நிமிடம்) எல்லாவற்றையும் கூட்ட 
= 4 + 300 + 6 + 15 = 325 (இந்த எண்  எந்த லக்ன எண்ணில் வருகிறது என்பதினை அட்டவணையில் பார்க்கவும் )
அட்டவணைப்படி மிதுனத்தில் வருகிறது .
எனவே இந்நேர டைம் படி இது மிதுன லக்னம் ஆகும் .
 
உதாரணம் - 2
இதுவே வேறொரு தேதியும் மாலை நேரம்மும் 
3 -7-1980  நேரம் மாலை  5 – 15 P.M ( அதாவது மாலை 5 மணி 15 நிமிடம்)
பிறந்த தேதி 3 x 4 = 12
பிறந்த நேரம்  17 x 60 = 1020 (மாலை எனவே 5 உடன் 12 யை கூட்டி 17 ஆக அதனுடன் 60  ஆல் பெருக்க வேண்டும் )
பிறந்த மாதம் ( 7- அதாவது ஜூலை) 
அதன் மாத  எண்  = 6
பிறந்த நேரத்தின் நிமிடம் = 15 
அதாவது ,
12 (3 x 4) + 1020(17x60) + 6(மாத  எண்) + 15(பிறந்த நேரத்தின் நிமிடம்) எல்லாவற்றையும் கூட்ட 
= 12 + 1020 + 6 + 15 = 1053 (இந்த எண்  எந்த லக்ன எண்ணில் வருகிறது என்பதினை அட்டவணையில் பார்க்கவும் )
அட்டவணைப்படி விருச்சிகத்தில் வருகிறது .
எனவே இந்நேர டைம் படி இது விருச்சிக லக்னம் ஆகும் .
 
இப்படி கூட்டி வரும் தொகை 1440 - க்கு மேல் வருமானால் அத்தொகையிலுருந்து  1440 - தை கழிக்க மீதம் வரும் தொகை எதுவோ அது, எந்த லக்ன எண்ணிலுக்குள் வருகிறதோ அதுவே அந்த லக்னமாகும் 
உதாரணம் - 3
29 -7-1980  நேரம் மாலை  11 – 50 P.M ( அதாவது மாலை 11 மணி 50 நிமிடம்)
பிறந்த தேதி 29 x 4 = 116
பிறந்த நேரம்  23 x 60 = 1380 (மாலை எனவே 11 உடன் 12 யை கூட்டி 23 ஆக அதனுடன் 60  ஆல் பெருக்க வேண்டும் )
பிறந்த மாதம் ( 7- அதாவது ஜூலை) 
அதன் மாத  எண்  = 6
பிறந்த நேரத்தின் நிமிடம் = 50
அதாவது ,
116 (29 x 4) + 1380(23x60) + 6 (மாத  எண்) + 50 (பிறந்த நேரத்தின் நிமிடம்) எல்லாவற்றையும் கூட்ட 
= 116 + 1380 + 6 + 50 = 1552 (இந்த தொகை 1440 - க்கு மேல் வருகிறது எனவே இந்த தொகையிலுருந்து  1440 - தை கழிக்க மீதம் வரும் தொகை(1552 -  1440) = 112
(இந்த எண்  எந்த லக்ன எண்ணில் வருகிறது என்பதினை அட்டவணையில் பார்க்கவும் )
அட்டவணைப்படி மேஷத்தில் வருகிறது .
எனவே இது மேஷ லக்னம் ஆகும்.
நன்றி: யுனிவேர்சல் ரிசர்ச் அகாடமி 
 
 
19 கருத்துரைகள்:
Beautiful narration ji
அருமை. அருமையிலும் அருமை . computer வருவதற்கு முன்னாலேயே நம் முன்னோர் கடின கணக்குகளையும் எளிமைப்படுத்தினர். ஆனால் நமக்கு தற்போது தேவை இல்லை என்பதால் யாரும் கவனம் செலுத்துவதில்லை . ஜோதிட ஆர்வலர்களுக்கு இது போன்ற சூட்சுமங்கள் சூத்திரங்கள் ஒரு பொக்கிஷம் ஆகும் . இதை வெளிக்கொணர்வது ஒரு மகத்தான பணி. இப்பணி மேன்மேலும் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
Really awesome calculation
அண்ணே! என் பிறந்த தேதி 29.6.1976 மாலை 7:20 ஆனா லக்கினம் இடிக்குதே 2603 அது அட்டவனையில் காணோமே! விளக்கம் ப்ளீஸ்!
அண்ணே! என் பிறந்த தேதி 29.6.1976 மாலை 7:20 ஆனா லக்கினம் இடிக்குதே 2603 அது அட்டவனையில் காணோமே! விளக்கம் ப்ளீஸ்!
@RATHINAM
இப்படி கூட்டி வரும் தொகை 1440 - க்கு மேல் வருமானால் அத்தொகையிலுருந்து 1440 - தை கழிக்க மீதம் வரும் தொகை எதுவோ அது, எந்த லக்ன எண்ணிலுக்குள் வருகிறதோ அதுவே அந்த லக்னமாகும் 2603-1440=1163 (இ து தனுசு லக்னத்தின் 1084-1208 ல் வருகிறது) எனவே இது தனுசு லக்கினம் ஆகும்
ஐயா,
வணக்கம்.
உதாரணம் - 1
உதாரண பிறந்த தேதியும் நேரமும்
1-7-1980 நேரம் காலை 5 – 15 A.M ( அதாவது காலை 5 மணி 15 நிமிடம்)
பிறந்த தேதி 1 - தை 4 ஆல் பெருக்கி கொள்ளவும் . வருவது 4 ஆகும் .(1 x4 = 4)
பிறந்த நேரம் 5-தை 60 ஆல் பெருக்கி கொள்ளவும் (காலை எனில் அப்படியே 60 ஆல் பெருக்கி கொள்ளவும் , மாலை எனில் நேரத்தின் மணியினை மட்டும் ரயில்வே டைமாக மாற்றி , அதாவது 12 உடன் கூட்டி வந்த தொகையினை 60 ஆல் பெருக்கி கொள்ளவும் )
பிறந்த தேதி 1 x 4 = 4
பிறந்த நேரம் 5 x 60 =300
பிறந்த மாதம் ( 7- அதாவது ஜூலை)
அதன் மாத எண் = 6
பிறந்த நேரத்தின் நிமிடம் = 15
இதில் அதன் மாத எண் = 6 என்றால் என்ன?
அருமை நன்றி
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. மிக மிக நன்று.
நன்றிகள் பல.
மாத எண்கள் எதற்கு
2603 ஐ 1440 ஆல் கழித்து மீதி வரும் என்னை அட்டவணையில் காணலாம்
சூப்பர் சூப்பர் சூப்பர்
இங்கு longitude, latitude சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இது இந்தியா மற்றும் இலங்கை போன்ற
நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
Mantri iyya.
Super
லக்னத்தில் இருப்பு அது எப்படி சார் கண்டுபிடிக்க லாம்
13.08.1981 please Laknam?
ஐய்யா என் பிறந்த தேதி 06/09/1970, நேரம் இரவு 9.15 தங்கள் கல்கஉலஏசன் படி மகரம் லக்னம் வருது ஆனால் என் ஜாதகத்தில் மேஷம் லக்னம் போட்டு இருக்காங்க தயவு செய்து விளக்கவும்
Super
Post a Comment