
தமிழக
அரசின் கல்பனா சாவ்லா
விருது பெற்ற வட்டாட்சியர்
சுகிபிரமிளா,
தனக்குக்
கிடைத்த பரிசுத் தொகையை
தனது நடவடிக்கைகளுக்குத் துணை புரிந்த
ஊழியர்கள்
இருவருக்கு
வழங்கி அந்த விருதுக்கே
பெருமை சேர்த்துள்ளார்.
குமரி
மாவட்ட உணவுக் கடத்தல்
தடுப்புப்
பிரிவு பறக்கும் படை
வட்டாட்சியராகப்
பணிபுரிந்து
வருபவர் சுகிபிரமிளா. இவர் விளவங்கோடு
வட்ட வழங்கல் அலுவலராக
சுமார் 15 மாதம் பணிபுரிந்தார்.
அப்போது கேரளத்துக்கு கடத்த முயன்ற
107 டன்
ரேஷன் அரிசி, 20 ஆயிரம்
லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் 1500 கிலோ
வெடிபொருள்கள்
ஆகியவற்றை
அதிரடியாகப்
பறிமுதல்
செய்தார்.
இவரது
துணிச்சலான
நடவடிக்கைகளைப்
பாராட்டி
இவருக்கு
கல்பனா சாவ்லா விருது
அறிவிக்கப்பட்டது.
சென்னையில்
நடைபெற்ற
சுதந்திர
தின விழாவில், வட்டாட்சியர்
சுகிபிரமிளாவுக்கு
விருதுடன்
ரூ.5 லட்சம் ரொக்கப்
பரிசை முதல்வர்...