Thursday, August 1, 2013

துபாயில் புகை பிடிப்பதற்கு எதிராக பிரசாரம் செய்த இந்தியர் மரணம்

இந்தியாவை சேர்ந்த ஆப்ரஹாம் சாமுவேல் (53) தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் துபாயில் வசித்து வந்தார். அங்கிருந்த ஸ்டேஷனரி கடை ஒன்றில் அவர் பணிபுரிந்து வந்தார். 35 வருடங்களாகத் தினமும் இரண்டு பாக்கெட் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த சாமுவேலிற்கு, கடந்த 2010-ம் ஆண்டில் தனக்கு நுரையீரல் புற்றுநோய் தாக்கியுள்ளது தெரியவந்தது.



இந்த நோய் பற்றி அறிந்ததும் துக்கத்துடன் வீட்டிற்குள் முடங்கிவிடாமல் சாமுவேல், புகைப் பழக்கத்திற்கு எதிராக வித்தியாசமாக பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். தெருவில் செல்லும்போது யாராவது புகை பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க நேரிட்டால், அவர்களிடம் சென்று புகை பிடிப்பதால் வரும் தீமைகளை எடுத்துக்கூறி புகைப்பழக்கத்தை நிறுத்துமாறு வேண்டுவார்.

அவர்கள் அதனைக் கேட்காமல்போனால் தன்னுடைய சட்டையை அவிழ்த்து புற்றுநோய்க்காக தான் மேற்கொண்ட கதிரியக்க சிகிச்சையின் விளைவாக தனது மார்பில் உள்ள வடுக்களைக் காட்டுவார். இந்த செயல் அவருக்கு சிகரெட்டைத் தட்டிப்பறிப்பவர் என்ற பட்டப்பெயரையும் வாங்கித்தந்தது. தான் உயிருடன் இருக்கும்வரை இந்த சேவையை செய்யவேண்டும் என்று சாமுவேல் நினைத்தார். இவருடைய இந்த செயலால் பலர் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட்டனர்.
இதைப் பற்றி படித்தபின்னர் புகைப்பழக்கத்தை விட்டதாகவும் ஒருவர் பத்திரிகை வாயிலாகத் தெரிவித்துள்ளார். மற்றவர்களின் ஆரோக்கியத்திற்காகப் பிரசாரம் செய்த சாமுவேல், இரண்டு வாரங்களுக்கு முன்னர் நோயின் தாக்கம் அதிகமாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்காக இந்தியா வரவிரும்பாத  இவர், கடந்த ஞாயிறன்று மரணமடைந்தார்.

பல மாதங்கள் அவரால் வேலைக்கு செல்லமுடியாத நிலையில் இருந்தபோதுகூட, அவரது ஆதரவாளர் அவர் மீது இரக்கப்பட்டு அவரது விசாவை ரத்து செய்யாமல் வைத்திருந்தார்.

நன்றி : தினத்தந்தி நாளிதழ் 
தன் தவறினை உணர்ந்து மேலும் அத்தவறால்  வேறு யாரும் பாதிக்கப்படக் கூடாது எனும் மிக உயர்ந்த எண்ணம் மனிதனை புனிதனாக்குகிறது.
 - சுவாமி யோகமாயனந்தா

19 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சம்பவம் வருத்தப்பட வைக்கிறது....

PR Munda said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

this news really impressed me and very sad about Mr.Sameul.

thanks for your information sankar

Jamee lavin said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தன்னை அறிந்தவன் உலகை அறிவான் . உண்மை

Avargal Unmaigal said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சாகும் போது சங்கரா சங்கரா என்று சொல்வது இப்படிதானோ?

Arrow Sankar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உங்கள் வருகைக்கு நன்றி.உங்களது கமென்ட்க்கும்.

JOHN FEET said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தனக்கு ஒரு கண் போனால் மற்றவருக்கு இரு கண்ணும் போகணும்னு நினைப்பவர் நடுவில் மற்றவருக்கு ஒரு கண்ணும் போகக்கூடாதுன்னு நினைத்த சாமுவேல் விண்ணுலகில் வாழ்வார்

sasi kumar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

kind heart person.

Rasikka Padikka said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஜமீலா மேடம் சொன்னது போலே "தன்னை அறிந்தவன் உலகை அறிவான்"

bushrocket said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

புகை நமக்கு பகை ,அதை எடுத்துரைத்த சாமுவேல் மிகை

jameela said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நோயின்றி வாழவும் வாழ வைக்கவும் முயலும் மனிதர்கள் ஒரு சிலரே.

Jamee lavin said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
This comment has been removed by the author.
Rasikka Padikka said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மனிதனுக்கு மனிதன் உதவுவது மனித இயல்பு

matter masala said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நோய்களை தவிர்க்க மனித சமுதாயம் சொல்லும் நெறிமுறைகள் பலவும் பாதிக்கப்பட்ட மனிதன் தான் செய்ய வேண்டும் என்று இல்லை .எல்லோருக்கும் கடமையே. ஆனாலும் திரு சாமுவேலின் பணி பாராட்டத்தக்கது

rasiganin rasigan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மேட்டரையே மேட்டர் ஆக்குற ப்ளாக் கிங் ARROW அவர்களே, சாமுவேலின் பணி உங்கள் மூலமாக தொடர்கிறது

aturview said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மொத்தத்தில் ஒரு பல்சுவை நாளிதழ் மாதிரி இருக்கு உங்க ப்ளாக்

அன்பு ராஜன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சாரி ரொம்ப பிஸிய இருந்துட்டேன் ,விஷயம் படிச்சேன் ,வருத்தமா இருக்கு

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அரசுகள் மக்களின் நலனுக்காகவே - புகை இலை விளைவிப்பு, சிகரெட் தொழில் கூடம், தடைசெய்யப்படவேண்டும்.

மக்கள் சக்தி இயக்கம்
கா.பெருமாள்

LAKSUNS said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நன்றி உங்கள் வருகைக்கு .மேலும் உங்களது மேலான கருத்துக்களை இனி வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்ளலாம்

Arrow Sankar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நன்றி உங்கள் வருகைக்கு .மேலும் உங்களது மேலான கருத்துக்களை இனி வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்ளலாம்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms