Tuesday, September 23, 2014

முதியோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் 05.01.2014


ஒரு குட்டி கதை
ஒரு நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அந்த நாட்டில் உணவுப் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டார்கள். இதனால் அந்நாட்டு அரசனிடம் சென்று முறையிட்டார்கள்.

பஞ்சத்தைத் தீர்க்க அரசனும் யோசித்தான். அவனுக்கு மிகவும் மோசமான யோசனை தோன்றியது. 

மக்கள் தொகை குறைந்தால் பஞ்சமும் குறையும் என்று நினைத்தான். 

"எழுபது வயதுக்கு மேல் உள்ள பெரியவர்கள் யாரும் உயிருடன் இருக்கக் கூடாது. அவர்களுக்கு வேலை செய்யும் ஆற்றல் இல்லை. ஆனால் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் பஞ்சம் ஏற்படுகிறது. எனவே எழுபது வயதுக்கு மேலிருக்கும் அனைவரையும் கொன்றுவிட வேண்டும் என்று உத்தரவிட்டான். 

மக்கள் அனைவரும் அழுது புலம்பினார்கள். 

அரசனின் உத்தரவை மீற முடியாமல் வீட்டிலிருந்த பெரியவர்களைக் கொன்று புதைத்தனர். 

பிறகும் பஞ்சம் தீர்ந்தபாடில்லை. 

மக்கள் தாங்கள் வைத்திருந்த விதை நெல்லை அவித்து, அரிசியாக்கிச் சாப்பிட்டார்கள். 

திடீரென்று மழை வரும் போல் தோன்றியது. 

ஒருவன் மட்டும் தனது தந்தையை யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்த பாதாள அறையில் மறைத்து வைத்திருந்தான். 

அவன் தந்தையிடம் சென்று, "அப்பா! மழை வரும் போலிருக்கிறது. ஆனால் விதைக்க விதை நெல் இல்லை" என்று வருத்தத்துடன் சொன்னான். "கவலைப்படாதே மகனே" என்ற பெரியவர் "நீ உன் நிலத்தை உழுது போடு" என்றார். அதன்படி அவனும் நிலத்தைம் உழுதான். 

அடுத்த நாள் மழை பெய்தது. இரண்டு நாட்களில் பயிர் முளையிட்டது. செழிப்பாக வளர்ந்தது. அந்த ஊருக்கே சாப்பாடு போட்டது. 

அரசன் மிகவும் மகிழ்ந்து போய் அவனை அழைத்து வரச் செய்தான். "விதைக்காமல் உன் நிலம் எப்படி விளைந்தது?" என்று கேட்டான். 

என் அப்பா சொன்னபடி செய்தேன். நிலத்தில் பயிர் விளைந்தது. என்றும் தன் தந்தையை வீட்டில் பாதாள அறையில் மறைத்து வைத்திருக்கும் தகவலையும் சொன்னான்.

பெரியவரை அழைத்து வரும்படி தனது வீரர்களிடம் தெரிவித்தான். அவர்களும் போய் அழைத்து வந்தார்கள். 

அரசன் அந்தப் பெரியவரிடம், "விதையில்லாமல் நிலத்தை வெறுமனே உழுது போட்டால் பயிர் முளைக்கும் என்று எப்படி சொன்னீர்கள்?" என்று கேட்டான். 

"எலிகளும், எறும்புகளும் தங்கள் தேவைகளுக்காக தானியங்களைச் சேர்த்து வைத்திருக்கும். அந்நிலத்தை உழும் போது அவை எல்லாம் வெளியில் வந்துவிடும். மழை பெய்ததும், பயிராகி விடும்" என்றும் பெரியவர் சொன்னார்.  

"ஆ, இப்படி அரிய பல யோசனைகளை அனுபவப்பூர்வமாகச் சொல்லும் பெரியவர்களை எல்லாம் கொல்லும்படி உத்தரவிட்டுத் தவறு செய்து விட்டேனே.." என்று அரசன் வருந்தினான்.

animated-elderly-image-0010animated-elderly-image-0060 ********************************************************************************
உலக முதியோர் தினத்தினை (அக்டோபர்-01) (International Day of Older Persons) முன்னிட்டு ஜெயம் ஹோம் ஹெல்த்கேர் (JAYAM HOME HEALTH CARE) சார்பில் முதியோருக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்  நடத்தப்படுகிறது.

நாள் : 05.01.2014 (ஞாயிறு கிழமை)
இடம் : ஜெயம் பாலி கிளினிக் & நர்சிங் ஹோம்.
58, மகாத்மா காந்தி சாலை,
திருவான்மியூர்,சென்னை – 600041.

JAYAM POLY CLINIC & NURSING HOME
58, MAHATMA GANDHI ROAD(M.G.ROAD)
THIRUVANMIYUR, CHENNAI-600041.

* இலவச எலும்பு (கால்சியம்) பரிசோதனை

* நிமோனியா தடுப்பு ஊசி(சலுகை விலையில்)

* இலவச கண் மருத்துவ பரிசோதனை

* மருத்துவர்கள் வீட்டில் வந்து பார்க்க இலவச முன்பதிவு
  
> முன்பதிவு செய்ய & தொடர்பு கொள்ள  :           044 - 4558 7536
044 -  4558 7537


அனைத்துலக முதியோர் நாள்

ஐக்கிய நாடுகள் அவை  அறிவித்துள்ளபடி   முதியோர் தினம்  (International Day of Older Persons) உலகம் முழுவதும் அக்டோபர் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

நோக்கம்

உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவை களை   நினைவு கூறும் வகையிலும், அவர்களின்  அறிவு, ஆற்றல்  மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக காணப்படுகிறது.

முதியோர் நலன்

பொதுவாக 60 வயதை கடந்த ஆண், பெண் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்லது முதியோர் என்று கருதப்படுகின்றனர். அவர்கள் நலனை பாதுகாக்கவும், அவகளின் உரிமைகளை மதிக்கவும் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

உலக அளவில்

1991 -ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் அவை அறிவுறுத்தலின் படி, கீழ்க்கண்டவை முதியோர்களுக்கான அத்தியாவசிய விதிமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
·                    அனைத்து முதியோர்களுக்கும் உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் போன்றவை கிடைக்கப்பெற வேண்டும்.
·                    வாழ்வதற்க்கான நல்ல சூழலை உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு வைப்புகள் வழங்கப் பட வேண்டும்.
·                    அவர்களை பாதிக்ககூடிய எந்த கொள்கை முடிவுகளிலும் அவர்களின் கருத்துக்களுக்கு அரசுகள் மதிப்பளிக்க வேண்டும்.
·                    சமூகத்திற்கு சேவை புரியவும் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.
·                    சமூக மற்றும் சட்டப் பாதுகாப்புகள் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
·                    மனித உரிமை மற்றும் அடிப்படைச் சுதந்திரத்தை அவர்களும் அனுபவிக்க வேண்டும்.
இவை அனைத்து நாடுகளுக்கும் பொதுவான வரைமுறை ஆகும்.

இந்திய அளவில்

பெற்றோர் மற்றும் மூத்தகுடி மக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம், 2007, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் தேவையான பராமரிப்பை உறுதி செய்கிறது. இதுவரை 23 மாநிலங்கள், அனைத்து ஒன்றியப் பிரதேசங்களும் இச்சட்டத்தை நடைமுறைபடுத்தி உள்ளன. இதில் 13 மாநிலங்கள் அதாவது சட்டீஸ்கர், கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஓடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, திரிபுரா, மற்றும் மேற்கு வங்காளம், மற்றும் ஒரு யூனியன் பிரதேசமான புதுடில்லி ஆகியவை இந்த சட்டத்தின் படி விதிகளை முறைப்படுத்தி உள்ளன. மீதமுள்ள மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்கள் இந்த சட்டத்தின் விதிகளை முறைப்படுத்தவும், இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் விரைந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுள்ளது.
இந்த சட்டம் வழங்குவது :
·                    தீர்ப்பாயங்கள் மூலம் சட்டரீதியான மற்றும் கட்டாயமான குழந்தைகள் / உற்றார் மூலம் பெற்றோர் மற்றும் மூத்தோர் நலன். பராமரிப்பு
·                    உறவினர்களால் ஒதுக்கப்பட்ட மூத்த குடிமக்களின் சொத்துக்களை மீண்டும் ஒப்படைத்தல்.
·                    கைவிடப்பட்ட மூத்த குடிமக்களுக்கு சட்டப்படியான பாதுகாப்பு வழங்கல்.
·                    மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு இல்லங்கள் நிறுவுதல்.
·                    மூத்த குடிமக்களின் சொத்துக்கள் மற்றும் தேவையான உயிர் பாதுகாப்பு மருந்துகள் கிடைக்க செய்தல்.

தமிழ் நாட்டில் முதியோர் நலத்திட்டங்கள்

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் போக தமிழ்நாடு மாநில அரசின் சார்பிலும் முதியோர் நலன் காக்க பல்வேறு திட்டங்கள் நடைபெறுகின்றன.
·                    65 வயதை கடந்த ஆதரவற்றோருக்கு மாத மாதம் ரூ.500 முதல் ரூ.1000 வரை உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
·                    இலவச மத்திய உணவு திட்டமும், இலவச அரிசித் திட்டமும் முதியோர்களுக்கு தனியாக வழங்கப்படுகிறது.
·                    அரசு மருத்துவமனைகளில் முதியோர்களுக்கு தனி படுக்கை மற்றும் மருத்துவ வசதி செய்ய நிதி ஒதுக்கீடு செய்கிறது.-Arrowsankar

1 கருத்துரைகள்:

வை.கோபாலகிருஷ்ணன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிகவும் பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms