Wednesday, September 24, 2014

இந்தியனாய் பெருமிதம் கொள்வோம்


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (INDIAN SPACE RESEARCH ORGANISATION (ISRO)) சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய மங்கள்யான்விண்கலம் உருவாக்கப்பட்டு 2013-ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 




ரூ.460 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் 300 நாட்களுக்கும் அதிகமாக விண்ணில் பயணம் செய்து திட்டமிட்டப்படி இன்று காலை சரியாக 7.17 மணிக்கு செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.

அப்போது அதில் உள்ள லாம் என்ஜின் மற்றும் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள 8 சிறிய என்ஜின்கள் 24 நிமிடங்கள் எரியூட்டப்பட்டு அதன் வேகத்தை குறைத்து செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. 

இந்த அரிய நிகழ்வை பெங்களூர் பீனியாவில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி நேரில் பார்வையிட்டார்.

விண்கலத்தில் உள்ள முக்கிய என்ஜினை நேற்று இயக்கி சோதனை செய்து பார்க்கப்பட்டது. அது வெற்றிகரமாக அமைந்தது. மேலும் ஒரு சிறிய திருத்தம் செய்யப்பட்டு அந்த விண்கலம் சரியான திசையில் திருப்பி விடப்பட்டது. 

அந்த விண்கலம் தற்போது வினாடிக்கு 22.1 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. அதிகாலை அந்த பயண வேகம் வினாடிக்கு 4.4 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டு செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.

மங்கள்யான் விண்கலம் 300 நாட்களுக்கு மேல் பயணம் செய்து இலக்கை எட்டி உள்ளது. முதல் முயற்சியிலேயே மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தி வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

மங்கள்யான் விண்கல திட்டம் வெற்றி பெற்றதற்கு அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜெட் பிரோபல்சன் ஆய்வுக்கூடம் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மங்கள்யான் விண்கலம், 1,350 கிலோ எடை கொண்டது. ரூ.460 கோடி மதிப்பிலானது. (கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீஹரிஹோட்டா சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஹாலிவுட் படமான கிராவிட்டி தயாரிக்கப்பட்ட செலவை விட  மங்கள்யான் தயாரிக்க ஆன செலவு குறைவு என்றும் இது மிகச்சிறந்த சாதனை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.) இத்திட்டத்தில் 500 விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்தத் திட்டத்தை "மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்" (செவ்வாய் சுற்றுவட்டத் திட்டம்) (MARS  ORBITER MISSION ) என இஸ்ரோ குறிப்பிடுகிறது.




zwani.com myspace graphic comments
www.arrowsankar.blogspot.in

-Arrowsankar

13 கருத்துரைகள்:

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

"we are the first country to reach in first attempt"

ISRO creates history

-Anand

Rathi Manohar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

YES WE MADE IT.

KOOTHIKKA KAMAL said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

VERY PROUD

RAJAGOPAL VARADHACHARI said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

VERTI NITCHAYAM, ATHUVE NAMATHU THATTHUVAM

AKALYA SAROJA(AS) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

WE DONE IT- WE PROVED IT- WE ENJOY IT. BE INDIAN

சுபத்ரா வெங்கட் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வெற்றி நமதே ,நாளை நமதே.

தமிழ்செல்வன்,தஞ்சை said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்பி வெற்றி பெற்று இருப்பதன் மூலம் நமது இந்தியா வரலாறு படைத்து இருக்கிறது .வணக்கம் சங்கர் சார்.உங்கள் பதிவுகள் அனைத்துமே நான் படித்து வருகிறேன் .நன்றாக உள்ளது .

கல்பனா ஜெயராம் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முதல் முயற்சியிலேயே நமது விஞ்ஞானிகள் இதை சாதித்து உள்ளார்கள். இது உலகிலேயே முதல்முறை என்பது இன்னும் பெருமைபடக்கூடிய அம்சமாகும். இன்று வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. இது உலக அரங்கில் இந்தியாவுக்கு தனி இடத்தை பெற்று தந்துள்ளது.இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்ளுவோம்

ரவி மரியன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வாழ்த்துக்கள்.

ஜமீலா யூசுப் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிக்க மகிழ்ச்சியான பெருமையான விஷயம். விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்

- அப்துல் கலாம் மன்றம்

அன்பு ராஜன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இந்த சாதனையை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் காலடியில் எனது வாழ்த்து மலர்களை தூவுகிறேன். நமது விஞ்ஞானிகள் தங்களது அறிவாற்றலால் கடின உழைப்பால் இதனை சாதித்து உள்ளனர். இது முடியாததை செய்து முடிக்கும் குணாதிசயத்தை காட்டுகிறது. நமது விஞ்ஞானிகளை தவிர இதுவரை யாரும் இதுபோன்ற ஆர்வம்காட்டவில்லை. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு மைல்கல் ஆகும். முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்பி வெற்றி பெற்று இருப்பதன் மூலம் இந்தியா வரலாறு படைத்து இருக்கிறது

அன்பு ராஜன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

[URL=http://www.animatedimages.org/cat-hands-81.htm][IMG]http://www.animatedimages.org/data/media/81/animated-hand-image-0016.gif[/IMG][/URL]

ஹ ர ணி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

anbulla

vanakkam. intha tharunam mikavum perumaikkuriya tharunam. naam indian aaka iruppathil perumitham kolvom.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms