வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Tuesday, November 25, 2014

படகோட்டி பிரார்த்தனை

ஒரு கடலோர நகரில் ஒரு வயதான ஆனால் திறமையான படகோட்டி இருந்தார்.  தினமும் படகில் மக்களை அருகிலுள்ள தீவுக்கு அழைத்துச் சென்று திரும்பி வருவது அவரது தொழிலாகும். ஒரு நாள் சில இளைஞர்கள் அவரது படகில் பயணம் செய்தனர். படகை கிளப்பும் முன் படகோட்டி கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்தார். கடலும் வானமும் அமைதியாக இருந்த அந்த நேரத்தில் பிரார்த்தனை செய்த அவரை பயணிகள் சிரித்து கிண்டல் செய்தனர். அதை பொருட்படுத்தாமல் படகோட்டி படகை கிளப்பினார்.  படகு நடு கடலை அடைந்தபோது திடீரென்று புயல் வந்தது. படகு மேலும் கீழும் ஆடி தத்தளித்தது. பயந்து போன பயணிகள் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்தனர். படகோட்டியையும் பிரார்த்தனை செய்ய அழைத்தனர். அதற்கு படகோட்டி இப்பொழுது படகை சரியாக செலுத்துவதே எனது கடமையாகும். அதை மட்டுமே செய்வேன் என்றார். சிறிது நேரத்திற்கு...

Thursday, November 20, 2014

கிருஷ்ணருக்கு உலகிலேயே மிகப்பெரிய கோவில்: மதுரா அருகே கட்டப்படுகிறது

மாதிரி தோற்றம் பெங்களூரைச் சேர்ந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தினரான ‘இஸ்கான்’ அமைப்பினர் உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே பிருந்தாவனத்தில் கிருஷ்ண பகவானுக்காக மிகப்பெரிய கோவிலை ரூ.300 கோடி செலவில் கட்ட முடிவு செய்து உள்ளனர். ‘பிருந்தாவன் சந்திரோதய மந்திர்’ என்று அழைக்கப்படும் இந்த கோவிலின் உயரம் 700 அடியாக இருக்கும்.  கோவில் கட்டி முடிக்கப்படும் போது இது உலகில் உள்ள எல்லா கோவில்களையும் விட மிக உயரமானதாக இருக்கும். இந்த கோவிலின் அடிக்கல் நாட்டு விழா கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி நடந்தது. மேலும் நேற்று கோவிலில் நடந்த அனந்த சேஷ ஸ்தாபன பூஜையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடங்கிவைத்தார்.  மகாபாரத இதிகாசத்தின்படி பிருந்தாவனத்தில் கிருஷ்ண பகவான் எவ்வாறு வசித்தாரோ அதுபோன்ற சூழல் உணர்வை ஏற்படுத்தும் விதமாக 26 ஏக்கர் நிலப்பரப்பில் 70 அடுக்குமாடிகளைக் கொண்டதாக...

Saturday, November 15, 2014

ஆயுள் ஸ்திர தந்திர வழிபாடு:

ஆயுள் ஸ்திர தந்திர வழிபாடு: பஞ்சாங்க சுத்தியுள்ள சனி, செவ்வாய், திரயோதசி திதி ஆகிய தினங்களில் ஏதேனும் ஒருநாளில் இந்த வழிபாட்டைச் செய்யலாம். ஸ்ரீதன்வந்த்ரி பகவான், விஷ்வக்சேனர், ஆயுள்தேவி வர்தனீ தெய்வங்களை கலசங்களில் ஆவாஹனம் செய்ய வேண்டும். ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், சித்தரத்தை, அதிமதுரம், வெட்டிவேர், விளாமிச்சை வேர் கலந்து ஒன்றாக்கிப் பொடி செய்து, சுத்த நீருடன் கலந்து, கலசங்களில் சேர்த்து முறைப்படி பூஜிக்க வேண்டும். 9 செங்கற்களை செவ்வகமாக வைத்து யாக மேடை அமைத்து, 64 யாக மூலிகைகளுடன் நவ சமித்துகள், சீந்தில் கொடி, நாயுருவி, குங்கிலியம் ஆகியவற்றுடன் நெய் சேர்த்து அக்னி ஹோமம் செய்ய வேண்டும். 1. ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய பரம புருஷாய சுக சௌக்ய வர்த்தநாய ரோக நாசநாய ஆயுர் விருத்தி கராய ஒளஷத ரூபிணே...

மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள்

மாத்ரு பஞ்சக  ஸ்லோகங்கள் ''அம்மா   எனக்கு  சன்யாசம் பெற்றுக்கொள்ள ரொம்ப  விருப்பமாக  இருக்கிறதே'' என்  கண்ணே,  இருப்பது  நீ  ஒருவனே.  உன்  தகப்பனாரும்  என்னை விட்டுச் சென்று விட்டார்.  பல  வருஷம் தவமிருந்து  வடக்கு நாதன்  அருளால்  நீ பிறந்தாய்.  கண்ணை  இமை காப்பது போல் உன்னை  வளர்த்தது நீயும்  என்னை விட்டுபிரிந்து  போவதற்காகவா?  இதற்கா  பெற்றேன்.   நீ  சந்நியாசியாவது  நான் உன்னை  உயிருடன் இழப்பதற்கல்லவோ சமமாகும்? நீ  தாய்  என்பதோ  நான்  ஒரு நேரத்தில்  உன்  மகன்  என்பதோ  பிரிபடும்  உறவோ? உடலால்  பிரிந்தாலும் ...

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms