Sunday, November 9, 2014

வியாபார முன்னேற்றத்திற்கு விநாயகர் ஸ்லோகம்


வியாபார முன்னேற்றத்திற்கு விநாயகர் ஸ்லோகம்




ஓம் கம் கணபதயே, உத்யோகலாபம், வித்யா லாபம் குருதே நமக'
- என்று 108 தடவை ஜபம் செய்தபின் கையில் மலர்கள் எடுத்துக் கொண்டு தன்னையே சுற்றி வருகின்ற ஆத்ம பிரதட்சிணம் செய்து- கலசம் மற்றும் வைக்கப்படும் சிறு சிலை மேல் (பிரதீமை என்றும் சொல்வர்) போட்டு விழுந்து வணங்குதல் வேண்டும்.

அடுத்தபடியாக, விநாயகருக்கு மங்கள ஆரத்தியை செய்யலாம்.

ஓம் தத்புருஷாய வித்மகே வக்ர துண்டாய தீமகி
தந்தோ கணேச ப்ரசோதயாத்- கற்பூர ஜோதிம் தர்சயாமி


- என்றோ அல்லது அழகு தமிழில்

ஜோதி ரூபனே கணேஸ்வரா
ஜோதி மைந்தனே சர்வேசா!
ஆனை முகத்தவா கணேஸ்வரா
ஆனந்த ஜோதி கணேஸ்வரா!
அழகன் அண்ணா கணேஸ்வரா!
ஆதி நாதனே ஆனைமுக!
மங்கள ஜோதி கணேஸ்வரா!
பணிந்தோம் ஏகதந்தேஸ்வரா!
தீப மங்கள் கணேஸ்வரா!
என்றும் மங்களம் கணேஸ்வரா!
பிறகு ஆரத்தி, விபூதி, குங்குமம் எடுத்துக் கொண்டு வந்திருப்பவர்கள் யாராயினும் இருந்தால் கொடுக்கவும். முதல் விரத பூஜை காலத்தில் ஒரு 7 வயது சிறுவனை மனைப் பலகையில் அமர வைத்து மஞ்சள், சந்தனம் கொடுத்து தட்டில் மூன்று பழங்கள், பாயாசம் தாம்பூலம் முடிந்த அளவு 5, 10 ரூபாய் காசுகள் வைத்து
- விநாயகராக அந்த சிறுவனை நினைத்து வணங்கி தானம் கொடுக்க வேண்டும். அப்போது தான் விரத பூஜையில் தவறு இருந்தால் அவர் ஏற்றுக் கொள்வதாக ஜதிகம்.

-Arrowsankar

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms