
கண்ணாடி - வெறும் கண்ணாடி அல்ல!
அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி.அடிக்கடி அதைப் பார்ப்பார்.பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்.
பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறுகுறுப்பு…!‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான்இருக்கிறது?
பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!
ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’ அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பெரியவரை நெருங்கினான்.
“ஐயா…!”
“என்ன தம்பி?”
“உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே?”
“ஆமாம்!”
“அதில் என்ன தெரிகிறது?”
“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்!”
“அப்படியானால் சாதாரணக் கண்ணாடிதானே அது?”
“ஆமாம்!”
“பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”
பெரியவர் புன்னகைத்தார்.
“சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அது தரும் பாடங்கள்...