Thursday, January 22, 2015

கண்ணாடிப் பாடம்


கண்ணாடி - வெறும் கண்ணாடி அல்ல!


அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி.அடிக்கடி அதைப் பார்ப்பார்.பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்.

பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறுகுறுப்பு…!‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான்இருக்கிறது

பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!  ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’ அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பெரியவரை நெருங்கினான்.

ஐயா…!”

என்ன தம்பி?”

உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே?”

ஆமாம்!

அதில் என்ன தெரிகிறது?”

நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்!

அப்படியானால் சாதாரணக் கண்ணாடிதானே அது?”

ஆமாம்!

பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

பெரியவர் புன்னகைத்தார்.

சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய!

பாடமா…! கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?”

அப்படிக் கேள். நாம்  ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள் . என்ன புரிகிறதா?

எனக்கு ஒன்றும் புரியவில்லை!,என்ன,எப்படி?”

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால்
கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?

ஆமாம்

அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!

அடடே…! வெரி இன்ட்ரஸ்டிங்! அடுத்து…?”

கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால்கண்ணாடி மௌனமாகிவிடும். இல்லையா?”

ஆமாம்!

அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!

கிரேட்! அப்புறம்?”

ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”

இல்லையே…! மாறாக அந்தக் கண்ணாடியைப் பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!

சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ,எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது  கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!

ஐயா…! அருமையான விளக்கம். கண்ணாடியில் இத்தனை கருத்துகளா…! அப்பப்பா!

யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்!

இனி கண்ணாடி முன்னால் நின்று என் முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் என் மனத்தை அலங்கரிக்கும்!
என்றான் பக்கத்து வீட்டு இளைஞன்.

பெரியவர் இளைஞனின் முதுகில் செல்லமாய்த் தட்டிக் கொடுத்தார்.

நன்றி :K.J சுரேஷ், வாலாஜாவாட்ஸ் அப் (Whats up)மூலம் பகிர்வு

Print Friendly and PDF

14 கருத்துரைகள்:

அன்பு ராஜன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எங்கிருந்துதான் இந்த மாதிரியான நல்ல மேட்டர் உங்களுக்கு கிடைக்குதோ, சூப்ப்ப்ப்ப்பர்

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிக நல்ல கண்ணடிப் பாடம்.
இப்படி வாழ்ந்தாலே போதும்.
பல நன்மைகள் விளையும்.
மிக்க நன்றி. சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கண்ணாடிப் பாடம்.,,என்று திருத்தி வாசிக்கவும். அல்லது பதிவாளர் திருத்தி விடவும்.
நன்றி.
வேதா. இலங்காதிலகம்.

Palaniraj K said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Thank you, learned good things from this.

Arrow Sankar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நன்றி திருமதி வேதா. இலங்காதிலகம்.அவர்களே ,உங்கள் அறிவுரைப்படிதலைப்பு கண்ணாடிப் பாடம் என மாற்றி விட்டேன்.

ராஜன் மதியழகன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல கண்ணாடிப் பாடம்.மிக நன்று

Vakka kooth said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Very interesting story with moral.Great Arrow.

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

i got your Arrow (kannadi)
- Vijay Amaran

lokesh said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

super sir, thanks for sharing

Venkat Narayanan AR said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமை அருமை ஐயா!!!!

PR Munda said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வெரிவெரி சூப்பர் சார் . கண்ணாடிப் பாடம்

BHARKAVI MAMI said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இனி கண்ணாடி முன்னால் நின்று என் முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் கண்ணாடிப் பாடம் பதிவு என் நினைவில் வரும்

Kadham bari said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வாழ்க்கைத் தத்துவங்களை எதிலும் காணும் பக்குவம் ஒரு சிலருக்கு மட்டுமே உரித்தானது.அதுவும் அதை விளக்கும் அறிவு அதனினும் பெரியது,அதை பதிவாய் இட்ட உங்களுக்கு மிகமிக நன்றி

G.M Balasubramaniam said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கண்ணாடி தெரிவிக்கும் செய்திகள்நன்று. நிறையவே கற்கவேண்டும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms