ஒற்றுமையாய் இருந்த ஒன்பது ரத்தினங்களுக்குள் ஒருநாள்
“நம்மில் யார் பெரியவன்?” என்ற சண்டை வந்தது.
“நானே பெரியவன்” என்றது வைரம்.
“இல்லை நானே பெரியவன்” என்றது வைடூரியம்
“அட கடவுளே! இந்த சண்டையை தீர்த்து வைக்க ஒரு வழியும்
இல்லையா? என்றது கோமேதகம்.
“இருக்கிறது” என்றது மரகதம்.
“என்ன?” என்றது நீலம்
“நமக்குள் ஒரு போட்டி வைத்துக் கொள்வோம்,அந்த போட்டியில்
எவன் வெற்றியடைகிறானோ அவனே பெரியவன் என்று நாம் ஒப்புக்கொள்வோம்!” என்றது மரகதம்.
“என்ன போட்டி அது?” என்று எல்லோரையும் முந்திக்கொண்டு முன்னால் வந்து கேட்டது
வைரம்.
“பேராசை பிடித்த மனிதனை,நம்மில் எவன் போதும்! போதும்! என்று
சொல்ல வைக்கிறானோ, அவனே நமக்கெல்லாம் பெரியவன் .என்ன சொல்கிறீர்கள், நீங்கள்?”என்று கேட்டுவிட்டு எல்லாவற்றையும்
சேர்ந்தாற்போல் ஒரு பார்வை பார்த்து வைத்தது மரகதம்.
“சரியான யோசனை! சரியான யோசனை!” என்று எல்லா ரத்தினங்களும் ஏககாலத்தில் தலையை ஆட்டின.
“சரி நீ போ முதலில்!” என்றது மரகதம் வைரத்தை நோக்கி.
வைரம் சென்றது; ஆனால் வாட்டத்துடன் திரும்பி வந்தது.
“என்ன?” என்று கேட்டது மரகதம்.
“முடியவில்லை!, அப்பனே முடியவில்லை!, அவனை திருப்தி செய்ய
முடியவில்லை” என்று
கையை விரித்தது வைரம்.
“சரி நீ போ இரண்டாவதாக!” என்றது மரகதம் வைடூரியத்தை நோக்கி.
வைடூரியம் சென்றது; ஆனால் அதுவும் வாட்டத்துடன்
திரும்பி வந்தது.
“என்ன?” என்று கேட்டது மரகதம்.
“முடியவில்லை அப்பனே முடியவில்லை, அவனை திருப்தி செய்ய
முடியவில்லை!” என்று
வைடூரியமும் கையை விரித்தது.
இப்படியே ஒன்பது ரத்தினங்களும் சென்று தோல்வியுற்று
திரும்பிய பிறகு நான் திருப்திப் படுத்துகிறேன் அவனை!” என்றது ஒரு குரல்.
“அது யாரப்பா அது ?” என்று எல்லா ரத்தினங்களுமே குரல் வந்த திசையை நோக்கின
திரும்பின.
“நான்தான் பத்தாவது ரத்தினம் அப்பா!” என்றது அது.
“பத்தாவது ரத்தினமா, பைத்தியம் பிடித்த ரத்தினமா?” என்று மரகதம் கேட்டது.
“வீண் பேச்சு எதற்கு? வேண்டுமானால் என்னை அனுப்பி பார்” என்றது அது.
“சரி வா போவோம்!” என்றது மரகதம்.
“நீங்களும் என்னுடன் வருகிறீர்களா என்ன?” என்று கேட்டது அது.
“ஆமாம், உன்னுடைய லட்சணத்தை பார்க்க வேண்டாமா?” என்றது கோமேதகம்.
“சரி வாருங்கள்!” என்று பத்தாவது ரத்தினம் கிளம்ப மற்ற ஒன்பது ரத்தினங்களும்
அதை பின் தொடர்ந்தன.
பாவம் மனிதன் பத்தாவது ரத்தினம் அவனுக்கு முன்னால்
இருந்த இலையில் “கொட்டு!
கொட்டு” என்று கொடியதும்தான்
தாமதம், “போதும், போதும்!” என்று அலறவே ஆரம்பித்து
விட்டான்.
“தேவலையே! உன் பெயர் என்னப்பா?” என்று தன் உடம்பை குறுக்கிக்
கொண்டு கேட்டது மரகதம்.
“ ஜீவரத்தினம்! ‘அரிசி’ என்றும் ‘அன்னம்’ என்றும் அடியேனை அழைப்பதுண்டு!” என்றது அது.
![]() |
RICE |

7 கருத்துரைகள்:
அன்னம் ஒன்றுதான் மனிதனைப் போதும் என்று சொல்ல வைக்கும்.
so true
முத்தாய்ப்பான கடைசி வரிகள்.
அருமை
அருமை! அதுவும் கடைசி வரிகள்!
oh!...ஆம் சரி தான்.
நல்ல பதிவு...
வாங்கோ.. எனது விழா விவரங்கள் அறியலாம்.
Good one shankar
Post a Comment