வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Wednesday, April 27, 2016

சொர்ண சித்தர்

யோகேசன் குளத்தருகே நின்று வேண்டிக் கொண்டிருக்க தங்கமாய் ஜொலித்தப்படி வந்திறங்கினார் சொர்ண சித்தர். வணக்கமென்று வணங்கி சொர்ண சித்தரை பார்த்தான் யோகேசன். “எதற்கு அழைத்தாய் யோகேசா?” என்றார் சொர்ண சித்தர். “சாமி உங்கள் வழிகாட்டுதலின்படி ஆன்மீகத்துக்கு வந்தேன். உங்களால் தவமுறை அறிந்தேன். பின் தவம் செய்தேன், கடவுளை தரிசித்தேன்.வேண்டும் வரமென்ன என கடவுள் கேட்க முக்தி வேண்டுமென்றேன். நிச்சயம் உனக்கு உண்டு என்றார். ஆனால் அதற்கு முன் என்னுடலும் உங்கள் உடல் போல் பொன்னாகவில்லையே ஏன்?” என கேட்டான் யோகேசன். “நீ எல்லாத்தையும் விட்டுவிட்டுத்தானே  கடவுளைக்காண வந்தாய்?” கேள்வியோடு முறைத்தார் சொர்ண சித்தர். “ஆமாம்” என்றான் யோகேசன் “இல்லை. நீ இன்னும் முக்தி வேண்டுமென்ற குறிக்கோளுடன் அலைந்துக் கொண்டிருக்கிறாய் ”என்றார் சொர்ண சித்தர். . “ஆமாம் ஆன்மீகத்தில்...

Wednesday, April 13, 2016

இராமநவமி

அவதாரம் என்ற வார்த்தையின் சம்ஸ்க்ருத மூலச் சொல்லான “அவதர” என்பதன் பொருளே “இறங்கி வருதல்” என்பதாகும். அதாவது எங்கும் எதிலும் எப்போதும் நுண்ணிய வடிவில் உள்ள இறைவன் தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறித்த காலத்திற்காக, ஒரு குறிபிட்ட வடிவம் கொண்டு வருதலே அவதாரம் எனப்படுகிறது. அவதாரங்களிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று இறைவனே அனைவரும் காணப்படும் வடிவில் வருவது; அதனைப் பூர்ணாவதாரம் என்பார்கள். மற்றது இறைவனின் பற்பல விசேஷ அம்சங்களில் ஒன்று ஒரு வடிவில் இறங்கி வருவது; அதை அம்சாவதாரம் என்பர். பூர்ணம் என்றும் அம்சம் என்றும் அவைகள் இரண்டும் குறிப்பிடப்படுவதால் முன்னதை முழுமையானது என்றும், பின்னதை ஒரு பின்னம் அல்லது ஒரு பகுதி என்றும் புரிந்துகொள்வது தவறாகும். மாறாக, முன்னதில் இறைவனே உதிப்பதாகவும், பின்னதில் இறைவனின் விசேஷ சக்தியோ,...

Thursday, April 7, 2016

பாலசந்திரகணபதி

திருவான்மியூர் அருள்மிகு ஸ்ரீசெல்லியம்மன் திருக்கோயிலில் தர்மகர்த்தா திரு கணேசன், திரு சந்திரசேகர் அவர்களின் வேண்டுதலில் நண்பர் திரு.கண்ணன் அவர்களின் உபயத்துடன்  சப்தக்கன்னிகள் திருவுருவங்கள் வைக்க முற்பட்ட போது கூடவே பிள்ளையார், முருகர்  திருவுரு வங்களையும் வைக்க தீர்மானித்தார்கள். திரு.கண்ணன் மூலமாக எனது ஆலோசனைகளுக்காக அழைப்பு வந்ததும் நான் பிள்ளையார்,முருகர்  சப்தக்கன்னிகள் திருவுருவங்கள் எங்கே? எப்படி? எப்போது? வைக்க வேண்டும் என்பதை கூறினேன். அப்போது தர்மகர்த்தாகளின் வீட்டில் வைத்து வழிப்பட்ட அம்பாளை செல்லியம்மன் கோயிலிலேயே மேற்கு முகமாய் ஒரு சிமென்ட் தகடு கூரையிட்டு வைத்து இருந்தனர்.அந்த அம்பாளை பார்த்ததும் நான் “ஆதி செல்லியம்மன்” என பெயர் வைத்தேன். கோயிலில் உள்ள மூலவர் செல்லியம்மன்தான். அதனால் இந்த அம்பாளை...

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms