யோகேசன் குளத்தருகே நின்று வேண்டிக் கொண்டிருக்க தங்கமாய்
ஜொலித்தப்படி வந்திறங்கினார் சொர்ண சித்தர்.
வணக்கமென்று வணங்கி சொர்ண சித்தரை பார்த்தான் யோகேசன்.
“எதற்கு
அழைத்தாய் யோகேசா?” என்றார் சொர்ண சித்தர்.
“சாமி
உங்கள் வழிகாட்டுதலின்படி ஆன்மீகத்துக்கு வந்தேன். உங்களால் தவமுறை அறிந்தேன். பின்
தவம் செய்தேன், கடவுளை தரிசித்தேன்.வேண்டும் வரமென்ன என கடவுள் கேட்க முக்தி
வேண்டுமென்றேன். நிச்சயம் உனக்கு உண்டு என்றார். ஆனால் அதற்கு முன் என்னுடலும் உங்கள் உடல் போல் பொன்னாகவில்லையே
ஏன்?” என கேட்டான் யோகேசன்.
“நீ
எல்லாத்தையும் விட்டுவிட்டுத்தானே கடவுளைக்காண வந்தாய்?” கேள்வியோடு முறைத்தார் சொர்ண சித்தர்.
“ஆமாம்” என்றான் யோகேசன்
“இல்லை.
நீ இன்னும் முக்தி வேண்டுமென்ற குறிக்கோளுடன் அலைந்துக் கொண்டிருக்கிறாய் ”என்றார் சொர்ண சித்தர்.
.
“ஆமாம்
ஆன்மீகத்தில் முக்தி வேண்டுமென்ற குறிக்கோள் கூட கூடாதா,என் தவமே முக்திதானே, அதுக்கூட
இல்லேன்னா, எனக்கு தவம் எதுக்கு?” என மீண்டும் “போங்க
சாமி எனக்கு எதுவேமே வேண்டாம், நான் எப்பவும் போலே சாதாரண ஆசாமியாகவே இருந்துட்டு
போறேன்” என்றான் யோகேசன்.
சிரித்தப்படியே விடைபெற்றார் சொர்ண சித்தர்.
யோகேசன் குளத்தில்
இறங்கி தண்ணீரை கைகளில் குவித்து அள்ள தண்ணீரில் யோகேசனின் முகம் தங்கமாய் பிரதிப்பலித்தது.

0 கருத்துரைகள்:
Post a Comment