அவதாரம் என்ற வார்த்தையின் சம்ஸ்க்ருத மூலச் சொல்லான “அவதர” என்பதன் பொருளே “இறங்கி வருதல்” என்பதாகும். அதாவது எங்கும் எதிலும் எப்போதும் நுண்ணிய வடிவில் உள்ள இறைவன் தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறித்த காலத்திற்காக, ஒரு குறிபிட்ட வடிவம் கொண்டு வருதலே அவதாரம் எனப்படுகிறது. அவதாரங்களிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று இறைவனே அனைவரும் காணப்படும் வடிவில் வருவது; அதனைப் பூர்ணாவதாரம் என்பார்கள். மற்றது இறைவனின் பற்பல விசேஷ அம்சங்களில் ஒன்று ஒரு வடிவில் இறங்கி வருவது; அதை அம்சாவதாரம் என்பர். பூர்ணம் என்றும் அம்சம் என்றும் அவைகள் இரண்டும் குறிப்பிடப்படுவதால் முன்னதை முழுமையானது என்றும், பின்னதை ஒரு பின்னம் அல்லது ஒரு பகுதி என்றும் புரிந்துகொள்வது தவறாகும். மாறாக, முன்னதில் இறைவனே உதிப்பதாகவும், பின்னதில் இறைவனின் விசேஷ சக்தியோ, அல்லது சின்னமோ ஒரு வடிவில் பொருந்தி வந்துள்ளதாகக் கொள்ள வேண்டும். பூர்ணமாகவும், அம்சமாகவும் ஆன வகைகளில் இருபதிற்கும் மேலான அவதாரங்கள் நிகழ்ந்துள்ளதாக நமது சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளன.
நாம் பொதுவாக அறிந்துள்ள பத்து அவதாரங்களைக் கீழ்க்கண்ட ஸ்லோகம் குறிப்பிடுகிறது:
மத்ஸ்ய கூர்மோ வராஹஸ்ச நரசிம்ஹஸ்ச வாமனஹ
ராமோ ராமஸ்ச ராமஸ்ச க்ருஷ்ணஹ கல்கிஸ்ச தே தசா
ராமோ ராமஸ்ச ராமஸ்ச க்ருஷ்ணஹ கல்கிஸ்ச தே தசா
இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ள மூன்று ராமர்களில் நடுவில் இருப்பதே நாம் அனைவரும் நன்கு அறிந்துள்ள ராமாயணத்தின் கதாநாயகனான ஸ்ரீ ராமபிரான் ஆவார். அவரது காலத்திலும், அதற்கு முன்னரும் வாழ்ந்திருந்த பரசுராமரை ஸ்லோகத்தில் வரும் முதலாவது ராமரும், ஸ்ரீ கிருஷ்ண பகவானின் தமையனாரான பலராமரை மூன்றாவது ராமரும் குறிக்கின்றன. இங்கு நாம் காணும் பரசுராமரும், பலராமரும் அம்சாவதாரங்கள் ஆவார்கள்; ஸ்ரீ ராமபிரானும் ஏனையவர்களும் பூர்ணாவதாரங்கள் எனப்படுவார்கள்.
இராம அவதாரம் மானிட வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை வெறும் உபதேசமாக இல்லாமல் நடந்து காட்டி வெற்றிப் பெற்ற அவதாரமாகும்.
அறத்தின்வழி நிற்பவர்களுக்கு சோதனைகள் அதிகம்.
தங்கத்தில் உள்ள மாசு மருவை நெருப்பிலிட்டு காய்ச்சி உருக்கி அதன் தன்மையை சுத்தப் படுத்த செய்வது போல் மனிதனை நல்லவனாக்க அவனுக்கு ஏற்படும் சோதனையும் வேதனையும் அவனை ஜொலிக்க வைப்பது போல் தன் அவதாரத்திலும் சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கி மனிதன் எப்படி வாழ வேண்டுமென்பதை அறிவுறுத்தும் மேன்மை அவதாரமே இராம அவதாரம் ஆகும்.
சித்திரை மாதத்தில் ஏழாவது நட்சத்திரமான புனர்பூசத்தில் நான்காவது ராசிமண்டலமான கடகத்தில் சூரியன் உச்சமாக குரு உச்சமுடன் ஒன்பதாம் நாள் மானிட வாழ்வின் அர்த்தத்தை உணர்த்த வழிநடத்த இறைவன் பயணம் கொண்ட முதல் நாள் இராமநவமி.
இந்த இராமநவமி நாளில், ராமன் காட்டிச் சென்ற அறத்தையும் நல்லொழுக்கத்தையும்
கடைப்பிடிப்போம் என்று உறுதியேற்போம்.
“இராமனை போல் நட, கிருஷ்ணன் சொல்வதை கேள்.”

அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
4 கருத்துரைகள்:
hay
nice one. puthandu vazhtthukkal
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
எனது வலைக்கும் நல் வரவு கூறுகிறேன்.
வாருங்கள்.
பாடப் பாட ராகம்...
https://kovaikkavi.wordpress.com/
Happy Tamil new year
ராம நவமியின் சிறப்பை விளக்கியதற்கு நன்றி ஐய்யா
Post a Comment