
‘மிஸ் டீன் யுனிவர்ஸ் 2017’ அழகி சிருஷ்டி கவுர்
மத்திய
அமெரிக்காவில் உள்ள நிகாராகுவாவின் மனாகுவாவில் இந்த ஆண்டிற்கான இளம் வயதினருக்கான
மிஸ் டீன் யுனிவர்ஸ் (15 முதல் 19 வயது) அழகிப்போட்டி நடந்தது. மிஸ் யுனிவர்ஸ் போட்டிகளை நடத்தி
வரும் அமைப்பு இளம் வயதினருக்கான அழகிப் போட்டியை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் உலக நாடுகளை சேர்ந்த ஏராளமான
அழகிகள் கலந்து கொண்டனர். இளம் வயதினருக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பல்வேறு
பிரிவுகளில் வெற்றி பெற்ற அழகிகள் 25 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தகுதி பெற்றனர். இதில் இந்திய அழகி
சிருஷ்டி கவுரும் இடம் பெற்று இருந்தார்.
போட்டியில் உடல்
அழகு,
தனித்திறன்
உள்ளிட்ட பிரிவுகளில் முதலிடம் பிடித்து இளம் வயது மிஸ் யுனிவர்ஸ்-ஆக மகுடம்
சூடினார் சிருஷ்டி கவுர். மேலும் சிருஷ்டி கவுர் சிறந்த...