
எல்லாரும் நம் நண்பரே!இஸ்லாமிய பெருமக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, "அஸ்ஸலாமு அலைக்கும்' என வணக்கம் சொல்வார்கள். இதன் பொருள், "அல்லாஹ்வின் அருள் உங்கள் மீது உண்டாகட்டும்' என்பதாகும்.உலகம் பகை என்ற கட்டடத்தைப் பலமாகக் கட்டிக் கொண்டிருக்கிறது.ஒருவரது முன்னேற்றம், மற்றொருவருக்கு சகிக்கவில்லை. இதன் காரணமாக, போட்டி, பொறாமை அதிகரித்து விட்டது. இதை தவிர்க்க வேண்டும் என்கிறது இஸ்லாம். "அஸ்ஸலாமு அலைக்கும்' சொல்வது தான் இதற்கு ஒரே தீர்வு. ஆம்! பகை உணர்வுடன் நடந்து கொள்ளும் ஒருவரை பார்க்கும் போதெல்லாம் ஒருவர், தொடர்ந்து "அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொல்லிக் கொண்டிருந்தால் அவரது மனம் மாறி விடும். அவர் பகையை மனதில் நினைக்காமல், அல்லாஹ்வின் அருளை நமக்காக வேண்டுகிறாரே என்ற எண்ணத்தில், நண்பராகி விடுவார். பகைவரையும் நண்பராக்கும் வார்த்தையே "அஸ்ஸலாமு...