
எல்லாரும் நம் நண்பரே!
இஸ்லாமிய பெருமக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, "அஸ்ஸலாமு அலைக்கும்' என வணக்கம் சொல்வார்கள்.
இதன் பொருள், "அல்லாஹ்வின் அருள் உங்கள் மீது உண்டாகட்டும்' என்பதாகும்.
உலகம் பகை என்ற கட்டடத்தைப் பலமாகக் கட்டிக் கொண்டிருக்கிறது.
ஒருவரது முன்னேற்றம், மற்றொருவருக்கு சகிக்கவில்லை. இதன் காரணமாக, போட்டி, பொறாமை அதிகரித்து விட்டது. இதை தவிர்க்க வேண்டும் என்கிறது இஸ்லாம். "அஸ்ஸலாமு அலைக்கும்' சொல்வது தான் இதற்கு ஒரே தீர்வு. ஆம்! பகை உணர்வுடன் நடந்து கொள்ளும் ஒருவரை பார்க்கும் போதெல்லாம் ஒருவர், தொடர்ந்து "அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொல்லிக் கொண்டிருந்தால் அவரது மனம் மாறி விடும். அவர் பகையை மனதில் நினைக்காமல், அல்லாஹ்வின் அருளை நமக்காக வேண்டுகிறாரே என்ற எண்ணத்தில், நண்பராகி விடுவார். பகைவரையும் நண்பராக்கும் வார்த்தையே "அஸ்ஸலாமு அலைக்கும்'.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதுபற்றி கூறும் போது, "ஸலாத்தின் மூலம் இம்மை மறுமை நன்மைகளைக் காணலாம். மக்களிடையே அன்பு பரவும். எதிரிகள் தங்கள் பகையை மறந்து இணைவார்கள்,'' என்கிறார்கள்.
ஒருவர் நபிகளாரிடம், "இஸ்லாத்தில் சிறந்தது எது ?' என கேட்டார்.அதற்கு நாயகம், "பசித்தவருக்கு உணவளிப்பதும், தெரிந்தவராயினும், தெரியாதவராயினும் ஸலாம் சொல்வதும் ஆகும்," என்றார்கள்.


நபி ஆதம் (அலை) அவர்களுக்கும், அவர்களது உம்மத்தினர்களுக்கும் அல்லாஹ் இதை கடமையாக்கி இருக்கிறான். நபி ஆதம் (அலை) அவர்களுக்கு, ஸலாம் சொல்லும் முறையையும் கற்றுக் கொடுத்துள்ளான். இதிலிருந்து ஸலாத்தின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம்.
ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் - கண்ணதாசன்
0 கருத்துரைகள்:
Post a Comment