Wednesday, October 31, 2012

காதல் விவகாரத் துறை

குசும்பு குடுமியாண்டி : ரொம்ப நாளைக்குப்பிறகு நான் வந்தாலும் நல்ல மேட்டரோடத்தான் வருவேன் . ஆனா பாருங்க, நம்ம வேலையை இவங்க எடுத்துக்கிட்டாங்க 

புதுடில்லி:காதல் விவகாரங்களில் கை தேர்ந்த, சசி தரூருக்கு, மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு பதிலாக, "காதல் விவகாரத் துறை' என்ற பெயரில், புதிதாக ஒரு துறையை உருவாக்கி, அந்த துறையின் அமைச்சர் பொறுப்பை, அவருக்கு கொடுத்திருக்கலாம்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

குஜராத் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, நரேந்திர மோடி, சமீபத்தில் அளித்த பேட்டியில், "50 கோடி ரூபாய் பெண் தோழி சுனந்தாவுக்காக, பேரம் பேசியவர் சசி தரூர்' என, கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்து சசி தரூர் கூறியதாவது:
என் மனைவி சுனந்தா, 50 கோடி ரூபாய் மதிப்புடையவள் அல்ல; அவளுக்கு விலையே கிடையாது; அதை விட, அதிக மதிப்புடையவள். இதை புரிந்து கொள்ள, அவளைப் போன்ற யாராவது ஒருவரை, நீங்கள் காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்.இவ்வாறு சசி தரூர் கூறியிருந்தார்.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, இந்த காதல் விவகாரம், நேற்று அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., மூத்த தலைவரும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான, முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது:சசி தரூர், காதல் விவகாரங்களில் கை தேர்ந்தவர். அவரை, மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு இணை அமைச்சராக நியமித்திருக்கக் கூடாது. சர்வதேச அளவிலான, காதல் விவகாரங்களில் கை தேர்ந்த அவருக்காக, "காதல் விவகாரத் துறை' என்ற புதிய துறையை உருவாக்கி, அதற்கு அமைச்சராக அவரை நியமித்திருக்க வேண்டும்.இவ்வாறு முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்.
இதுகுறித்து, காங்கிரசைச் சேர்ந்த, தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர், மனீஷ் திவாரி கூறுகையில், ""பா.ஜ.,வினர், மிகவும் தரக் குறைவாக விமர்சிக்கின்றனர்; அவர்கள் அளவுக்கு தரக்குறைவாக விமர்சித்து, எங்களின் தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை,'' என்றார்.சசி தரூர் ஏற்கனவே, திலோத்தமா, கிறிஸ்டினா என்ற இரு பெண்களை மணந்து, விவாகரத்து செய்தவர். மூன்றாவதாக, சுனந்தா புஷ்கரை திருமணம் செய்தார். கொச்சி, ஐ.பி.எல்., கிரிக்கெட் அணியை, சுனந்தாவுக்கு பேரம் பேசியதாக, சசி தரூர் மீது புகார் கூறப்பட்டது.
இதனால், ஏற்கனவே அமைச்சர் பதவியை இழந்த அவரை, காங்., மேலிடம் தற்போது, மீண்டும் அமைச்சராக்கியுள்ளது. இதுகுறித்தே, நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருந்தார்.
அது என்ன 50 கோடி கணக்கு? கேள்வி எழுப்புகிறார் சுனந்தா

சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கூறியதாவது:குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, என்னை, 50 கோடி ரூபாய் பெண் தோழி எனக் கூறியுள்ளார். அது என்ன 50 கோடி ரூபாய்; இது என்ன கணக்கு; என்னுடைய வருமானத்துக்கு, முறையாக வரி செலுத்தியுள்ளேன்; அதற்கான ஆவணங்கள் உள்ளன.தரக்குறைவாக விமர்சிக்கும் நரேந்திர மோடிக்கு, குஜராத் மாநில பெண்கள், இந்த தேர்தலில் ஓட்டளிக்கக் கூடாது. நானும், சசி தரூரும், எங்களுடைய அன்பை வெளிப்படையாக பகிர்ந்து கொள்கிறோம்; இதில் என்ன தவறு உள்ளது. தற்போதுள்ள அனைத்து, இளம் அமைச்சர்களும், இவ்வாறு தானே நடந்து கொள்கின்றனர்.இவ்வாறு சுனந்தா கூறினார்.

இதற்கிடையே, சில நாட்களுக்கு முன், திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு, சசி தரூரும், சுனந்தாவும் வந்தபோது, அங்கு கூடியிருந்த காங்கிரஸ் கட்சியினரிடையே இருந்த ஒரு இளைஞர், சுனந்தாவிடம் தவறாக நடந்து கொண்டார். இதனால், சுனந்தாவும், சசி தரூரும் ஆத்திரமடைந்தனர். ஆனாலும், இதுகுறித்து போலீசில் புகார் எதையும், அவர்கள் அளிக்கவில்லை.

குசும்பு குடுமியாண்டி : அது என்ன 50 கோடி கணக்கு? இன்னும் மேலேப்பா.

4 கருத்துரைகள்:

jameela said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கன்றாவியான மேட்டரைக்கூட கலாயிக்கிறிய தலைவரே

anburajan said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சே! இதுங்களுக்கு ஒரு போஸ்டா நண்பரே

PR Munda said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பணத்திற்காக ஒரு காதல்
நல்லா இருக்கா, சினிமா தலைப்பு.
தூ ....தூ ...

குசும்பா ,கரைக்டா மேட்டரை கொடுத்து இருக்கிறே, ரொம்ப நாள் கழிச்சி வந்தாலும் சும்மா சொல்லக்கூடாது
இதுங்கள மறக்காம சிரிப்பா சிரிக்க வச்சுட்டே

Vanmigiyur.L.L.Sankar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இதுவரைக்கும் எவ்வளோ போஸ்ட் எழுதி இருக்கிறேன் ஆனால் இந்த குசும்புக்குத்தான் நெறைய கமெண்ட்டு வந்திருக்கு

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms