குர்ரானில் கூறப்பட்டுள்ளபடி சன்மார்க்க கடமைகள் அனைத்தையும் தவறாது செய்துவந்த ஒரு முஸ்லிம் இறந்த பிறகு சொர்க்கத்துக்கு செல்கிறார். அங்கே இறைவனை அவர் சந்திக்கும்போது இறைவன் கேட்கிறார்…. “உனக்கு நான் ஏன் சொர்க்கம் கொடுத்தேன் தெரியுமா?”
“தெரியுமே.. எனக்கு மட்டுமில்லே… எல்லாருக்கு தெரியும். நான் இஸ்லாம் கூறியுள்ள ஐந்து கடமைகளையும் தவறாது நிறைவேற்றியவன். ஒரு நாள் கூட தொழுகை தவறியது கிடையாது. அதன் பலனாக சொர்க்கத்திற்கு வந்திருக்கிறேன்” என்கிறார்.
அதற்கு அல்லா… “இல்லை நீ ஒரு நாள் தொழுகை தவறிவிட்டாய்… அதற்காகத் தான் சொர்க்கம் கொடுத்திருக்கிறேன்” என்கிறார்.
இவருக்கு தூக்கி வாரப்போட்டது… ஏதோ ஒரு வேளை தொழுகை தவறிட்டோம் போல…. ஆனா அது பெரிய பாவமாச்சே… என்று நினைத்தவர்… “அல்லா… தொழுகை தவறியது மிகப்பெரிய பாவமல்லவா ஆனால் நீங்கள் அதற்காக எனக்கு சொர்க்க அளித்தேன் என்று சொல்வது எனக்கு விளங்கிவில்லை”
“நீ தொழுகைக்கு ஒரு நாள் சென்றுகொண்டிருந்தாய். அப்போது மழை பெய்துகொண்டிருந்தது. பள்ளிவாசலின் சுவரையொட்டி அந்த மழையில் நனைந்த படி… ஒரு பூனைக்குட்டி ஒன்று கிடந்தது. குளிரில் அதன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. நீ அதை பார்த்து பரிதாபப்பட்டாய். அதை எடுத்து அதன் ஈரத்தை உனது ஆடையால் துடைத்தாய்…. அப்போதும் அதன் குளிர் நடுக்கநிற்கவில்லை. இறுதியில் உன் சட்டை பொத்தான்களை அகற்றி உன் மார்பை ஒட்டி அதை வைத்துக்கொண்டாய்… உன் உடம்பின் சூட்டினால் அது சிறிது குளிர் நீங்கப்பெற்றது. சற்று நேரத்தில் மழை நின்றுவிட… நீ அதை கீழே வைத்துவிட்டாய்… அது மகிழ்ச்சியுடன் ஓடிவிட்டது…. பூனைக்கு நீ உபகாரம் செய்தாலும், உனக்கு தொழுகை நேரம் கடந்துவிட்டது. அன்று நீ தொழவில்லை. ஆனால்அதற்காகத் தான் நான் உனக்கு சொர்க்கம் கொடுத்தேன்” என்கிறார்.
குட்டி கதைத்தான்,அதை எந்த மதத்தின் கோட்பாடில் சொன்னாலும் சத்தியத்திற்கு மகத்துவம் உண்டு
-Arrow Sankar (Vanmigiyur L.L.Sankar)

2 கருத்துரைகள்:
கதையை நானும் எங்கேயோ படிச்சிருக்கிறேன் நல்ல கதை. நன்றி
கதையை நானும் எங்கேயோ படிச்சிருக்கிறேன் நல்ல கதை. நன்றி
Post a Comment