Thursday, February 28, 2013

பழைய மஹாபலிபுரம் சாலை (O.M .R )

சர்தார் பட்டேல் ரோட்டின் மையப் பகுதி மத்ய கைலாஸ் கோவிலிருந்து ஆராம்பமாகும்  ரோட்டின்  பழைய   வடிவம்  தான் பழைய மஹாபலிபுரம் சாலை .



2006-07-ல் ஐ.டி.எக்ஸ்பிரஸ் வே (IT EXPRESS WAY) என்று உருமாறி தமிழக முன்னாள் முதல்வர் திரு கருணாநிதியால் 2007-ல் மீண்டும் ராஜீவ் காந்தி சாலை என மாற்றப்பட்டு  புதிதாய் சாலை சீரமைக்கப்பட்டு  வாகன வரி வசூலுடன் பொலிவுடன் இருக்கிறது 

இன்று ஓ.எம்.ஆர் (O.M.R ) என்ற சுருக்கத்துடன் எல்லோருக்கும் தெரிந்த சாலையாக உள்ளது . டைடல் பார்க், இன்போசிஸ், விப்ரோ,அக்சன்சர்,ஹெசிஎல் மற்றும் பல  மாபெரும்  .டி நிறுவனங்களாலும், பல பொறியியல், மருத்துவ  கல்லூரிகளாலும் வியாபித்து  மேலும்  இந்த .எம்.ஆர் மக்களிடம் மிக பிரபலமாக உள்ளது . .டி நிறுவனங்கள், கல்லூரிகள் என்றதும்  மக்களின் தேவைக்கு ஏற்றார்ப்போல் குடியிருப்பு கட்டிடம், பள்ளி வளாகம், ஷாப்பிங் மால், மருத்துவமனை,திரையரங்குகள் என இந்த சாலை விஸ்வரூபமானது . சுமார்  கிட்டத்தட்ட 44 கிலோ மீட்டர்களை ஆட்க் கொண்ட இந்த சாலை இப்பொழுது மிக அதிகமான வாகனங்கள் சென்று வரும் சாலையாக மாறிவிட்டது. அதனால்  கவனசிதறலும்,  வாகன விபத்துக்களும்,உயிர் இழப்புகளும் மிக அதிகமாகிவிட்டது.

1.பாத சாரிகளின்  (walkers) ஒழுங்கீனம்
செல்போனில் பேசிக்கொண்டே நடைப்பாதையை கடப்பது . சாலையை கடக்கக்கூடாத இடத்தில் கடப்பது. சாலையின் மத்தியில் உள்ள வேலிகளை எகிறித் தாண்டி குதிப்பது. இன்னும் பல ஒழுங்கீனங்கள் 

2.வாகன ஓட்டிகளின் (சைக்கிள்,மோட்டார் சைக்கிள்,கார் மற்றும் மற்ற வாகன ஓட்டிகள்) ஒழுங்கீனம்.
சைக்கிளில் செல்வோர் தகுந்த டிராக்கில் செல்லாமல் சாலையை ஆக்கிரமிப்பது ,செல்போன் ஆடியோ வீடியோ மற்றும் ரேடியோக்களை வாகனம் ஓட்டும் பொழுது கையாள்வது,அளவுக்கு மீறிய சரக்குகளை சுமந்து செல்வது , எச்சரிக்கை சமிஞ்சைகளை உபயோகிக்காமல் இருப்பது, ஒழுக்கமற்ற செயல்களை செய்வது (எச்சில் துப்புவது , புகைப்பது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது),சரியாக பராமரிக்காத வாகனத்தை உபயோகிப்பது, ஓவர்டேக் செய்வது மற்றும் போக்கு வரத்து விதி முறைகளை மீறுவது.

3.போக்குவரத்து காவல் துறையினரின் கவனக்குறைவு.
எச்சரிக்கை,சமிஞ்சை,அறிவிப்புப்பலகை (NO ENTRY,U TURN,HOSPITAL ZONE, SCHOOL ZONE), சுவரொட்டி, மின்னொளி பலகை தகுந்த இடத்தில் வைக்காமல் இருப்பது ,விபத்து பகுதிகளை அறிவிக்காமல் இருப்பது.சாலை பாதுக்காப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் வாகன ஓட்டிகளிடம் ஏற்படுத்தாமல் இருப்பது. விபத்து நடந்ததிற்க்கான உண்மையான காரணத்தினை அறியாமல் விசாரிக்காமல் இருப்பது.

4.அரசு பொது பணித் துறையினரின் அலட்சியம்.
சர்வீஸ் சாலை மற்றும் சாலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது. அரசு வளாகங்கள்  ,கடைகள் ,மதுக்கடைகள், இவற்றின் ஒழுக்க மற்றும் சட்ட விதி முறைகளை முறையாக  பயன் படுத்துவது .

5.அரசு நெடுஞ்சாலை  துறையினரின் அலட்சிய பணி மெத்தனம். 
சர்வீஸ் சாலை மற்றும் சாலைகளை பராமரிப்பதில் மெத்தனம் . குறுக்கீடு,குழி,குப்பை அசுத்தம் ஆகியவைகளை அதற்குரிய துறைகளே அகற்றும் சரி செய்யும் என நினைப்பது .


இந்த குறைப்பாடுகளை அகற்றினால், செயல்பாடுகளை செய்வித்தால், .எம்.ஆர் (O.M.R ) இனி புது சாலையாக மாறும். வெறும் பெயர் மாற்றம் மட்டுமே ஏற்றம் தராது 

9 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

விரைவில் நல்லது நடக்கும்... நம்புவோம்... (வேறு வழி...!?)

jameela said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

டைய்லி படா பேஜாரா இருக்குது தலைவரே இந்த ரோட்லே .நீயும் அங்கத்தான் க்கீறிய தலைவரே

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இது அரசு துறைக்கு ரீச் ஆகுமா? சென்றடைந்தால் நிச்சியம் உங்கள் புண்யத்தில் இதற்கு ஒரு தீர்வு வரும்

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

திரு சாந்தகுமார் அவர்களுக்கு
இதில் அரசின் நடவடிக்கையை விட தனி மனிதனின் கடமை மிக்க பங்காகும், ஏனெனில் இச் சாலையை பயன் படுத்தும் இந்த சாலையிலுள்ள ஊர் மக்களை விட வெளியில் இருந்து வரும் மக்களே அதிகம். அதனால் தனி மனித ஒழுங்கினை பின்பற்ற வேண்டியது அதிகமாகிறது . அதில் அரசும் ஒரு பாலமாக அதிகாரமாக இருக்க வேண்டும் என்பதே ஆதங்கமாகும்.

அன்பு ராஜன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பதிவு சுய சிந்தனையா இருக்கனும்னு சொன்னவுடனே பொது மேட்டரை எடுத்துக்கிட்டிங்கோ. நல்லா இருக்கு ஆனா இது நம்ம ஊர்லே உள்ள எல்லா ரோட்டுக்கும் பொருந்தும்

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நான் இந்த கஷ்டத்தே டெய்லி அனுபவிக்கும் பொழுது வேற யாருமே இதை பத்தி தெரிவிக்க மாட்டாங்களான்னு நினைப்பேன் .இந்த பிளாக்லே இதை நீங்க தெளிவா எழுதி இருக்கீங்கோ .ரொம்ப நன்றியும் எனது ஆதங்கத்துக்கு ஒரு ஆறுதலும்மாவும் இருக்கு. இப்படியே நிறைய பேருக்கும் போய் சேரும்.அதனாலே இதுக்கு ஒரு விடிவும் வரும்.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ரொம்ப அவசியமான பதிவு இது .இதுல நீங்க முக்கியமான ஒன்றை கூறாமல் விட்டு விட்டீர்கள்.இந்த சாலையில் மிகவும் அதிகமான மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கிராஸ் செய்வது SRP TOOLS சந்திப்பில்தான். உதாரணமாக தரமணி யிலுருந்து திருவான்மியூர் நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் திருவான்மியூரி லிருந்து பெருங்குடிக்கு நோக்கி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிரில் க்ராஸ் செய்கிறார்கள்,சிக்னல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் . அதனால் அதிகமான இன்னல்களும்,இடையூறுகளும்,விபத்தும் நடைபெற காரணமாக உள்ளது . இதில் பெரிய கொடுமை என்னவென்றால் போக்குவரத்து போலீசார் கண்முன்னே இது சகஜமாய் அன்றாடம் நடைபெறுகிறது.இதற்காக போலீசார் எந்த வித தற்காப்போ,நடவடிக்கையோ,முன்னேற்பாடோ செய்யவில்லை என்பது இன்னும் மிக பெரிய கொடுமை.இதற்கு ஒரு மாற்று ஏற்பாடு கண்டிப்பாக செய்தாக வேண்டும்

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இதற்காக தற்பொழுது மாநகராட்சி ,போக்குவரத்து காவல் துறை மற்றும் அரசு பொதுப்பணித்துறை நிர்வாகிகளிடம் மனுவும் ,அறிவுறுத்தவும் OMR வாசிகள் மூலமாகவும் இத்தொகுதி கவுன்சிலர்,சட்டமன்ற உறுப்பினரிடம் வேண்டு கோளும் வைக்கப்பட்டிருக்கிறது

c.s.sankaranarayanan,Velachery. said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Well said.As you said we the people should realise what we are doing. Normally our thoughts are away not concentrating on roads,pedestrian crossing,signal etc.,we realise only after accidents.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms