Tuesday, March 12, 2013

ஓய்வு பெற்றார் நீதி நாயகம் சந்துரு

மார்ச்-8,2013  சர்வதேச மகளிர் தினமன்று ஓய்வு பெற்றார் நீதி நாயகம் சந்துரு

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக, 2001, 2004ம் ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்டும், 2006ம் ஆண்டு தான், சந்துரு நியமிக்கப்பட்டார். அப்போது, வழக்கறிஞர் தொழிலில், மிகவும் "பிசி'யாக இருந்தார். "நீதிபதி, நீதியரசர்' என்கிற வார்த்தைகளை விட, "நீதி நாயகம்' என்பது தான், அவருக்கு பிடித்துள்ளது.
 
போலீஸ் பாதுகாப்பு, செங்கோல் ஏந்திய ஊழியர், "மை லார்டு' என அழைப்பது போன்ற, நீதிபதிக்கு உரிய சம்பிரதாயங்கள், தனக்கு தேவையில்லை என, ஒதுக்கியவர் இவர். தன்னை ஊக்கப்படுத்தும், வழிகாட்டும், காரணிகளாக, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி கிருஷ்ணய்யர், மறைந்த நீதிபதி சத்யதேவ் ஆகியோரை, நினைவு கூர்கிறார். "நீதிபதி வாய்ப்பு வரும் போது, மறுக்கக் கூடாது' என, அவர்கள் கேட்டுக் கொண்டதாக கூறுகிறார்.

நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவுகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவை, சட்ட இதழில் வெளியாகி உள்ளன. தீர்ப்பாயத்தில் பதவி வந்தும், வேண்டாம் என மறுத்து விட்டார். சட்ட ஆலோசனை வழங்குவது, சட்டப் புத்தகங்கள், "எடிட்' செய்வது, எழுதுவது என, வருங்காலத்தை செலவிடப் போகிறார். இவரது தீர்ப்புகளில், சமூக நீதி, சமத்துவம், பெண் உரிமை, பகுத்தறிவு அம்சங்கள் அடங்கியிருக்கும்.

மதுரை, தத்தநேரியில் உள்ள சுடுகாட்டில், ஒரு பிரிவினருக்கு ஒதுக்கிய இடம், ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து, தாக்கல் செய்த மனுவை, நீதிபதி சந்துரு விசாரித்தார்.அந்த தீர்ப்பில், "சமரசம் உலாவும் இடமே, நம் வாழ்வில் காணா, சமரசம் உலாவும் இடமே' என்ற பழைய சினிமா பாடலை நினைவு கூர்ந்துள்ளார். "ஜாதி, சமூகம் என்ற பெயரில், தனித்தனி சுடுகாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; அனைவருக்கும் பொதுவான சுடுகாடு வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளார்.

உசிலம்பட்டி அருகே, நல்லுதேவன்பட்டியில், துர்கை அம்மனுக்கு, பூஜை செய்து வந்தவர், இறந்து விட்டார். அவரது மகள் பின்னியக்காள், பூஜை காரியங்களை தொடர்ந்தார். இதற்கு, கிராமத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னியக்காள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு, "கோவில்களில், பெண்கள் பூஜை செய்வதற்கு, எந்த தடையும் இல்லை; வழிபடும் கடவுள், "அம்மன்' ஆக இருக்கும் போது, பெண் ஒருவர் பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவிப்பது, வேடிக்கையாக உள்ளது' என கூறியுள்ளார்.
 
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்தில், இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என, உத்தரவிட்டார்; இந்த உத்தரவை பின்பற்றி, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. ஏழு மாவட்டங்கள் வழியாக, விளை நிலங்களின் கீழ், எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிகளை எதிர்த்த வழக்கில், "விவசாயிகளை அழைத்து பேசுங்கள்; தமிழகத்தில் நந்திகிராமம், சிங்கூர் பிரச்னையை உருவாக்கி விடாதீர்கள்' என, எச்சரித்தார்.

முன்கூட்டி செய்தி வெளியிட, ஒரு இதழுக்கு தடை கோரி, மத்திய அமைச்சராக இருந்த ராஜா தாக்கல் செய்த மனுவை, விசாரித்த அவர், "பொதுப் பணியில் இருப்பவரின், நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளும் உரிமை, பொது மக்களுக்கு உள்ளது. பத்திரிகைகள் செய்தி வெளியிடுவதற்கு முன், தடை விதிக்க முடியாது. ஒரு செய்தி, கட்டுரையை, முழு அளவில் பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும். விமர்சனங்களை தடுக்கும் முயற்சியானது, "சென்சார்' செய்வது போன்றதாகும்' என, கூறியுள்ளார்.
 
மேடை நாடங்களுக்கு, போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற தேவையில்லை; பஞ்சமி நிலங்களை, வேறு யாருக்கும் ஒதுக்கக் கூடாது; மாற்று திறனாளிகளின் குறைகளை தீர்க்க, போக்குவரத்து கழங்களில் தனிக் குழு; தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்; டாஸ்மாக் ஊழியர்களுக்கு, மே தினத்தில், சம்பளத்துடன் கூடிய விடுமுறை என, பல முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஏ.பி.ஷா. அவர் இல்லை என்றால், தான் நீதிபதியாக ஆகியிருக்க முடியாது என்கிறார் நீதிபதி சந்துரு.

இந்த இருவர் அடங்கிய, "பெஞ்ச்' பிறப்பித்த சில உத்தரவுகள்: விதிமுறைகளை மீறிய கட்டடங்களை வரன்முறை செய்வதற்காக, தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது; திருப்பூர் சாயப்பட்டறைகள் வழக்கில், நொய்யல் விவசாயிகளுக்கு, சாயப்பட்டறை உரிமையாளர்கள் நஷ்டஈடு கொடுக்கும் வகையில், அபராதம் விதித்தது; நொய்யல் ஆற்றை சுத்தம் செய்ய, கண்காணிப்புக் குழு, ஆகியவை முக்கியமானவை.
இவரது, 80, மாத பதவி காலத்தில், 96 ஆயிரம், மனுக்கள் மீது உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ""நீதிபதி பணி பற்றி, நன்கு தெரிந்து தான், அதை ஏற்றுக் கொண்டேன்; என் பணியில், முழு திருப்தி அடைகிறேன்,'' என்கிறார், நீதிபதி சந்துரு. "ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு, ஐகோர்ட் சார்பில் அளிக்கப்படும் பிரிவு உபசார நிகழ்ச்சி, எனக்கு வேண்டாம்' என, தலைமை நீதிபதிக்கு, கடிதம் அனுப்பி விட்டார். தனது வழிகாட்டியாக கருதும் நீதிபதி சத்யதேவ், ஓய்வு பெறும் போது, எந்த கோர்ட் ஹாலில் அமர்ந்து, வழக்குகளை விசாரித்தாரோ, அதே கோர்ட் ஹாலில் தான், நீதிபதி சந்துருவும், வழக்குகளை விசாரித்தார். அங்கிருந்து தான், இன்று ஓய்வு பெற்றார் நீதி நாயகம் !.
 
முதல் நீதிபதி: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றி எம்.ஜி.எச். ஜாக்சன் என்பவர் 1929ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஓய்வுபெறும்போது, அவருக்கு பிரிவு உபசார விழா நடத்த வேண்டும் என்று அப்போதைய அட்வகேட் ஜெனரல், வக்கீல்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். அதற்கு நீதிபதி ஜாக்சன், நீதிபதியாக நான் எதுவும் சாதிக்கவில்லை. என் பணியைத்தான் செய்தேன் என்று கூறி பிரிவு உபசார விழாவுக்கு வர மறுத்துவிட்டார்.

இதன்பின்னர், நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றி பிரிவு உபசார விழா வேண்டாம் என்று மறுத்த முதல் நீதிபதி கே.சந்துரு என்று வக்கீல்கள் கூறினர்.

நிருபர்களின் கேள்விகளுக்கு, நீதிபதி சந்துரு அளித்த பதில்:

கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில், வழக்கறிஞர்கள் ஈடுபடக் கூடாது. இதனால், அவர்களது கட்சிக்காரர்கள் தான் பாதிக்கப்படுவர். அதேபோல், அடிக்கடி "வாய்தா' வாங்கக் கூடாது. வழக்கறிஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வர வேண்டும்.எனது கடமையை ஆற்றியதில், நான் திருப்தி அடைகிறேன். சுப்ரீம் கோர்ட்டில், "பிராக்டீஸ்' செய்ய போவதில்லை. ஒரு வழக்கறிஞராக, பொது வாழ்வில் ஈடுபடுவேன். சமூகப் பிரச்னைகளுக்கு போராடுவேன். அரசியல் கட்சியில் சேரும் எண்ணம் எதுவும் இல்லை. நீதிபதிகள் நியமனம், வெளிப்படையாக நடக்க வேண்டும். ஏற்கனவே நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, ஆண்டு தோறும், சொத்துக் கணக்கை, தலைமை நீதிபதியிடம், மற்ற நீதிபதிகள் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளேன்.இவ்வாறு, நீதிபதி சந்துரு கூறினார்.

இந்த மாதத்துக்குள் அரசு பங்களாவை, காலி செய்து விட்டு, தனது சொந்த "பிளாட்'டில் குடியேறுகிறார். புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்காக, நண்பர்களுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ஏப்., 1 முதல், தனது குடியிருப்பு, என, அபிராமபுரம் வீட்டு முகவரியை குறிப்பிட்டுள்ளார்.

நாடே போற்றும் நல் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
நல்மனம், உயர்ந்தநீதி, மனிதாபிமானம், எளிமையாய் வாழும் தன்மை, இவை உயர்பதவி வகிக்கும்  மனிதனின் வாழ்வில் மேலும் புகழ் தரும்  தங்க கீரிடமாய் நிற்கும்.
வாழ்க பாரதம் !

இம்மாமனிதரின்  குறிப்பை எழுத தூண்டிய
"குன்றத்தூர்"வீரமணி.சசிகுமார் அவர்களுக்கும், தினமலர்,தினமணி,தினகரன் நாளிதழ்களுக்கும்
எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

22 கருத்துரைகள்:

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

shankar sir super blog, very informative. keep up the good work.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமை,உங்கள் பிளாக் ,சரியான நேரத்தில் சரியான தகவல்களுடன் தருகீறிர்கள் ,நன்றி

அன்பு ராஜன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிக்க மகிழ்ச்சி,இந்த காலத்தில் இந்த மாதிரியான மனிதர்.போற்றப்படவேண்டியவர்

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

படித்தேன் மகிழ்ந்தேன், இன்னும் எழுதுங்கள்

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முன் மாதிரி மனிதர்,அவருக்கு எனது வணக்கங்கள்

jameela said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எழுதப்பட்டவருக்கும் எழுதியவருக்கும் நன்றி,வணக்கம்

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எளிமையான மனிதரின் எளிமையான வரலாறு.நன்றி சங்கர் அவர்களே,எங்களை மாதிரியான ஆட்களுக்கு இதுமாதிரி தகவல்கள் அறிந்துக்கொள்ள உங்கள் பிளாக் ரொம்ப உபயோகமாக இருக்கிறது

bushrocket said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உங்கள் பிளாக் ஒரு தகவல் களஞ்சியமாக மாறி வருகிறது.வளரட்டும் உங்கள் பணி

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உங்கள் பிளாக்கின் முழு வளர்ச்சி இப்போதுதான் நிறைவடைந்து இருக்கிறது .நல்ல அறிய தகவலை அறிந்தேன்

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்லதகவலை பகிர்ந்து கொள்வதே ஒரு நல்ல விஷயந்தான்

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Thank you..

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மொக்கையா ஒரு மேட்டரை எழுதி அதை பதிவு செய்ற வங்க மத்தியிலே நல்ல விஷயத்தை எழுதறவங்க ரொம்ப குறைவு ஆனா உங்க பதிவுல நல்ல விஷயத்தையும் உபயோகமான தகவலையும் எழுதிறீங்களே கிரேட் சங்கர் .உங்க பிலாக்கை நான் படிக்க தவறமாட்டேன்.இனி இன்னும் நல்ல நல்ல பதிவை எழுதி உங்கள் பிலாக் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

JOHN FEET said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

உங்கள் உழைப்பு மிக பிரமாதம்.நிறைய படிக்கீறிர்கள், அதனை செதுக்கி அழகான சிலையாக தருகிறீர்கள்.உங்களது பணிக்கு எனது வணக்கமும் வாழ்த்துக்களும்.

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்லதொரு தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா... வாழ்த்துக்கள்..

Venkat Narayanan AR said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Hats off to the Great Judge! Hats off to Sankar sir for writing this!

அமைதி அப்பா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிக நல்ல பதிவு. நானும் நீதிபதி சந்துரு குறித்து பதிவு எழுதலாம் என்று இருக்கிறேன். தங்களுக்கு பாராட்டுகளும், நீதிபதி சந்துரு அவர்களுக்கு வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எனது இது வரையிலும் நான் எழுதிய பதிவுகளிலேயே அதிகமான பின்னூட்டம் இந்த பதிவுக்குத்தான் .இதற்காக எனது நன்றியினை நீதி நாயகம் சந்துரு அவர்களுக்கும் மற்றும் என் பதிவினை படித்து உங்களது மேலான கருத்துக்களை அலைபேசி,மின்னஞ்சல்,பின்னூட்டம் வழியாக தெரிவித்து கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றி. நன்றி. நன்றி.
-'எரொ' சங்கர் 

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

yogamaye said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

ramkumar said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

very nice blog.useful matters written

PALKAARMAIL said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல இன்பார்மேடிவ் பிளாக் .உங்களோட எல்லா போஸ்ட்டையும் படித்து இருக்கிறேன்.ஆனால் கமெண்ட் எழுத தெரியல .அதனால்த்தான் உங்களுக்கு மொபைல் போன்லே கூப்ட்டேன் .ஆனா இனிமே எழுதுவேன் .பாராட்டுக்கள்

RATHI GAAN said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

blokkna etho diary ezhuthuvangannu ninecchen aana ithula niraiya information irukku. tamilil ezhutha theriyathu.sollikoduttha kandippa mutha aalaa ezhuthuven.paarattukkal.ungaloda bloggukkum matterukkum.

-RATHI GAAN

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms