
Thursday, January 08, 2015

Unknown
16 பேறுகளை தரும் மகாமந்திரம்
இந்த ஆண்டின் முதல் பதிவு. எனது 181 வது பதிவு இது.
புன்னகை,புன்சிரிப்பு, புன்முறுவல்; இளமுறுவல்; குறுநகை; சிறுநகை; முகிழ்நகை என்று
அழைக்கப்படும் சிரிப்பு மனிதனின் நவ உணர்வில் முதன்மையானது.
இந்த புன்னகை
என்பது இலவசமாக நம்
ஆரோக்கியம், மனநிலை ஆகியவற்றை மேம்படுத்தி, நமக்கு நீண்ட மற்றும் ஆரோக்கியமான
வாழ்வை அளிக்கும் ஒன்றாகும். போலியான புன்னகையில் சில தசைகள் மட்டுமே
செயல்படுகின்றன. அதேவேளை ஒரு உண்மையான புன்னகையில் ஏராளமான தசைகள் செயல்படுகின்றன.
புன்னகைத்தல் மிகவும் அவசியம். ஏனென்றால் இதைப் பெறும் நபருடன் ஒரு ஒன்றிணைப்பை
ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி 16 பேறுகளை தருகிறது.
அந்த பதினாறு
பேறுகளை கவனிப்போம்.
1.இதயத்துடிப்பை சீராக்குகிறது
புன்னகை இதயத்திற்கான ஒரு ஆரோக்கியமான
உடற்பயிற்சி. இது இதய துடிப்பை சீராக்கி, இரத்த
அழுத்தத்தைக் குறைக்கிறது
2.மன அழுத்தத்தைக் குறைக்கிறது
இந்த நவீன உலகில் மன அழுத்தம் என்பது
பொதுவான ஒரு பிரச்சனை, இது
பல்வேறுபட்ட உடல் உளப் பிரச்சனைகளை உருவாக்குகிறது. புன்னகைத்தல் மூளையில்
ஹார்மோன்களை (எண்டோர்பின்கள்) சுரக்கச் செய்வதால், இது
மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
3.சிறந்த மனநிலை
புன்னகைத்தல் மூலம் வெளியேற்றப்படும்
எண்டோர்பின்கள் உங்களில் சிறந்த மனநிலையை உருவாக்குகிறது.
4.ஆக்கத்திறனை அதிகரிக்கிறது
புன்னகை, ஆக்கத்திறனை
அதிகரிக்கிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சில அழகான விலங்குகளின்
வேடிக்கையான இணையத்தளப் படங்கள் உண்மையில் மக்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது.
5.நம்பிக்கையை ஊக்குவிக்கிறது
மக்களுக்கிடையில் ஒரு
குறிப்பிட்ட அளவு நம்பிக்கையை புன்னகை உருவாக்குகிறது. சமூக அமைப்பில் முக்கிய
கூறுகளில் ஒன்று நம்பிக்கை, புன்னகை
சமூக அமைப்பில் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை மட்டுமன்றி, புன்னகைப்பவரின்
மீது ஒரு நம்பிகையையும் உருவாக்குகிறது.
6.அனுதாபத்தை உருவாக்குகிறது
மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன
நினைக்கிறார்கள் என்ற ஒரு கனிவான போக்கை புன்னகை உருவாக்குகிறது.
7.வருத்தத்தை தடுக்கிறது
நாம் புன்னகைக்காவிட்டால்
வருத்தப்படுவதாக உணர்கிறோம். இவ்வாறு செய்யாவிட்டால் இது நமது மன அழுத்தத்தின்
அளவை அதிகரிக்கிறது.
8.வலியை நீக்குகிறது
புன்னகை மற்றும் சிரிப்பு
ஆகியவை இயற்கையான வலி நிவாரணிகள். எனவே இவை மன அழுத்த அளவைக் குறைக்கிறது.
9.கவனத்தை அதிகரிக்கிறது
புன்னகை நமது கவனத்திறனை
விரிவுபடுத்தி, பல்வேறு வேலைகளைச் செய்வதற்கு
நமக்கு உதவுகிறது. மேலும் நமது உள் உணர்வு மற்றும் அடிமனது பற்றிய ஆழ்ந்த அறிவை
வழங்குகிறது.
10.தொற்றும் தன்மை
50% மக்களின்
புன்னகை ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்குவதற்கு காரணமாக அமைகிறது. ஏனென்றால்
புன்னகை தொற்றும் தன்மைக்கு பிரபலமானது.
11.கவர்ச்சியை உருவாக்குகிறது
புன்னகை மக்கள் மத்தியில் அன்பை
வரவழைக்கிறது. புன்னகைக்கும் பெண்களுடனே ஆண்கள் நெருக்கமாகிறார்கள், மாறாக
புன்னகைக்காத பெண்களிடமல்ல.
12.வெற்றியைச் சம்பாதிக்கிறது
புன்னகையால் நம்பிக்கை மற்றும்
தன்னம்பிக்கையை தோற்றுவிக்க முடியும். மேலும் இது அதிக பணம் சம்பாதிப்பதற்கு
உதவுகிறது.
13.இளமைத் தோற்றம்
புன்னகைத்தல், முகத்திற்கு
இளமையான தோற்றத்தை கொடுக்கிறது என அறிவியல் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
14.நீடித்த வாழ்நாள்
புன்னகைக்காதவர்களை விட
புன்னகைப்பவர்கள் 7 வருடங்கள்
அதிகமாக வாழ்கிறார்கள்
15.நோய் எதிர்ப்பு சக்தியை
ஊக்குவிக்கிறது
புன்னகை உடலை ரிலாக்ஸ் செய்ய உதவுவதால், உடலின்
நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பையும் ரிலாக்ஸ் செய்கிறது.
16.மனிதன் என்கிற
அடையாளம்
புன்னகை ஒன்றே மனிதனை மனிதன் என்கிற உன்னதத்தை தருகிறது.
இவ்வாறு 16 பேறுகளை
இந்த புன்னகை தருகிறது. இதைவிட மனிதனுக்கு என்ன வேண்டும்?
14 கருத்துரைகள்:
மிக நல்ல பதிவு.
இனிய பாராட்டு.
இதே தலைப்பில் எனது ஒரு கவிதைஇணைப்ப தருகிறேன்
பாருங்கள். மிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
https://kovaikkavi.wordpress.com/2010/11/03/133-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88/
மிக்க மகிழ்ச்சி உங்களது வருகைக்கும் கருத்துக்கும்.உங்களது கவிதையை படித்தேன் நன்றாக உள்ளது.
Simple but very powerful fact sir. The way of presentation with photos of the leaders is very creative. Thanks for the blog.
Dear Venkat
This article is based on my closed friends smiles including you.
Thanks for your comment.
ரொம்ப ரொம்ப சூப்பர் சார்.
அதுவும் காந்தியின் சிரிப்பு உங்கள் பதிவுக்கு ஏற்ற போட்டோ சார்.
நன்றி ,நல்ல பதிவினை தந்தத்துக்கு
அன்பு ராஜன்
சார் ,சூப்ப்ப்ப்ப்பர்
நல்ல மெஸ்ஸேஜ்
வருடத்தின் முதல் பதிவு ,முற்றிலும் மிக்க நல்ல பதிவு சார்
என் இனிய பாராட்டுக்கள்
ஈ ன்னு இளிச்சா கூட நல்லதுதான்னா இனிமே பாலோ பண்ண வேண்டியதுதான்.நல்லா இருக்கு
இனிமையான பதிவு .என்றும் புன்னகையுடன் நன்றி
super sir.Very Nice. Continue your postings. I love this blog
kootti kootti padicchalum ,nallaa purinjuthu sir
நன்றாக உள்ளது. இன்னும் எழுதுங்கள் .நன்றி
புன்னகையின் சிறப்பு போன் நகையை மிஞ்சியது.
புகைப்படங்களும் அருமை
This is first time,i am reading a good blog. Very useful articles and messages. Continue ur writings."Punnagai manthiram" -very impressive like "Thoonguvathu eppadi?"
All the best Sankar.
Post a Comment