
ஸ்ரீ வல்லபாச்சார்யர்
எழுதிய மதுராஷ்டகம் தமிழில்..
அதரம்
மதுரம் வதனம் மதுரம்
நயனம் மதுரம் ஹஸிதம்
மதுரம்
ஹ்ருதயம்
மதுரம் கமனம் மதுரம்
மதுராதிபதேர் அகிலம் மதுரம்
உன்
இதழும் இனியது; முகமும் இனியது;
கண்கள் இனியது; சிரிப்பும் இனியது;
இதயம் இனியது; நடையும் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
வசனம்
மதுரம் சரிதம் மதுரம்
வஸனம் மதுரம் வலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம்
மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
உன்
சொல்லும் இனியது; குணமும் இனியது;
உடைகள் இனியது; உடலும் இனியது;
இயக்கம் இனியது; உலவல் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!
வேணுர்மதுரோ
ரேணுர்மதுர:
பாணிற்மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸக்யம்
மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
உன்
குழலும் இனியது; கால் தூசியும் இனியது;
கைகள் இனியது; பாதம்...