ஸ்ரீ காரிய சித்தி கணபதி திருக்கோயில்
ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத
ஸ்ரீவாலீஸ்வரசாமி கோவில்
தொந்தியில்லா கணபதி
உத்தியோகம், திருமணம், பிள்ளைப்
பேறு இம்மூன்றையும் நல்குபவராய் நத்தம் கிராமத்தில் எழுந்தருளி உள்ளார் ஸ்ரீ காரிய
சித்தி கணபதி. சென்னை செங்குன்றத்திலிருந்து கும்மிடிபூண்டி செல்லும் வழியில்
பஞ்செட்டி என்னும் கிராமத்திலிருந்து மேற்கே பிரியும் சாலையில் மூன்று கிலோ
மீட்டர் தொலைவில் உள்ளது நத்தம் கிராமம்.
இந்த கிராமத்தில் தென்மேற்கு மூலையில், அழகுற
எழும்பி நிற்கிறது ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ வாலீஸ்வரர் திருக்கோயில்.
இந்த திருக்கோயில் தென்மேற்கில் கம்பீர மாக காட்சி தருகிறார் ஸ்ரீ காரிய சித்தி
கணபதி. பொதுவாக விநாயகர் என்றாலே தொந்தி தான் நம் கண் முன்னே வந்து நிற்கும். இவரோ
தொந்தியில்லா கணபதி.
மேலிருகரங்களில்...