
உலகமக்களின் நன்மைக்கு ஆதிநாளிலிருந்தே ஆதாரமாக விளங்கி வருவது பசு.
முறைப்படி பசுவை வணங்குவதை கோபூஜை என்பர். கோ என்றால் சத்தியம், வாக்கு,
நீர், சுவர்க்கம், ஒளி, சந்திரன், அக்கினி, அரசன், உலகம் என்று பொருள் சொல்லப்படுகிறது.
ராமபிரான் பூமியில் அவதரிக்க மூல காரணமே கோபூஜைதான் என்கிறது
புராணம். சக்கரவர்த்தி திலீபன் பல வருடங்களாக பிள்ளைப் பேறின்றி
வேதனையில்ஆழ்ந்திருந்தான். அப்போது, அவன் அரண்மனைக்கு வந்த வசிஷ்ட
முனிவர், நந்தினி எனும் பசுவைக் கொடுத்து பூஜிக்கும்படி சொன்னார். அதன்படியே தினமும்
அதனை நீராட்டி,
தகுந்த ஆகாரத்தைக் கொடுத்து வழிபட்டுவந்தான் திலீபன். அவ்வாறு
அதனைப் பேணி வளர்த்துவந்ததன் பயனாக திலீபனுக்கு ஒரு மகன்
பிறந்தான். அந்தக் குழந்தைக்கு ரகு என்று பெயரிட்டான்.
வருடங்கள் கழிந்தன. திலீபன் தன் மகனான ரகுவுக்குத்...