வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Friday, March 18, 2016

கவிதாஞ்சலி

ஒரு நன்னாளில் உங்களுக்கு மருமகனானேன். சிறிது நாளில் என்னை மகனாய் மாற்றினீர். பாசத்திற்கு படிப்பறிவு தேவையில்லை தூய அன்பு போதும். அதனால் எந்நேரமும் எல்லார் நலமும் வேண்டினீர். உங்கள் இதயத்தில் அன்பை மட்டும் சென்று வர அனுமதித்தீர் அதனால் இரத்தம் கொஞ்சம் சென்று வர தடுமாறியது. இனிப்பாய் பேசி மறுபக்கம் கசப்பு வைக்கும் உறவினரிடையே எனக்கு பாசம் மட்டுமே காட்டியதால் உங்களுக்கு “சக்கரை” கொடுத்தானோ?பாவிக் கடவுள். பங்குனி முதல்நாளில் என் பிரார்த்தனை பொய்த்த போது காலன் கண் வைத்தான் உங்கள் மூச்சிற்கு முற்றுப்புள்ளியிட்டான். வாழும் மக்களுக்கு வாழ்ந்த நீங்கள் பாடம் அது மட்டுமா? உங்கள் அன்பு ஞானம் தரும் போதி மரம். இது கால் நூற்றாண்டு மேலான பந்தம். காலமெல்லாம் மறவாமல் இனி...

Tuesday, March 8, 2016

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தலைவர்கள் வாழ்த்து

table.tableizer-table { font-size: 12px; border: 1px solid #CCC; font-family: Arial, Helvetica, sans-serif; } .tableizer-table td { padding: 4px; margin: 3px; border: 1px solid #CCC; } .tableizer-table th { background-color: #104E8B; color: #FFF; font-weight: bold; } வான்மீகீயூர்.L.L.சங்கர் சுய முன்னேற்றம் கண்டு வெற்றி பெற சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள். ஆளுநர் ரோசய்யா ஆளுநர் ரோசய்யா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மகளிர் மேம்பாடு மூலமாகவே வீட்டையும் நாட்டையும் முன்னேற்ற முடியும் என கூறியுள்ளார்.மகளிருக்கு எதிரான வன்முறைகளையும் தடைகளையும் தகர்த்து அவர்களை பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,...

Monday, March 7, 2016

சிவாலய ஓட்டம்

முன்பு ஒரு காலத்தில் சுண்டோதரன் என்னும் அரக்கன் ஒருவன் இருந்தான். அவன் மிக சிறந்த  சிவ பக்தன். சிவலிங்கத்தை எங்கு பார்த்தாலும் குளித்து அந்த லிங்கத்தை மூன்று முறை சுற்றி விட்டுதான் மறுவேலை பார்ப்பான். அவன் ஒரு முறை சிவ பெருமானை நினைத்து கடுமையாக தவம் புரிந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவ பெருமான் அவன் முன் தோன்றி, “என்ன வரம் வேண்டும்” என்று கேட்க, அரக்கன் “தான் யாரை நோக்கி தனது சுண்டு விரலை காட்டுகிறேனோ அவன் சாம்பல் ஆகிட வேண்டும் ” என்று வரம் கேட்க, சிவபெருமானும் கொடுத்து விட்டார். வரத்தை பெற்றதும் அரக்கனுக்கு தனக்கு உண்மையிலே வரம் கிடைத்து விட்டதா என்று சந்தேகம் எழுந்தது. உடனே சிவபெருமானிடம், “நான் இதனை சோத்தித்து பார்க்க தேவலோகம் வரை போகவேண்டும். இப்போது அதற்கு நேரமில்லை. அதனால் தங்களிடமே இதனை சோதித்து பார்க்க போகிறேன்” என...

Friday, March 4, 2016

மகாசிவராத்திரி 2016

அன்றாடம் சிவனை இரவில் வழிபட்டால் அது, நித்திய ‘சிவராத்திரி’எனப்படும். திங்கட்கிழமைகளில் (சோமவாரத்தில்)  அமாவாசை வருவது மிகவும் சிறந்தது. அத்தகைய சோமவார இரவு, ‘யோக சிவராத்திரி’ எனப்படும். தேய்பிறைச் சதுர்த்தசி இரவு, ‘மாத சிவராத்திரி’ எனப்படும். சிவனடியார்கள் பலர் மாதந்தோறும் இந்த சிவராத்திரியைத் தவறாமல் அனுஷ்டித்து வருகின்றனர். மாசி மாதத்தில் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க ‘மகாசிவராத்திரி’ புண்ணிய காலமாகும். தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது அங்குத் தோன்றிய நல்ல பொருள்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்வதற்குப் பலரும் முன்வந்தனர். ஆனால், விஷம் தோன்றியதும் எல்லாரும் பயந்து ஓடினார்கள். ஈசன் தன் அணுக்கத் தொண்டரான சுந்தரரை அனுப்பி, அந்தக் கூட்டு நஞ்சை எடுத்துவரப் பணித்தான். சுந்தரரும் ஆலாலத்தை...

Thursday, March 3, 2016

இது உச்சமல்ல!

இது உச்சமல்ல! உன் வியர்வையை தாய் முந்தானை துடைக்கும். பயத்தை தந்தை கை பக்கத்தில் வராமல் ஒடுக்கும். பாடங்களை பதிய வைத்த ஆசிரியனின் ஆசிகள் உன்னை அக்கரை சேர்க்கும். வெற்றி மட்டுமே வேண்டும் என்ற முனைப்போடு செயல்படு. வாழ்த்துக்களும் ஆசியும் உனக்கு உண்டு தளராமல் எழுது ஞாபகத்தோடு. வாசலில் வந்து நிற்கும் எதிர்கால வசந்தம் புன்னைகையோடு. இது உச்சமல்ல இதுவொரு பதிவேடு பதிவுகள் உன்னால் உனக்காக நிரப்பப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (04.03.2016) தொடங்கும் பிளஸ் டூ தேர்வை எழுதும் அனைத்து  மாணவ-மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள் Read Arrow Sankar's Blog var pfHeaderImgUrl = '';var pfHeaderTagline = '';var pfdisableClickToDel = 0;var pfHideImages = 0;var pfImageDisplayStyle = 'right';var pfDisablePDF...

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms