வான்மீகீயூர்.L.L.சங்கர்
| |
---|---|
| சுய முன்னேற்றம் கண்டு வெற்றி பெற சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள். |
ஆளுநர் ரோசய்யா | |
ஆளுநர் ரோசய்யா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மகளிர் மேம்பாடு மூலமாகவே வீட்டையும் நாட்டையும் முன்னேற்ற முடியும் என கூறியுள்ளார்.மகளிருக்கு எதிரான வன்முறைகளையும் தடைகளையும் தகர்த்து அவர்களை பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். | |
முதலமைச்சர் ஜெயலலிதா | |
| முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், மகளிருக்காக தமிழக அரசு பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறியுள்ளார். மகளிர் மேம்பாட்டில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, சோதனைகளை உறுதியாக எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தியுள்ளார். |
திமுக தலைவர் கருணாநிதி | |
| திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்கள் முன்னேற்றத்திற்காக, என்றென்றும் பாடுபடும் இயக்கம் திமுக என கூறியுள்ளார். மகளிர்க்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க முன் வரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள அவர், மகளிருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறியுள்ளார். |
தேமுதிக தலைவர் விஜயகாந்த் | |
| தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பெண்கள் தற்சார்பு பெற்று தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் அனைத்து துறைகளிலும் முன்னேறவும் வாழ்த்துவதாக கூறியுள்ளார். |
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் | |
| பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற பெண்களின் விருப்பம் நிறைவேற இந்நாளில் உறுதியேற்போம் என கூறியுள்ளார். |
ஜி.கே. வாசன் | |
| தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகளிர் முன்னேற அனைவரும் உறுதுணையாக இருப்போம் என குறிப்பிட்டுள்ளார். |

1 கருத்துரைகள்:
மிக நன்று.
இனிய வாழ்த்துகள்.
https://kovaikkavi.wordpress.com/
Post a Comment