உங்களுக்கு
மருமகனானேன்.
சிறிது நாளில்
என்னை மகனாய் மாற்றினீர்.
பாசத்திற்கு
படிப்பறிவு தேவையில்லை
தூய அன்பு போதும்.
அதனால் எந்நேரமும்
எல்லார் நலமும் வேண்டினீர்.
உங்கள் இதயத்தில்
அன்பை மட்டும்
சென்று வர அனுமதித்தீர்
அதனால் இரத்தம்
கொஞ்சம் சென்று வர தடுமாறியது.
இனிப்பாய் பேசி
மறுபக்கம் கசப்பு
வைக்கும் உறவினரிடையே
எனக்கு பாசம் மட்டுமே காட்டியதால்
உங்களுக்கு “சக்கரை” கொடுத்தானோ?பாவிக் கடவுள்.
பங்குனி முதல்நாளில்
என் பிரார்த்தனை
பொய்த்த போது
காலன் கண் வைத்தான்
உங்கள் மூச்சிற்கு முற்றுப்புள்ளியிட்டான்.
வாழும் மக்களுக்கு
வாழ்ந்த நீங்கள் பாடம்
அது மட்டுமா?
உங்கள் அன்பு
ஞானம் தரும் போதி மரம்.
இது கால் நூற்றாண்டு
மேலான பந்தம்.
காலமெல்லாம் மறவாமல்
இனி காத்திருப்பேன்
மீண்டும் ஜென்மம் என்றொன்று இருந்தால் உங்கள் மகனாய் பிறக்க.
எனது மனைவியின் அம்மாவும் எனக்கு இன்னொரு தாயுமான திருமதி காந்தா ஜெயராமன் அவர்களின் மறைவையொட்டி (மன்மத வருடம் பங்குனி முதலாம் நாள் – 14.03.2016) நான் வடித்த கண்ணீர் கவிதாஞ்சலி

2 கருத்துரைகள்:
சரியான புகழஞ்சலி
சரியான புகழஞ்சலி
Post a Comment