
தொழிலாளி
என் தெருவிலுள்ள முடிதிருத்தம் ஒன்றில் முடித் திருத்துவதற்காக
அன்று காலை ஏழு மணிக்கு சென்றேன். அப்போதுதான் திறந்து இருந்தது என்பதை ஊதுவர்த்தியின்
மெல்லிய வாசனைப்புகையும் செல்போனில் கந்தசஷ்டியும் சொல்லியது. யாரும் இல்லாததால்
நானே முதல் ஆளாய் உட்கார முடிதிருத்துபவர்(அவரேதான் அந்த கடையின் முதலாளி) துணி
போர்த்தி வழக்கமாய் கேட்கும் கேள்வியோடு ஆரம்பித்தார். அவர் வாயில் இருந்த குட்காவின்
வாசனை அவர் கேள்வியோடு சொதப்பி நாற்றமாடியது. தண்ணீர் ஸ்பிரே “ஸ்,.. ஸ்,.. என என் தலையை ஜில்லாக்க,
சீப்பும் கத்திரிக்கோலும் கச்சேரி ஆரம்பித்தது.
இடைஇடையில் கடை வாசலின் ஓரமாய் குட்கா எச்சிலைத்
துப்பிவிட்டு வந்து முடிவெட்டினார். யாரோ செல்போனில் கூப்பிட கந்தசஷ்டி நிற்க
முடிதிருத்துபவர் எடுத்து கொஞ்சம் திட்டினார், கொஞ்சம் கொஞ்சினார், கொஞ்சம் மிரட்டினார்....