Friday, May 12, 2017

பிளஸ் 2 தேர்வில் எந்த கிரேடு?

பிளஸ் 2 தேர்வில் எந்த கிரேடு?

பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிடும் முறையில் இந்த ஆண்டு(2017) முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது, இதுவரை மாணவர்களின் ‘‘ரேங்க்’’ பட்டியல் வெளியிடப்பட்டு வந்தது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், மாநில அளவில் முதல் இடம் பெற்றவர்கள், இரண்டாம் இடம் பெற்றவர்கள், மூன்றாம் இடம் பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்படும். 

ஆனால் இந்த ஆண்டு முதல் ரேங்க் பட்டியல் வெளியிடப்படமாட்டாது. மாணவர்களுக்கு மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு கிரேடு வழங்கப்படும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1180
மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ மாணவிகளுக்கு A கிரேடு வழங்கப்படும். அதனை 1,171 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

கிரேடு முழு விவரம்:-


1151
முதல் 1180 வரை - B கிரேடு

1126
முதல் 1150 வரை - C கிரேடு

1101
முதல் 1125 வரை - D கிரேடு

1001
முதல் 1100 வரை - E கிரேடு 

901
முதல் 1000 வரை - F கிரேடு

801
முதல் 900 வரை - G கிரேடு

701
முதல் 800 வரை - H கிரேடு

700-
க்கு கீழ் - I கிரேடு

பிளஸ் 2 தேர்வு முடிவில் 1151 முதல் 1180 வரை மதிப்பெண் பெற்ற 12,283 மாணவர்களுக்கு பிகிரேடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 1126 முதல் 1150 வரை மதிப்பெண் பெற்ற 14,806 பேருக்கு சிகிரேடு வழங்கப்பட்டுள்ளது. 14,806 மாணவர்களுக்கு டி கிரேடும், 95,906 மாணவர்களுக்கு இ கிரேடும் வழங்கப்பட்டுள்ளது. 
Arrow Sankar Print Friendly and PDF

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms