Friday, May 5, 2017

நீட் (NEET - National Eligibility and Entrance Test)

நீட் (NEET - National Eligibility and Entrance Test) தேர்வு ஒரு தகுதிகாண் தேர்வுதான்(qualifying test). அது ஒரு போட்டித் தேர்வு அல்ல (Not a competitive test).
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள சுமார் 2500 MBBS இடங்கள் நீட் தேர்வில் தேறியோரைக் கொண்டே நிரப்பப்படும்.
தனியார் கல்லூரி இடங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளின் இடங்கள் உட்பட தமிழ்நாட்டில் மொத்தமுள்ள அனைத்து இடங்களும் (PG மற்றும் UG)நீட் தேர்வில் தேறியோரைக் கொண்டு மட்டுமே நிரப்பப்படும்.
மொத்த மருத்துவ இடங்களில் 85 சதம் தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்களுக்கும் 15 சதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படும்.இது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது.இது அப்படியே தொடரும்.
நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்களின் இடங்கள் பறிக்கப்பட்டு விடும்; அவை வெளிமாநில மாணவர் களுக்கு வழங்கப்பட்டு விடும் என்பதெல்லாம் உண்மையல்ல. மருத்துவ இடத்தைப் பெறுவதற்கு,தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனை எவ்வித மாற்றமும்  இன்றி நீடிக்கிறது.
தமிழ்நாட்டில் 69 சதம் இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது.இது அப்படியே தொடரும். அதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் நடப்பிலுள்ள இட ஒதுக்கீடு அப்படியே தொடரும்.

குறைந்த மதிப்பெண் பெற்ற பணக்கார வீட்டுப் பிள்ளைகள், ஒரு கோடி முதல் ஒன்றரைக் கோடி ரூபாய் வரை கொடுத்து, தனியார் கல்லூரி மற்றும் நிகர்நிலைப் பல்கலைகளில் மருத்துவ இடங்களைப் பெறும் கொடிய வழக்கம் முடிவுக்கு வருகிறது. பத்துக்கோடி ரூபாய்  கொடுத்தாலும், நீட் தேர்வில் தேறாவிட்டால் மருத்துவ இடம் கிடைக்காது. இந்த நிலையை நீட் தேர்வு உருவாக்கி இருக்கிறது. சுருங்கக் கூறின், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைகளின் "கல்வித் தந்தை"களுக்கு  மரண அடி கொடுப்பதே நீட் தேர்வின் ஒரே நோக்கம்.
மருத்துவக் கல்வியில் ஒரு குறைந்தபட்ச தரத்தை உருவாக்குவதும், தனியார் கல்லூரிகளில் மருத்துவ இடங்களை நிரப்புவதில் ஓர் ஒழுங்கு முறை ஏற்படுத்துவதுமே நீட் தேர்வின் நோக்கம்.(The sole purpose of NEET   is to regulate the seat allotment).
எனவேதான் மாநிலத்திற்கு உரிய இடங்கள், இட ஒதுக்கீடு முதலிய எந்த விஷயங்களுக்கும் நீட் தேர்வுக்கும் எவ்விதத்  தொடர்பும் இல்லை. நீட் தேர்வானது அந்த விஷயங்களில் எல்லாம் தலையிடவே இல்லை. அந்த விஷயங்கள்  நீட் தேர்வின் செயல்பாட்டு வரம்புக்கு உட்படவே இல்லை.
நீட் தேர்வில் தேறியோர் பட்டியலை, அந்தந்த மாநில அரசுகளுக்கு, நீட் தேர்வை நடத்தும் அமைப்பு வழங்கும்.அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வி பெற முடியும். அவ்வளவுதான்.
தனியார்மயக் கைக்கூலிகளும், சுயநிதி மருத்துவக் கல்விக் கொள்ளையர்களின் எடுபிடிகளுமே பெருங்கூச்சலிட்டு நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்.

`நீட்' தேர்வைப் பொறுத்தவரை மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(NCERT) பரிந்துரை செய்துள்ள +1, +2 பாடத்திட்டங்களின் அடிப்படையில்தான் கேள்விகள் கேட்கப்படும். சிபிஎஸ்இ(CBSE) பாடப்புத்தகங்களைப் படித்தால் மட்டுமே நீட் தேர்வை எழுத முடியும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது உண்மையில்லை. தமிழக அரசின் +1, +2 பாடத்திட்டங்கள் தர அளவில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட குறைந்ததில்லை. NCERT-யின் தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு அடிப்படையிலேயே தமிழகஅரசுப் பாடத்திட்டங்களும் தயாரிக்கப் பட்டுள்ளன. அதனால்,  தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்தவர் களும் இத்தேர்வை நன்றாக எதிர்கொள்ள முடியும் 
+1, +2 இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் இருந்து பாடத்திற்கு 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஓவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள். மொத்தம் 720 மதிப்பெண்கள்.  ஒவ்வொரு தவறான வினாவிற்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.
மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். பிறகு மருத்துவப் படிப்பில் சேர குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் வெளியிடப்படும். தேர்வுகள் முடிந்து விடைத்தாள்கள் திருத்தப்பட்ட பிறகு மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் மருத்துவப் படிப்பில் சேர  ஒரு தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்கும். அந்த தகுதி மதிப்பெண்களுக்கு  குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்கள் மேனேஜ் மெண்ட்(MANAGEMENT QUOTA) கோட்டாவில் கூட மருத்துப்படிப்பில் சேர முடியாது. 
இந்தத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவரின் மதிப்பெண் எவ்வளவோ, அதில் பாதி தான் தகுதி மதிப்பெண். உதாரணத்துக்கு, மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில், அதிகபட்சமாக ஒரு மாணவர்  320 மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், தகுதி மதிப்பெண் 160 என்று நிர்ணயிக்கப்படும்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு எழுதலாம் என்றாலும் தமிழில் இத்தேர்வுக்கான பாடத்திட்டங்களோ, பாடப் புத்தகங்களோ இல்லை என்பது வருந்தத்தக்கது.

 Print Friendly and PDF

1 கருத்துரைகள்:

கரந்தை ஜெயக்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு எழுதலாம் என்றாலும் தமிழில் இத்தேர்வுக்கான பாடத்திட்டங்களோ, பாடப் புத்தகங்களோ இல்லை என்பது வருந்தத்தக்கது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms