தனிமையைப் போக்குவது
எப்படி?
புதியவர்களிடம்
பேசுங்கள்
:ரயில் பயணங்களில், பொது இடங்களில் சந்தர்ப்பம் கிடைக்கும்போது மற்றவர்களோடு பேசுங்கள். அரட்டை மகிழ்ச்சியான மனநிலைக்கு உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
பிடித்தவர்களோடு
அடிக்கடி
உரையாடுங்கள்
:மகிழ்ச்சியாக இருக்கும்போது நம்முடைய மூளைத் திசுக்களில், 'எண்டார்ஃபின்" என்ற ரசாயனப் பொருள் மிகுந்து, 'வென்ட்ரல் டெக்மெண்டல் பகுதி" துரிதமாகச் செயல்படத் தொடங்குகிறது. இதனால் நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. விடுதி அறையில் உங்களுடன் தங்கியிருப்பவர்களோடு தினமும் உரையாடுங்கள்.
பொது நிகழ்ச்சிகளில்
பங்கேற்பது
:பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது புதியவர்களை நேரில் சந்தித்துப் பேசிப் பழகுவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.
படைப்பாற்றலை
மேம்படுத்துங்கள்
:மேடைப் பேச்சாற்றல், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், கதை - கட்டுரை எழுதுதல், ஓவியம் தீட்டுதல் போன்றவற்றில் ஈடுபடும்போது உங்களுடைய ஆளுமைத் திறனும் மேம்பட்டு உங்களுக்குத் தனிமை எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்கும்.
பகிர்ந்தால் பாரம்
குறையும்
:அர்த்தமுள்ள உறவுகள் நம்மைத் தாங்கிப் பிடிக்கும் தூண்கள். நம்மைப் புரிந்துகொண்டவர்களிடம், நம் தனிமையை வெளிப்படுத்தும்போது, அதற்குரிய தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
Arrow Sankar

0 கருத்துரைகள்:
Post a Comment