டெபிட்
கார்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி?
முன்பெல்லாம்
ஒரு வங்கியில் கணக்கு வைத்து பராமரிப்பதே பெரிய விஷயமாக இருந்தது. ஆனால், இப்பொழுதோ ஒருவருக்கே பல வங்கிகளில் கணக்குகள்
வைத்திருப்பது சாதாரணமாகி விட்டது.
அதன்
விளைவு, இன்றைக்கு பலரது பர்ஸ்களிலும் பல வண்ண, ஏ.டி.எம் கார்டுகள்
இருப்பதைப் பார்க்கலாம். இவை பாதுகாப்பானவை என்று நினைக்கிறார்கள் பலர். ஆனால், இந்த கார்டுகளை நாம் பத்திரமாக வைத்துக்கொள்ளவில்லை என்றால், நம் பணம் திருட்டுப் போக வாய்ப்புண்டு.
இந்த
கார்டுகளை எப்படி பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி இனி பார்ப்போம்.
டெபிட்
கார்டின் பின்புறம் தெளிவாக கையெழுத்திட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
உங்கள்
டெபிட் கார்டை நீங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வங்கி
முகவர்கள் என்று யார் வந்து கேட்டாலும் டெபிட் கார்டின் நகலை ஸ்கேன் செய்தோ, ஜெராக்ஸ் எடுத்தோ கொடுக்கக்கூடாது.
இன்டர்நெட்
மூலமோ, தொலைப்பேசி மூலமோ, உங்கள் டெபிட் கார்ட் எண் மற்றும் ஊஏஏ எண்ணை (கார்டின் பின்புறம் உள்ள எண்ணின் கடைசி மூன்று இலக்குகள்) யார் கேட்டாலும் தெரிவிக்கக்கூடாது.
அதுபோல
இன்டர்நெட் மூலம் பஸ்ஃரயில்ஃவிமான டிக்கெட்டுகளை வாங்க பிற முகவர்களிடம் டெபிட் கார்ட் எண் மற்றும் CVV எண்ணை
தெரிவிக்காமல் இருப்பது நல்லது.
வங்கி
அனுப்பி இருக்கும் PIN எண்ணை மாற்றிக் கொள்ள வேண்டும்.
பதினைந்து
நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறையோ PIN எண்ணை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
டெபிட்
கார்டின் கவரின் மேல் PIN எண்ணை எழுதி வைக்கக்கூடாது.
உங்கள்
நண்பர்களும், உறவினர்களும் கண்டுபிடிக்காத வண்ணம் சிக்கலான PIN எண்ணை அமைத்துக் கொள்வது சிறந்தது.
Arrow Sankar

0 கருத்துரைகள்:
Post a Comment