
யோக வாழ்வு தரும் ‘5’ பிள்ளையார்கள்!
கட்டமுது கொடுத்த பிள்ளையார்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது தலயாத்திரையில்
`திருக்குருகாவூர் வெள்ளடை' என்ற தலத்தை தரிசிக்கச் செல்கிறார். அப்போது கோடை காலம்.
கடுமையான வெயில். சீர்காழியிலிருந்து இத்தலத்துக்கு வரும் வழியில், நாக்கு வறண்டு தண்ணீர்
தாகமும் பசிவேட்கையும் மிகுந்திருந்தன. தம்பிரான் தோழரும் அவருடன் வந்த சிவனடியார்களும்
மிகவும் களைப்படைந்தனர். இவர்களின் தவிப்பையும் வேதனையையும் கண்டு மனம் குழைந்த சிவபெருமான்,
அத்துயரை மாற்ற திருவருள் புரிந்தார்.
அவர்கள் நடந்து வரும் வழியில் எடமணல் என்ற
ஊரில் வீடுகளோ அல்லது சாலைகளோ இல்லை. ஊர்ப்பெயருக்கு ஏற்றவாறு எங்கும் வெட்டவெளியாகக்
கடற்கரை மணல் போன்று காட்சியளித்தது. ஆனால், அங்கு ஒரு மூலையில் மூத்த பிள்ளையார் மட்டும்
அமைதியாக அமர்ந்திருந்தார். அந்த விநாயகர் மூலம்...