
Tuesday, February 10, 2015

Unknown
கிராமத்தின் ஆற்றோரமாய் குடில்
அமைத்து தன் சிஷ்யர்களுடன் தவம் செய்து வந்தார் வான்ஷங் ஞானி. தவத்தினூடே வான்ஷங்
தன் சிஷ்யர்கள் மற்றும் அந்த கிராம மக்களுக்கு ஆன்மீக போதனை களையும் தனக்கு
கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தான தருமங்களையும் செய்து வந்தார்.
அதே கிராமத்தின் ஆற்றோரமாய் எதிர்
பக்கத்தில் நாத்திகன் ஒருவன் குடிசை கட்டி வாழ்ந்து வந்தான் அவன் வான்ஷங் ஞானி
கருத்துக்களுக்கு எதிராக “கடவுள் இல்லை. நமது வினைகளுக்கும், நமது
ஏற்றத்தாழ்வுக்கும் நாமே காரணம், நாமே
விடை என அந்த கிராம மக்களுக்கு கூறியும் தன் பிழைப்புக்காக விவசாயமும் செய்து
வந்தான். எதிர் எதிராக இவர்களது இருவேறு கருத்துக்களை தினமும் கேட்டுக்கொண்டிருந்த
அக்கிராம மக்கள் பலர் வான்ஷங் ஞானியை தரிசித்தும் சிலர் நாத்திகனிடமும் பேசி
வந்தனர்.
காலம் கடந்தது.
சொர்க்கத்தின் வாசலில் கடவுளை
தரிசிக்க வான்ஷங் ஞானியும் சிஷ்யர்களும் வரிசையில் நின்று இருந்தனர். இவர்களது
அடுத்த வரிசையில் நாத்திகன் நின்று இருந்தான்.
அவனை கண்டதும் ஒரு சிஷ்யன் வான்ஷங்
ஞானியை பார்த்து, குருவே, “கடவுள் இல்லை” என்று
சொன்ன அந்த நாத்திகனுக்கும் சொர்க்கத்தில் இடமா? என்றான்.
வான்ஷங் ஞானி மெல்ல புன்னகைத்து
பின் பதிலளித்தார். நாம் கடவுள் இருக்கிறார் என்பதற்கு பல உதாரணங்களையும்,
விளக்கங்களையும் அளித்தோம். அவன் கடவுள் இல்லை என்பதற்கு எந்த ஒரு விளக்கமோ
அதற்க்கான முயற்சியோ செய்யவில்லை மாறாக கடவுள் என்பதை மறந்து அதனை ஒரு கொள்கையாகவே
எடுத்து உயிர் வாழ விவசாயமும் அதன் மூலம் வரும் வருமானத்தை மேலும்மேலும் கூட்ட
உழைத்தும் தன்னால் முயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்தும் வந்தான். என்ற வான்ஷங்
ஞானி,மேலும் தொடர்ந்து “எந்த
ஒரு மனிதனுக்கும் கொள்கையில் பிடிப்பும் உழைப்பும் இருந்தால் கடவுள் அவர்களை தன்
பக்கத்தில் வைத்துக்கொள்வார் “ என்றார்.
சிஷ்யன் நாத்திகனையும் வணங்கினான்.
9 கருத்துரைகள்:
நல்ல நீதிக்கதை. அவரவர்கள் கடமையை ஒழுங்காகச் செய்பவனே கடவுளுக்குப் பிடித்தமானவன்.
“எந்த ஒரு மனிதனுக்கும் கொள்கையில் பிடிப்பும் உழைப்பும் இருந்தால் கடவுள் அவர்களை தன் பக்கத்தில் வைத்துக்கொள்வார் “ உண்மையான கருத்து.நன்றி
உழைப்பே உயர்வை தரும் ,அதுவே மகத்தானது
நல்ல கதை.நன்று
உழைப்பை கடவுள் ஏற்று கொள்கிறார்.
உங்கள் பிளாக்கை பல நாட்களாக படித்து வருகிறேன்.எல்லாமே நன்றாக உள்ளது .தமிழில் கருத்து எழுத தெரியாமல் இருந்தேன் .எனது நண்பர் மூலமாக அறிந்துக் கொண்டு எழுதுகிறேன் .வணக்கம்.நன்றி. இந்த கதையும் உழைப்பின் சிறப்பை நன்றாக எடுத்துக் காட்டியுள்ளது.
நல்ல ஒரு படிப்பினை .
மிக்க நன்றி அறியத் தந்ததற்கு.
வேதா. இலங்காதிலகம்.
தங்களது வலைப்பூவினைக் கண்டு மகிழ்ச்சி. நல்ல நீதி. இறைவன் இருக்கின்றானா இல்லையா என்ற விவாதங்களில் ஈடுபடுவதை விடுத்து இவ்வாறாக தம் உழைப்பிலும் கொள்கையிலும் உறுதியோடு இருந்தால் மேம்படலாம்.
திரு ஜம்புலிங்கம் அவர்களே உங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி
Post a Comment