
Friday, February 13, 2015

Unknown
நம்பிக்கை (பிப்ரவரி 14 க்கான கதை)
சூபி ஞானியான ஜுன்னேய்த்தின் மீது
நம்பிக்கை வைத்திருந்த ஒரு சீடர், ஒரு நாள் காட்டில் வேட்டை ஆடச் சென்றபோது, தூரத்தில், ஜுன்னேய்த்தின் அருகில் முகத்திரை அணிந்த ஒரு இஸ்லாமியப் பெண் அமர்ந்து, மதுவை ஒரு கோப்பையில் அவருக்காக
ஊற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு ஜுன்னேய்த் ஒரு ஏமாற்றுக்காரர் என்ற
முடிவுக்கு வந்தான். அவனைக் கவனித்த ஜுன்னேய்த் அவனை அருகே அழைத்தார். அவன் முகக்குறிப்பை அறிந்த
ஜுன்னேய்த் அப்பெண்ணின் முகத்திரையை விலக்கினார்.
அப்பெண் அவரது தாயார். ஜுன்னேய்த் கூறினார்,''நீ கற்பனை செய்த அழகான பெண் எங்கே? உன்னால் ஒரு மூதாட்டியைக் கற்பனை
செய்ய முடியுமா? இங்கே வந்து இந்தப் புட்டியை எடுத்து ருசித்துப்பார்.சுத்தமான
தண்ணீர். மது அல்ல. புட்டி மட்டும் மது இருந்த புட்டி.''
சீடன் மன்னிக்கும்படி அவர்காலில்
விழுந்தான்.
ஜுன்னேய்த் கூறினார்,''இது மன்னிப்புக்குரிய விஷயம் அல்ல,இது புரிந்து கொள்ளுதளுக்கான விஷயம்.
உன்னிடம் உள்ள நம்பிக்கை வற்புறுத்தி ஏற்படுத்தப்பட்டது. நீ பிற சீடர்களைப்போல நடக்க முயற்சிக்கிறாய். கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை
இப்பொழுதோ, எப்பொழுதோ
நிச்சயம் உடைந்து போகும். உனது அன்பு ஒரு முயற்சி.
உண்மையான அன்பு ஒரு முயற்சியாக
இருக்க முடியாது. நம்பிக்கை வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது. இயற்கையாக வரும்போது அது அழகாக
இருக்கும்.அப்போது அதை எதாலும் அழிக்க முடியாது.''
நன்றி : ஓஷோவின் கதைகள்
காதலும்
ஒர் உணர்வின் நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை
வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது. இயற்கையாக வரும்போது அது அழகாக இருக்கும். அப்போது அதை யாராலும்
எப்போதும் அழிக்க முடியாது.
இருமன மொழியை மண நாளையாய் அறிவிக்க
மவுன மொழியின் அரங்கேற்றம் தான் காதல்.
இலக்கியத் துறையிலிருந்து
விமர்சனத் தோணி ஓட்டும்
என் சகோதரர் ஒருவர்...
காதல் என்பது
பொய்யா மெய்யா
என்றுக் கேட்டார்,
ஓ....நல்ல வேளை!
சரியான நேரத்தில்
உன்னைச் சந்தித்தேன்.
இல்லாவிட்டால்
தவறான விடையைச்
சொல்லியிருப்பேன்.
கவிஞர் மீராவின் “கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்”
புத்தகத்திலிருந்து
|
8 கருத்துரைகள்:
/உண்மையான அன்பு ஒரு முயற்சியாக இருக்க முடியாது. நம்பிக்கை வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது. இயற்கையாக வரும்போது அது அழகாக இருக்கும்.அப்போது அதை எதாலும் அழிக்க முடியாது.''/
ISI வார்த்தைகள் இதுவே காதலின் உத்வேக வார்த்தைகள்.நன்றி
உண்மையான காதல் தோற்றாலும் வாழும்.
காதலுக்கு அன்பும் நம்பிக்கையும் தேவை .உண்மையான வார்த்தைகள்
பார்கவி மாமி சொன்னதுப்போல் காதலுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் அன்பும் நம்பிக்கையும் தேவை
சூஃபி ஞானி தன் தாயை ஏன் முகத்திரைகுள் இருக்க அனுமதித்தார்.?ஏன் மதுக் குப்பியில் நீரைக் கொடுக்க வைத்தார்.? கேள்விகள் கேள்விகள்.... எழுவதில் ஆச்சரியமில்லை. கண்மூடித்தன மான நம்பிக்கையில் எனக்கு உடன் பாடு இல்லை.
GMB sir
thankyou for ur comments.
1.இசுலாமியத் தாய் அவர்களது மரபுப்படி முகத்தை மறைத்து இருப்பர். தன் முகத்தை தனது கணவன் மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமே காட்டுவார்கள்.
2.ஞானி,சித்தன்,சாமானிய யதாத்திரன் தனக்கு கிடைக்கும் பொருளையே சுத்தம் செய்து உபயோகப்படுத்துவர். அவசியமெனில் புதிதாய் வாங்கி கொள்வர்
3.இதையெல்லாம் விட இது ஒரு கருத்தை விளக்க முற்பட்ட கதை மட்டுமே. இங்கே நம்பிக்கையே மூட நம்பிக்கை என்பது மூடநம்பிக்கையின் மேல் கொண்ட நம்பிக்கையை அகற்ற முயலும் நம்பிக்கை மட்டும்தான்.
நன்றி
இப்பதிவிற்கான புகைப்படம் மிகவும் அருமையாக இருந்தது. வலைப்பூவின் முகப்பில் சே-யின் முகம் கண்டு மகிழ்ந்தேன். தொடர்ந்து சந்திப்போம் பதிவுகள் மூலமாக.
நன்றி சார்
Post a Comment