
Wednesday, February 11, 2015

Unknown
கடவுள் கொண்டு வந்த
கைப்பெட்டி
மனிதனொருவன் தான் இறக்க
போகிறோம் என உணர்ந்த போது கடவுள் ஒரு
கைப்பெட்டியுடன் அவனருகில் வருவதை
கண்டான்.
அவனருகில் வந்த
கடவுள் சொன்னார் “மனிதனே
உனது காலம் முடிந்து விட்டது.என்னுடன் வா”
சற்று வியப்படைந்த
அவன் ‘என்னது இப்போதா, இவ்வளவு
சீக்கிரமாகவா? எனக்கு பல எதிர்காலத் திட்டங்களும்,கடமைகளும் உள்ளன
அதை முடித்து விட்டு வருகிறேன்,..’ என்றான்.
‘இல்லை இதுதான் உனது
நேரம். வா என்னுடன்.’ என்றார் கடவுள்.
கடவுளின் கையில்
கைப்பெட்டியை பார்த்து அவன் கேட்டான் ‘இதில் என்ன
இருக்கிறது?’
‘இதில் உனக்குரியது
இருக்கிறது ‘என்றார் கடவுள்.
என்னுடையது
என்றால் எனது சொத்துக்களா?,எனது உடைகளா? பணமா?,பொருட்களா? என கேள்விக்
கேட்டான் அவன்.
“அவையெல்லாம் உனதல்ல இந்த
பூமிக்குரியவை” என்றார் கடவுள்.
உடனே அவன் “என் நினைவுக்குரியதா?” என்றான்.
“நினைவுகள் எல்லாம் நேரத்துக்குரியது, உனதல்ல.”என்றார் கடவுள்.
“அப்போ என் திறமைகளா?” என கேட்டான் அவன்.
“திறமை என்றுமே
உன்னுடையது அல்ல, அவை சந்தர்ப்பங்களுக்கும், சூழ்நிலைக்கும் உரியது ” என்றார் கடவுள்.
தளராமல் தொடர்ந்த
மனிதன் “எனக்குரிய என் குடும்பமும் என் நண்பர்களும் தந்தவைகளா?” என கேட்டான்.
”மன்னிக்கவும் உன் குடும்பமும்,உன்
நண்பர்களும் உனது வாழ்வின் பாதையில் வந்தவர்கள். உனக்குரியவர்கள்
அல்ல. “என்றார் கடவுள்.
“அப்போ எனது மனைவியும்
மக்களுமா?” என்றான் அவன்.
“அவர்கள் உன்னுடையவர்கள்
அல்ல, உனது அன்பிற்கு உரியவர்கள்’’
கடவுள் என்றார்.
“எனது உடலா? ” என்றான்
அவன்.
“உடல் தூசிக்குரியது” என்றார் கடவுள்.
“எனது உயிரா?” என்றான் அவன்.
“இல்லை அது
எனக்குரியது” என்றார் கடவுள்.
மேலும் “இந்தா கைப்பெட்டி இதில் உனக்குரியது உள்ளது. எடுத்துக்கொள்” என்றார்.
மனிதன் பயந்தவாறே அந்த
கைப்பெட்டியை திறந்து பார்த்தான். அது காலியாக இருந்தது. கன்னம் வரை வழிந்து வந்த கண்ணீருடன், “எனக்கென்று ஒன்றுமே
கிடையாதா? எனக் கேட்டான் கடவுளிடம்.
கடவுள் அமைதியுடன், “ஏன் இல்லை? இந்த வாழ்க்கை
உன்னுடையது, இதில் ஒவ்வொரு வினாடியும்
உன்னுடையது, உன்னை சுற்றி நடக்கும் நிகழுவுகள் ஒவ்வொன்றும் உன்னுடையது. இதில்
எதையும் உன்னால் இயக்கவோ,நிறுத்தவோ முடியாது.
இதை நீ அனுபவிக்க மட்டுமே முடியும். அதனால் உனக்கான நேரம் வரை வாழ்க்கையை வாழு, மகிழ்ச்சியுடன் வாழு. மறந்து விடாதே,
இங்கே உள்ள மண்ணும்,வீடும்,பணமும், உடைகளும், நீ பூமியில் வாழத் தேவையானது மட்டுமே. எதையும் உனக்குரியதாக
எடுத்துக் கொள்ள முடியாது.” என்றார்.
மனிதன் கண்ணீரைத்
துடைத்துக் கொண்டு கடவுளை பின் தொடர்ந்தான்.
திரு.T.ராதாகிருஷ்ணன் (tradhakrish123@yahoo.com) எனக்கு அனுப்பிய இ-மெயிலின் தமிழாக்கம் இது. |
6 கருத்துரைகள்:
தங்களின் தமிழாக்கம் அருமை.
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையின் யதார்த்தத்தினையும் பிரதிபலிக்கும் இந்தப்பகிர்வுக்கு என் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள் + நன்றிகள்.
>>>>>
//இந்த வாழ்க்கை உன்னுடையது, இதில் ஒவ்வொரு வினாடியும் உன்னுடையது, உன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் உன்னுடையது. இதில் எதையும் உன்னால் இயக்கவோ,நிறுத்தவோ முடியாது. இதை நீ அனுபவிக்க மட்டுமே முடியும். அதனால் உனக்கான நேரம் வரை வாழ்க்கையை வாழு, மகிழ்ச்சியுடன் வாழு. மறந்து விடாதே, இங்கே உள்ள மண்ணும்,வீடும்,பணமும், உடைகளும், நீ பூமியில் வாழத் தேவையானது மட்டுமே. எதையும் உனக்குரியதாக எடுத்துக் கொள்ள முடியாது.”//
அருமை .... உண்மையும் கூட. :) இதை அனைவரும் நன்கு புரிந்துகொண்டு அன்புடன் வாழ்ந்தால் நல்லது.
நன்றி வை.கோபாலகிருஷ்ணன் சார் உங்கள் கருத்துரைக்கும் வருகைக்கும் .
வாழ்க்கைத் தத்துவத்தின் அருமையான விளக்கம். இந்தக் கருத்துகளை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து நடந்தால் இந்த உலகமே சொர்க்கமாகி விடும்.
திரு .பழனி கந்தசாமி அவர்களின் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
Great.
Post a Comment